Thursday, 30 August 2012

TN FORMS | 7.BT ALL FORMS RE,SEL,SPL,PROB.PDF

TN FORMS | 7. BT ALL FORMS RE,SEL,SPL,PROB.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 8.BT PG ALL FORMS.PDF

TN FORMS | 8. BT PG ALL FORMS.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 1.3 CERTIFICATE FORM - COMMUNITY CERTIFICATE FORM ,INCOME CERTIFICATE FORM ,NATIVITY CERTIFICATE FORM . PDF

TN FORMS | 1.3 CERTIFICATE FORM - COMMUNITY CERTIFICATE FORM ,INCOME CERTIFICATE FORM ,NATIVITY CERTIFICATE FORM . PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TAMIL G.K 1021-1040 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TAMIL G.K 1021-1040 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1021.இந்திய வரலாறு | சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1907)        


1022.இந்திய வரலாறு | தென்னிந்திய நல உரிமை சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1916)        


1023.இந்திய வரலாறு | இந்து சமய அறநிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1921)        


1024.இந்திய வரலாறு | சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்ட பூர்வமாக ஏற்றுக்கொண்ட சட்டம்

       Answer | Move the mouse over answer | Hover over me         (1909)        


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TAMIL G.K 1001-1020 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TAMIL G.K 1001-1020 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1001.இந்திய வரலாறு | ஹைதர் அலி மறைந்த ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1782)        


1002.இந்திய வரலாறு | பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         (1784)        


1003.இந்திய வரலாறு | பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         ( 1757)        


1004.இந்திய வரலாறு | பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (1786)        


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TAMIL G.K 41-60 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழ் இலக்கியம்


41. எழிலோவியம் எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        


42. பிரெஞ்சு கையகர முதலி எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         வாணிதாசன்        


43. கவிஞர் திலகம் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         சுரதா.        


44. தேன்மழை எழுதியவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         சுரதா        


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 26 August 2012

அக்., 3ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில் சமரசம் கிடையாது. ஏற்கனவே இருந்த அதே தரம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறியுள்ளார்.


ஜூலை 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய, 6.72 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 25 ஆயிரம் பேரை தேர்வு செய்ய நடத்திய தேர்வில், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், அக்., 3ம் தேதி, மீண்டும் ஒரு தேர்வை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேரம் வழங்கவில்லை என, எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்டோபரில் நடக்கும் தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் எனவும் டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ஜூலை 12ம் தேதி, டி.ஆர்.பி., நடத்திய முதல் தகுதித் தேர்வில், 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 204 பேர் பங்கேற்றனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டுமே கடினமாக இருந்ததாகவும்; போதிய அளவிற்கு நேரம் வழங்கவில்லை எனவும், தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.அதற்கு தகுந்தாற்போல், நேற்று வெளியான தேர்வு முடிவும் அமைந்தது. தேர்வு எழுதிய 6.72 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 0.36.
தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி வெளியிட்டார்.அப்போது, நிருபர்களிடம் அவர்கூறியதாவது:
முதல் தாள் தேர்வில், 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பத்திலும், விடைத்தாளிலும் கேட்கப்பட்ட அடிப்படை விவரங்களை சரிவரச் செய்யாத தேர்வர்களுக்கு, அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், இரு தேர்வர்களுக்கு, டி.ஆர்.பி., தேர்வில் பங்கேற்க, ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வில், 685 பேருக்கும்; இரண்டாம் தாள் தேர்வில், 1,547 பேருக்கும், அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, உரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இரு தேர்வர், தங்கள் அசல் விடைத்தாள் நகலை ஒப்படைக்காததால், அவர்களுடைய தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தேர்வில், குறைந்த தேர்ச்சி சதவீதம் ஏற்பட்டிருப்பது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தையும், தரமான கல்வித் தரத்தை ஏற்படுத்துவதையும் கருத்தில் கொண்டும், 60 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே தேர்ச்சி என்ற நிலையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு, அரசு அறிவுறுத்தியது.தரமான ஆசிரியரை பணியில் அமர்த்தினால் தான், தரமான கல்வியை வழங்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 60 சதவீத மதிப்பெண் பெறாத தேர்வருக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், மற்றொரு டி.இ.டி., தேர்வை உடனடியாக நடத்தவும், அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்., 3ம் தேதி, அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்.இதன் முடிவு, அக்., இறுதிக்குள் வெளியிடப்படும். ஏற்கனவே நடந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறாத தேர்வர் மட்டுமே, இந்தத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.இந்தத் தேர்வுக்காக, தனியாக விண்ணப்பிக்கவோ, தேர்வுக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. புதிய, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படும்; அதில் குறிப்பிடும் மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதினால் போதும்.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேர அவகாசம் வழங்கவில்லை என, கடும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அக்., 3ல் நடக்கும்,முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தேர்வுக்கும், தலா 3 மணி நேரம் வழங்கப்படும்.கேள்வித்தாள் கடினமாக இருந்தது என, அனைவரும் கூறினர். ஆனால், இந்தத் தேர்விலும், இத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது?கேள்வித்தாள் அமைப்பை புரிந்து, தேர்வுக்கு முழுவதுமாக தயாரானால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். அடுத்து நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில், எவ்வித மாற்றமும் இருக்காது. ஏற்கனவே இருந்த அதே தரம், தொடர்ந்து கடைபிடிக்கப்படும். கேள்வித்தாள் தரத்தில், சமரசம் கிடையாது.இதுவரை, 13 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதி செய்யப்பட்டுள்ளது. அக்., இறுதிக்குள், மேலும், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி முடிவடையும்.இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை: அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது. எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும் தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தேர்வு நேரமும் அதிகரிக்கப்படுகிறது.



ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், சுமார் 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை) மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி சென்னையில் சனிக்கிழமை அறிவித்தார். பெரும்பாலான தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இரண்டு தாள்களையும் சேர்த்து தேர்வு எழுதிய 6.76 லட்சம் பேரில் 2,448 பேர் மட்டுமே (0.40%) தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களில் 14 மாற்றுத் திறனாளிகளும், 2 பார்வைத் திறன் குறைந்தவர்களும் அடங்குவர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 5,451 இடைநிலை ஆசிரியர்களும், தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 18,922 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலே ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு இவர்கள் அனைவரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. மீதமுள்ள 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும், தேர்வில் வெற்றிபெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் மறுதேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தாளிலும் எவ்வளவு பேர் தேர்ச்சி? தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த ஜூலை 12-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. 6.76 லட்சம் பேர் தேர்வு எழுதினர். முதல் தாளை எழுதிய 2 லட்சத்து 83 ஆயிரத்து 806 பேரில் 1,735 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 0.61%. இரண்டாம் தாளை எழுதிய 3 லட்சத்து 83 ஆயிரத்து 616 பேரில் 713 மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 0.19%. முதல் தாள், இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தாள்களையும் எழுதிய 57 ஆயிரம் பேரில் 83 பேர் மட்டுமே இரண்டு தாள்களிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சியடைந்தவர்களில் 1680 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள். முதலிடங்களைப் பிடித்த பெண்கள்: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் பொள்ளாச்சியைச் சேர்ந்த எம்.திவ்யா 150-க்கு 122 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சமூக அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்தவர்களில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஆர்.அருள்வாணி 150-க்கு 125 மதிப்பெண்ணும், கணிதப் பாடத்தில் தேர்வு எழுதியவர்களில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பி.சித்ரா என்பவர் 150-க்கு 142 மதிப்பெண்ணும் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை: ""வரும் அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது. எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும்'' என்று சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றது அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதால், இந்தத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணை எடுக்காதவர்களுக்கு (150-க்கு 90 மதிப்பெண்) மறுதேர்வு நடத்த அரசு உத்தரவிட்டது. அதேபோல், தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தேர்வு நேரமும் அதிகரிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக மறு தேர்வு நடத்தப்படும். அன்றைய தினம் ஆசிரியர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கும் வகையில் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும். இந்தத் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும். தேர்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவில் தேர்வர்களுக்கு அனுப்பப்படும். 13 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு: இப்போதுவரை 13 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் அக்டோபர் மாதத்துக்குள் 26 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளும் முடிவடையும் என்றார் அவர்.

முதல் தாள் தேர்வு எழுதியோர் :2,83,806 தேர்ச்சி: 1,735
 இரண்டாம் தாள் தேர்வு எழுதியோர் :3,83,616 தேர்ச்சி: 713
 இரண்டு தாள்களையும் எழுதியோர் : 57,000 தேர்ச்சி: 83
 தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 6,76,763
 தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 2,448
 விடைத்தாளில் தவறுகளால் மதிப்பெண்ணை இழந்தவர்கள் 2,182

ஆண்டுக்கு இருமுறை தேர்வு
 சிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் ஒரு தேர்வும், டிசம்பரில் மற்றொரு தேர்வும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போதுள்ள அரசாணையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் உள்ளதுபோல் விரைவில் இந்த அரசாணை ஆண்டுக்கு இருமுறை நடத்தும் வகையில் திருத்தப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், ஒரு குறிப்பிட்ட தேதியில் இந்தத் தேர்வை நடத்தும் யோசனையும் தேர்வு வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 1.50 லட்சம் பேர் தங்களது விண்ணப்பங்களில் பல்வேறு தவறுகளைச் செய்திருந்தனர். அவர்களுக்கு தவறுகளைத் திருத்த பல்வேறு வாய்ப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியது. இந்த நிலையில், தேர்வு நாளன்றும் தவறுகளைச் செய்தவர்களுக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு இரண்டு தாள்களிலும் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் வினாத்தாள் புத்தக எண்ணைக் குறிப்பிடாதவர்களுக்கு 5 மதிப்பெண்ணும், தேர்வு எழுதும் பாடத்தைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளவர்களுக்கு 3 மதிப்பெண்ணும், சரியான மொழிப்பாடத்தைக் குறிப்பிடாதவர்களுக்கு 2 மதிப்பெண் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறுகளால் முதல் தாளில் 685 பேருக்கும், இரண்டாம் தாளில் 1,497 பேருக்கும் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளை எடுத்துச் சென்ற தேர்வர்கள் தகுதியிழந்தவர்களாகக் கருதப்பட்டனர். அதேபோல், வேறு தேர்வு எண்ணை எழுதியவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை. சில தேர்வர்களின் கையொப்பங்கள் விண்ணப்பம், விடைத்தாளில் வெவ்வேறாக இருந்தன. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB