Friday, 30 November 2012

TN FORMS | 20. CCE-CALCULATOR-ERROR-RECTIFIED-FILE.XLS

TN FORMS | 20. CCE-CALCULATOR-ERROR-RECTIFIED-FILE.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 25 November 2012

TN FORMS | 21. CCE-HIGH-SCL-VER-8-0.XLS

TN FORMS | 21. CCE-HIGH-SCL-VER-8-0.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 22. CCE-TAM-VER 7.0-FINAL.ZIP

TN FORMS | 22. CCE-TAM-VER 7.0-FINAL.ZIP
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 23. CENSUS E-REGISTER @ MSK FREE EDUSOFT VERSION 1.0.XLS

TN FORMS | 23. CENSUS E-REGISTER @ MSK FREE EDUSOFT VERSION 1.0.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 24. CENSUS E-REGISTER @ MSK FREE EDUSOFT.XLS

TN FORMS | 24. CENSUS E-REGISTER @ MSK FREE EDUSOFT.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 24 November 2012

TN FORMS | 25. CEO INSPECTION ADDNL PARTICULARS.DOC

TN FORMS | 25. CEO INSPECTION ADDNL PARTICULARS.DOC
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 45. DECLARATION-TAMIL-SSLC.PDF

TN FORMS | 45. DECLARATION-TAMIL-SSLC.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்

"அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.இது குறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது:டி.இ.டி., தேர்வு வழியாக, தற்போது, 25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிடங்கள் என, ஆண்டுதோறும், புதிய ஆசிரியர் நியமன எண்ணிக்கை, கணிசமாகவே இருக்கும்.பட்டதாரி ஆசிரியரில், தமிழ், வரலாறு, அறிவியல் பாடங்களில் படித்தவர்கள், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர்.

ஆனால், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு, தேவை அதிகமாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மட்டும், 15 ஆயிரத்திற்கும் அதிகமாக தேவைப்படுவர்.எனவே, பி.ஏ., - பி.எட்., ஆங்கிலம் படிப்பவர்கள், எளிதாக, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், உடனடியாக வேலை வாய்ப்பையும் பெற முடியும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

கணக்கு பட்டதாரிகள் தேவை பற்றிய புள்ளிவிவரம் தரப்படவில்லை. ஆனால், முதுகலை கணக்கு பட்டதாரிகள் ஆசிரியர்கள் தேவையும் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ஆசிரியர் வரை, புதிதாக நியமிக்கப்படுகின்றனர். வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 44. DECLARATION-TAMIL-HSC.PDF

TN FORMS | 44. DECLARATION-TAMIL-HSC.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 23 November 2012

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தொழிலாளர் அதிகாரி தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் 5 தொழிலாளர் அதிகாரி (உதவி கமிஷனர் அந்தஸ்து) காலி பணி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. கடந்த 10–ந் தேதி ஒரு போட்டித்தேர்வை நடத்தியது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய 6 மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள்.

இந்த நிலையில், தொழிலாளர் அதிகாரி தேர்வுக்கான விடைகளை (கீ ஆன்சர்) டி.என்.பி.எஸ்.சி. தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. சமூக அறிவியல், தொழிலாளர் சட்டம் ஆகிய பாடப்பிரிவுகளில் கேட்கப்பட்டு இருந்த 200 வினாக்களுக்கும் விடைகளை தெரிந்து கொள்ளலாம். கீ ஆன்சர்–ஐ பார்ப்பதன் மூலம், தேர்வர்கள் தங்களுக்கு எத்தனை மதிப்பெண் கிடைக்கும்? என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

எழுத்துத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 300 ஆகும். தேர்வு முடிவை இந்த மாத இறுதிக்குள் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அதற்கு 40 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு, எழுத்துத்தேர்வு–நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10 லட்சம் பேர் எழுதியுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவிப்பு

பத்து லட்சம் பேர் எழுதியுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் கூறினார்.
 
டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வில் நேர்காணல் அல்லாத பதவிகளில் உள்ள 3,220 காலி இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை ஒதுக்கீட்டு கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. இந்த கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள 4,838 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முதல் நாள் கவுன்சிலிங்கில், மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ரேங்க் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் துறை ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார். இந்த கவுன்சிலிங் டிசம்பர் 1–ந் தேதி வரை வேலை நாட்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. முன்னதாக கவுன்சிலிங் பணிகளை பார்வையிட்ட நட்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 1,870 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை ஏறத்தாழ 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர். வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும். அதேபோல், கடந்த 4–ந்தேதி நடந்து முடிந்த குரூப்–2 தேர்வு முடிவை அடுத்த மாதம் (டிசம்பர்) 2–வது வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
ஜனவரியில் தேர்வு அட்டவணை

ஓராண்டில் என்னென்ன போட்டித்தேர்வுகள் வெளியிடப்படும்? என்று முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடும் முறையை டி.என்.பி.எஸ்.சி. இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தியது. அதன்படி போட்டித்தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 2013–ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜிடம் கேட்டபோது, ‘‘அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக துறை வாரியாக காலி இட விவரங்களை கேட்டுப்பெற்று வருகிறோம். தேர்வு அட்டவணையை ஜனவரி மாதத்தில் வெளியிட்டு விடுவோம்’’ என்றார்.

குருப்–1 பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத்தேர்வு டிசம்பர் மாதம் 30–ந்தேதி நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. ஆனால், அதே தேதியில் யு.ஜி.சி. நெட் தேர்வும் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தேர்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி. மாற்றியமைப்பது வழக்கம். இதுகுறித்து நட்ராஜிடம் கேட்டபோது, ‘‘ குரூப்–1 முதல்நிலைத்தேர்வு தேதியை மாற்றுவது குறித்து பரிசீலிப்போம்’’ என்று கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் ரோசய்யா நாளை வழங்குகிறார்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கல்வி மற்றும் மருத்துவப்பணியில் சிறந்து விளங்குவோரை தேர்வுசெய்து ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த டாக்டர் விருது, சிறந்த ஆசிரியர் விருது ஆகிய விருதுகளை வழங்கி வருகிறது. உயர்கல்வியில் இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு நிறைவு விழாவில் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதனுக்கு கவர்னர் கே.ரோசய்யா வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்கிறார். சிறந்த டாக்டர் விருது, சிறந்த ஆசிரியர் விருது ஆகியவையும் வழங்கப்படுகின்றன. விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், துறையின் செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 43. DECLARATION-ENGLISH-SSLC.PDF

TN FORMS | 43. DECLARATION-ENGLISH-SSLC.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பெரியார் பல்கலையில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள்களை வைத்திருக்கும் மாணவ, மாணவியருக்கு, மீண்டும் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத, தற்போது வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.



பெரியார் பல்கலையில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள்களை வைத்திருக்கும் மாணவ, மாணவியருக்கு, மீண்டும் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத, தற்போது வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. பெரியார் பல்கலை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பெரியார் பல்கலை இணைவு பெற்ற கல்லூரி களில், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்து, வெளிச்சென்ற மாணவர்கள், தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள்களை, ஐந்தாண்டுகள் படிப்புக் காலத்துக்குள் முடிக்க வேண்டியது வழக்கம்.
இவ்வாறு, படிப்பு ஆண்டு, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கும், அதற்கு முந்தைய ஆண்டில் பயின்று தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள் வைத்திருக்கும் மாணவர்களுக்கும், தற்போது இறுதியாகப் படித்த பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 14ம் தேதிக்குள், பெரியார் பல்கலைக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை தாங்கள் பயின்ற கல்லூரியிலேயே பெற்று, பூர்த்தி செய்து, முதல்வர் வாயிலாக அனுப்ப வேண்டும். இதற்கான கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

"ஸ்லெட்' தேர்வு முடிவு எப்போது?

கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு, விரைவில் அறிவிக்கப்படவுள்ளதால், "ஸ்லெட்' தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், கல்லூரிகளில் பேராசிரியர் பணியில் சேர, மாநில அளவிலான தகுதித்தேர்வு (ஸ்லெட்) அல்லது தேசிய அளவிலான தகுதித்தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற வேண்டும் என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) விதிமுறை வகுத்துள்ளது. அதன்படி, மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் மூலம் தகுதித்தேர்வு நடத்தி வருகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான, "ஸ்லெட்' தேர்வு, கோவை பாரதியார் பல்கலை மூலம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும், 62 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 76 மையங்களில், அக்., 7ம் தேதி தேர்வு நடந்தது; 51 ஆயிரத்து 500 பேர் பங்கேற்று, 27 பாடப்பிரிவுகளில் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு, ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியிடப்படவில்லை. கல்லூரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள நிலையில், "ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பத்தை பெற முடியும். எனவே, "ஸ்லெட்' தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும் என, தேர்வெழுதியோர் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்வு அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்கலை மாணவர் சேர்க்கை, தேர்வு போன்ற வழக்கமான பணிகளுக்கு இடையே, "ஸ்லெட்' தேர்வு விடைத்தாள் திருத்த வேண்டியுள்ளதே, தாமதத்துக்கு காரணம். கம்ப்யூட்டர் பிரிவில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விரைவில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்' என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 22 November 2012

TN FORMS | 42. DECLARATION-ENGLISH-HSC.PDF

TN FORMS | 42. DECLARATION-ENGLISH-HSC.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 21 November 2012

TN FORMS | 41. CRC ATTENDANCE CERTIFICATE.PDF

TN FORMS | 41. CRC ATTENDANCE CERTIFICATE.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தகுதிதான் அடிப்படை! தினமணி தலையங்கம் 19.11.12

ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக இல்லை.

வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை "தகுதித் தேர்வு' என்று அழைக்கிறார்கள்.

இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது.

மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?

அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.

இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.

இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.

தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.

மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.

காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?

ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர் நலன் கெடாமல் பாதுகாப்போம்: அண்ணாமலை பல்கலை பதிவாளர் உறுதி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்றைக்கும் மாணவர் நலனில் அக்கறை காட்டி வருகிறது. கூடிய விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டு, மாணவர்கள் நலன் கெடாமல் பாதுகாப்போம் என்று உறுதி அளிக்கிறோம் என பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது: கடந்த நவ.7-ம் தேதி பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட நிதிசிக்கலை பற்றி துணைவேந்தர், அனைத்து ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார். 6-வது ஊதியக்கமிஷன் பரிந்துரைப்படியும், ஒரு நபர் குழு பரிந்துரைப்படியும் மற்றும் 32 மாதங்களுக்கு உள்ள நிலுவைத் தொகையும் 2009லிருந்து மூன்று வருடங்களில் அளிக்கப்பட்டுள்ளது. 2009ல் இருந்து ஒவ்வொரு ஆசிரிய, ஊழியரின் சம்பளமும் 35 விழுக்காடு உயர்ந்துள்ளது. மேலும் 2009ல் அளித்து வந்த 23 விழுக்காடு அகவிலைப்படி தற்போது 72 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 2009க்கும் பிறக ஒய்வு பெறுபவர்களுக்கு புதிய விகிதத்தில் கிராஜூட்டி, கம்யூட்டேஷன், என்கேஸ்மெண்ட் ஆஃப் யேர்ன் லீவ் அளிக்கும் போது, அது முன்பை விட 3.5 மடங்கு அதிகமாகி விட்டது.

அதுவுமல்லாமல் 2006 லிருந்து 2009-க்குள் ஓய்வு பெற்றவர்களுக்கும் விடுபட்ட நிலுவைத்தொகை ஏறத்தாழ 3 மடங்கு சுமார் 151 நபர்களுக்கு கொடுக்க வேண்டியதாயிற்று, ஓய்வூதியமும் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் சம்பளச் செலவினங்களை அளவிட முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டது. அதே சமயத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தும், கல்வி மற்றும் மற்ற கட்டணங்களை உயர்த்திய போது செலவினங்கள் உயர்ந்த அளவிற்கு அவை உயரவில்லை. இந்த நிலைமையை சீர் செய்வதற்கு சிறுது காலத்திற்கு தற்காலிக சம்பள குறைப்பும், விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆட்குறைப்பும் செய்யலாமா? என்று ஆலோசனை கேட்டதற்கு, ஆட்குறைப்போ, சம்பள குறைப்போ ஒத்துக்கொள்ள முடியாது என கூறிவிட்டனர். எனவே அவர்களது கருத்துகளை இன்று நடைபெறும் ஆட்சி மன்றக்கூட்டத்தில் வைத்து முடிவு எடுக்கப்படும் என துணைவேந்தரால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஆட்குறைப்போ, ஊதியக்குறைப்போ இல்லை என எழுத்து மூலம் நவ.,14க்குள் உத்தரவாதம் அளிக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆட்குறைப்பு இருக்காது என்று துணைவேந்தரே உத்தரவாதம் அளித்தும், சம்பளம் பற்றி ஆட்சிமன்ற குழுவில் தான் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பருவகால வகுப்புகள் முடிந்து, தீபாவளி விடுமுறைக்கு சென்றுள்ள மாணவர்கள் தேர்விற்கு வரும் போது (சிலருக்கு study holidays, சிலருக்கு செய்முறை தேர்வு, நவ.,19லிருந்து எழுத்து தேர்வு)அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடாது எனக்கருதி அவர்களுடைய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களுடைய வகுப்புகள் எதுவும் பாதிக்கப்பட்வில்லை.

மேலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற பருவகால விடுமுறை எல்லா வருடமும் போல நவ.,14 லிருந்து நவ.,13ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போராட்டம் அறிவிக்கப்படவில்லை என்றால் கூட அவர்கள் பருவகால விடுமுறையில் சென்று இருப்பார்கள் என பதிவாளர் ஆர்.மீனாட்சி்சுந்தரம் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 40. CPS SUBSCRIBER REGISTRATION FORM NEW.PDF

TN FORMS | 40. CPS SUBSCRIBER REGISTRATION FORM NEW.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 2. AGE CERTIFICATE.PDF

TN FORMS | 2. AGE CERTIFICATE.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப்-2 தேர்வு நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கவுன்சிலிங் வியாழக்கிழமை தொடங்குகிறது

குரூப்-2 தேர்வில் நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான பணி ஒதுக்கீட்டு கவுன்சிலிங் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதற்கு அழைக்கப்பட்டோரின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் எம்.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குருப்-2 தேர்வில் நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவுஎண்கள் அடங்கிய பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.tஸீஜீsநீ.ரீஷீஸ்.வீஸீ) வெளியிடப்பட்டு இருக்கிறது.கவுன்சிலிங் நாளை (22&ந் தேதி) தொடங்கி டிசம்பர் மாதம் 1-ந் தேதி வரை (நவம்பர் 24, 25 நீங்கலாக) நடைபெறும். கவுன்சிலிங் நடைபெறும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3,220 காலி பணி இடங்களை நிரப்பும் பொருட்டு 4,838 விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த கவுன்சிலிங் மூலம் 3,220 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்ட அனைவரும் மேற்படி பணி இடங்களுக்கு தெரிவுபெறுவதற்கான எவ்வித உரிமையையும் கோர இயலாது.கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னை பாரிமுனை பிரேசர் பால சாலையில் (அரசு பல் மருத்துவக்கல்லூரி அருகில்) அமைந்துள்ள டி.என்.பி.எஸ்.சி. புதிய அலுவலகத்தில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு வருகைதர தவறும் பட்சத்தில் பின்னர் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படாது. அதோடு அவர்கள் தங்கள் தரவரிசை முன்னுரிமையையும் இழக்க நேரிடும்.இவ்வாறு விஜயகுமார் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 20 November 2012

2 முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம்: 7 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அரசு உத்தரவு

தமிழகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் 7 பேருக்கு முதன்மை கல்வி அதிகாரி பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

திருவள்ளூர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி கே.தனபாலன் பதவி உயர்வு பெற்று, சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி மாவட்ட கல்வி அதிகாரி பி.முருகன், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (அனைவருக்கும் கல்வி திட்டம்) பணிஅமர்த்தப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் மாவட்ட கல்வி அதிகாரி சி.சண்முகம் பதவி உயர்வுபெற்று, ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (அனைவருக்கும் கல்வி திட்டம்) நியமிக்கப்படுகிறார். ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி பொ.அருண்பிரசாத், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமனம் செய்யப்படுகிறார்.

தேனி மாவட்டம் உசிலம்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி ஜே.சாந்தமூர்த்தி, கரூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (அனைவருக்கும் கல்வி திட்டம்) ஆகிறார். திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்ட கல்வி அதிகாரி வி.விஜயன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக (அனைவருக்கும் கல்வி திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ஆர்.மகாலிங்கம் பதவி உயர்வு பெற்று, வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.

திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (அனைவருக்கும் கல்வி திட்டம்) பி.சுகுமார் தேவதாஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, அதே மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (அனைவருக்கும் கல்வி திட்டம்) ஆர்.சிவகாமசுந்தரி மாற்றப்பட்டு, அதே மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரியாக பணிஅமர்த்தப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 19 November 2012

அரசு தொழிற்கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட், நவம்பர் 20 முதல் வழங்கப்படுகிறது.

அரசு தேர்வு துறையால், ஓவியம், தையற்கலை, நடனம் மற்றும் இசை பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடனம், 21ம் தேதியும், ஓவியம், 22ம் தேதி முதல், டிச., 5ம் தேதி வரையும், தையற்கலை, டிச., 6ம் தேதி முதல், 12ம் தேதி வரையும், இந்திய இசை கீழ்நிலை, மேல் நிலை, டிச., 7ம் தேதியும் நடக்கின்றன.இத்தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டை, நாளை முதல், அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ள தேர்வு மையங்களில் பெற்றுகொள்ளலாம். தேர்வு மையங்கள் விவரம் அனைத்து முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் அரசு தேர்வுகள் மண்டல அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 11 November 2012

தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வருடந்தோறும மாணவ, மாணவியரின் நலன்களுக்கு தமிழக அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.63.94 கோடி செலவாகும். மேலும் 4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 9 November 2012

TN FORMS | 3. ANNUAL INSPECTION REPORT.DOC

TN FORMS | 3. ANNUAL INSPECTION REPORT.DOC
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 4. ASST PANEL FORMAT.DOC

TN FORMS | 4. ASST PANEL FORMAT.DOC
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவருக்கு வாய்ப்பு

டி.இ.டி., முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேரில், பலர், கடும் மழை காரணமாக, கடந்த மாதம், 31ம் தேதி நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை அணுகி, உரிய சான்றிதழ்களை அளிக்கலாம் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மாவட்ட தலைமை இடங்களில், கடந்த மாதம், 31ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. கடும் மழை காரணமாக, நீண்ட தொலைவில் இருந்ததேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை.

இவர்களுக்கு, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பது குறித்து, எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்கள், நேரடியாக, டி.ஆர்.பி., அலுவலகத்தை அணுகி, உரிய சான்றிதழ்களை அளிக்கலாம். அவர்களுக்கு, எவ்வித பிரச்னையும் இல்லை' என, தெரிவித்துள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப் - 1 காலி பணியிடம் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் அடங்கிய, 3,475 பதவிகளை நிரப்ப, அக்டோபர், 15 முதல், 20 வரை, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு நடந்தது. இதில், 2,811 தேர்வர் மட்டுமே, வெவ்வேறு பதவிகளுக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.மீதமுள்ள, 664 பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், அந்த காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், மீண்டும் கலந்தாய்வு நடக்கிறது.

இதற்கு, 1,267 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் விவரங்கள் மற்றும் இவர்களுக்கான அழைப்பு கடிதங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளன.இவர்களில், 664 பேர் மட்டுமே, காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர். அழைக்கப்படும் அனைவருக்கும், வேலை கேட்கும் உரிமை கிடையாது. இதில் பங்கேற்க தவறுபவர்கள், பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையை இழப்பர். மேலும், மேலும் ஒரு கலந்தாய்வு வாய்ப்பு வழங்கப்படாது.இவ்வாறு செயலர் அறிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 8 November 2012

3 லட்சத்து 73 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் போக்குவரத்து, மின்வாரியம், டாஸ்மாக் உள்ளிட்ட ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு



தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழைப்பே உயர்வு என்ற முதுமொழிக்கேற்ப, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்தாக அமைபவர்கள் தொழிலாள பெருமக்கள் ஆவர். தொழிலாளர்களின் உண்மையான முன்னேற்றமே நாட்டின் முழுமையான வளர்ச்சி ஆகும். உற்பத்தியை பெருக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்காற்றுகிறது.அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் அவர்களுக்கு உற்சாகத்தினை ஏற்படுத்தும் வகையிலும் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மின்சாரத்துறை

மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறைகளில் பெரும் நிதிச்சுமை உள்ள நிலையிலும், மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்து துறை தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வரும் பண்டிகை நாட்களை மனநிறைவுடன் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அவர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில் 2011-12-ம் நிதி ஆண்டிற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை சார்ந்த 74,950 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை, ஆக மொத்தம் 20 சதவீதமும், மேலும் 9,350 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.1,500 கருணைத்தொகையும் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதனால் அக்கழகத்திற்கு ரூ.64 கோடியே 35 லட்சம் செலவினம் ஏற்படும். இதன்மூலம் 84,300 தொழிலாளர் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர்.

அரசு போக்குவரத்து கழகம்

அதேபோன்று 2011-12-ம் நிதி ஆண்டிற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களை சார்ந்த 1,27,102 தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை ஆக மொத்தம் 20 சதவீதமும், மேலும் 11,452 பதிலி பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.100 கோடியே 32 லட்சம் செலவு ஏற்படும். இதன்மூலம் போக்குவரத்து கழகங்களை சேர்ந்த மொத்தம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 554 தொழிலாளர் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர்.

தேயிலை தோட்டக்கழகம்

மேலும், தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம், அரசு ரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக்கழகத்தை சார்ந்த பணியாளர்களுக்கும் போனஸ் வழங்கிட முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.அதன்படி, தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ், 1.67 சதவீத கருணைத்தொகை மற்றும் 10 சதவீத கூடுதல் கருணைத்தொகை, ஆக மொத்தம் 20 சதவீதம் வழங்கப்படும். இதனால் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகத்திற்கு ரூ.5 கோடியே 69 லட்சம் செலவு ஏற்படும். இதன் மூலம் 8,686 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர்.

அரசு ரப்பர் கழகம்

அதேபோன்று, அரசு ரப்பர் கழகத்தை சார்ந்த பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும். இதனால் அரசு ரப்பர் கழகத்திற்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரம் செலவு ஏற்படும். இதன் மூலம் அரசு ரப்பர் கழகத்தை சார்ந்த 2,270 பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பயன்பெறுவர்.மேலும், தமிழ்நாடு வனத்தோட்டக்கழகத்தை சார்ந்த பணியாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்திற்கு ரூ.35 லட்சத்து 20 ஆயிரம் செலவு ஏற்படும். இதன்மூலம் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தை சார்ந்த 419 பணியாளர்கள் பயன்பெறுவர்.

தமிழ்நாடு பாடநூல் கழகம்

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை ஆக மொத்தம் 20 சதவீதம் வழங்கிட முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.6 லட்சத்து 63 ஆயிரம் செலவு ஏற்படும். இதன்மூலம் 79 பணியாளர்கள் பயன்பெறுவர்.தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கும் 2011-12-ம் ஆண்டிற்கான 20 சதவீத போனஸ் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ரூ.9 லட்சத்து 43 ஆயிரம் செலவு ஏற்படும். இதன்மூலம் 121 பணியாளர்கள் பயன்பெறுவர்.

கூட்டுறவு-பொதுத்துறை சர்க்கரை ஆலைகள்

மேலும், தமிழ்நாட்டில் தற்போது இயங்கி வரும் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை சார்ந்த பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ், 1.67 சதவீத கருணைத்தொகை மற்றும் 10 சதவீத சிறப்பு கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீத போனஸ் வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதற்காக ரூ.5 கோடியே 50 லட்சம் செலவு ஏற்படும். இதன்மூலம் இந்த சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 8,029 பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு...

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் (டாஸ்மாக்) பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ், 1.67 சதவீத கருணைத்தொகை மற்றும் 10 சதவீத கூடுதல் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீத போனஸ் வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அக்கழகத்திற்கு ரூ.22 கோடியே 14 லட்சம் செலவு ஏற்படும். இதன்மூலம் அக்கழகத்தில் பணிபுரியும் 28,910 பணியாளர்கள் பயன்பெறுவர்.டாஸ்மாக்கில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனசும், 11.67 சதவீத கருணைத்தொகையும், நேரடி கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை அல்லது குறைந்தபட்ச கருணைத்தொகை ரூ.2,000 இதில் எது அதிகமோ அந்த தொகையும், சுமைதூக்கும் தொழிலாளர்கள் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு அட்டை என்று வித்தியாசம் ஏதும் இல்லாமல் 1.4.2011 முதல் 31.3.2012 வரையிலான காலத்தில் 30 நாட்களுக்கு குறையாமல் பணியாற்றிய அட்டையில்லாத சுமைதூக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை, அல்லது குறைந்தபட்ச கருணைத்தொகை ரூ.1,500, இதில் எது அதிகமோ அந்த தொகை வழங்கப்படும்.

நாட் பணியாளர்கள்

நாட் பணியாளர்கள் பிரிவு-1 (கிடங்குகளில் பணிபுரியும் பணியாளர்கள்) நாட் பணியாளர்களுக்கு (குறைந்தபட்ச கூலி அடிப்படையில் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள்) 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகையும், பிரிவு-2 1.4.2011 முதல் 31.3.2012 வரை 30 நாட்களுக்கு குறையாமல் பணியாற்றிய பணியாளர்களுக்கு, 1.4.2011 முதல் 31.3.2012 வரை 30 நாட்களுக்கு குறையாமல் பணியாற்றிய நாட் பணியாளர்கள் மற்றும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு கருணைத்தொகை தலா ரூ.1,500-ம்,திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் பணிபுரியும் பருவகால சுமைதூக்கும் பணியாளர்களுக்கு கருணைத்தொகை ரூ.1,500 வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ரூ.15 கோடியே 12 லட்சத்து 2 ஆயிரம் செலவு ஏற்படும். இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் 41,271 பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

ஆவின் நிறுவனம்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனசாக 8.33 சதவீதம், கருணைத்தொகையாக 11.67 சதவீதம் சேர்த்து மொத்தம் 20 சதவீத போனஸ் தொகையாக வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் இணையம் மற்றும் ஒன்றியங்களுக்கு ரூ.4 கோடியே 72 லட்சம் செலவு ஏற்படும். இதன்மூலம் இவ்விணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 6,074 பணியாளர்கள் பயன் அடைவர்.

வீட்டுவசதி வாரியம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகையும் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு ரூ.50 லட்சத்து 69 ஆயிரம் செலவு ஏற்படும். இதனால் 1,207 பணியாளர்கள் பயனடைவார்கள். மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத்தொகை வழங்கப்படுகிறது. இதனால் அவ்வாரியத்திற்கு ரூ.1 கோடியே 30 லட்சம் செலவு ஏற்படும். இதன்மூலம் இவ்வாரியத்தில் பணிபுரியும் 3,089 பணியாளர்கள் பயன்பெறுவர்.

தொடக்க கூட்டுறவு சங்கங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கக்கூடிய உபரித்தொகை இல்லாத சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ், 1.67 சதவீத கருணைத்தொகை வழங்கிடவும் மற்றும் ஒதுக்கக்கூடிய உபரித்தொகை உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ், 1.67 சதவீத கருணைத்தொகை மற்றும் 10 சதவீத கூடுதல் கருணைத்தொகை வழங்கிடவும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு இணையங்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ரூ.1,500 கருணைத்தொகையாகவும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.1,200 கருணைத்தொகையாகவும் வழங்கப்படும். இதனால் ரூ.18 கோடியே 29 லட்சம் செலவு ஏற்படும். இதன்மூலம் அச்சங்கங்களில் பணிபுரியும் 46,230 பணியாளர்கள் பயன்பெறுவர்.

குடிநீர் வடிகால் வாரியம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது. இதனால் அவ்வாரியத்திற்கு ரூ.1 கோடியே 38 லட்சம் செலவு ஏற்படும். இதன்மூலம் இவ்வாரியத்தில் பணிபுரியும் 3,942 பணியாளர்கள் பயன்பெறுவர். மேலும் இந்த போனஸ் தொகையை உடனடியாக வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்களின் நலனில் என்றுமே மிகுந்த அக்கறை கொண்டு செயல்படும் இந்த அரசின் அறிவிப்பு, போக்குவரத்து, மின்சாரம், ஆவின், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மேற்கூறிய வாரியங்கள் மற்றும் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பண்டிகை நாட்களை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாட வழிவகுக்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், குரூப்-2 தேர்வு, "கீ-ஆன்சர்' வெளியிடப்பட்டது. தேர்வாணையம், சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 3,687 இடங்களை நிரப்ப, 4ம் தேதி, போட்டித் தேர்வை நடத்தியது. 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 3.8 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். 2.7 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்கவில்லை. தற்போதைய நிலவரப்படி, ஒரு பதவிக்கு, 103 பேர் போட்டி, என்ற நிலை உள்ளது.இந்நிலையில், தேர்வின் உத்தேச விடைகள் (கீ-ஆன்சர்), தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.tn.nic.in), நேற்று வெளியிடப்பட்டது. விடைகள் குறித்த ஆட்சேபணைகளை, 14ம் தேதிக்குள், தேர்வர்கள் தெரிவித்த பின், நிபுணர்களின் ஆய்வுக்குப் பின், இறுதி விடைகள் வெளியிடப்படும்.

Tentative Answer Keys

 Sl.No.
Post & Subject Name
(Posts included in Combined Subordinate Services Examinations - I
 (Date of Examination:04.11.2012 FN & AN)

1
2
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 14th November 2012 will receive no attention.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சூரிய சக்தி கொள்கைக்கு அனுமதி : அரசாணை வெளியீடு

தமிழக அரசின் சூரிய சக்தி மின் கொள்கைக்கு அனுமதி அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.சூரிய சக்தி மூலம், மின் உற்பத்தியை பெருக்க, இந்தாண்டு அக்டோபர் 20ம் தேதி, புதிய சூரிய தி கொள்கையை, தமிழக அரசு வெளியிட்டது. அதில், உயரழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நுகர்வோர், தங்கள் மொத்த பயன்பாட்டில், 6 சதவீதத்தை, சூரிய சக்தியில் உற்பத்தியாகும், மின்சாரத்தில் இருந்து பெறுவது கட்டாயம்; உற்பத்திக்கு ஊக்கத்தொகை உள்ளிட்டவை இடம்பெற்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அதே போல், மாநில அர”ம் மானியம் வழங்கும் என, பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், இதுவரை எவ்வித மானியத்தையும், தமிழக அரசு அறிவிக்கவில்லை. இந்நிலையில், சூரிய சக்தி கொள்கைக்கு அனுமதி அளிக்க, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை அரசிடம் கோரியது. இதையடுத்து, தீவிர ஆய்வுக்கு பின், சூரிய சக்தி மின் கொள்கைக்கு அரசு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேவை, தொலைநோக்கு பார்வை - -இன்று உலக நகர திட்டமிடல் தினம்

திட்டமிடாத எந்த செயலும், வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. நாம் ஒரு வீடு கட்டும் போது, என்னென்ன திட்டமிட்டு கட்டுகிறோம். அது போல, ஒரு நகரம் உருவாகும் போதே, எதிர்காலத்தை மனதில் வைத்து, திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவ., 8ம் தேதி, "உலக நகர திட்டமிடல் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. என்ன வேறுபாடு : திட்டமிட்ட நகரங்களுக்கும், திட்டமிடாத நகரங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், பஸ், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இது போன்ற நகரம் தான், திட்டமிட்ட நகரம் எனப்படுகிறது. அக்கறை இருக்கிறதா : ஏற்கனவே ஒரு நகரம், நன்றாக உருவாக்கப்பட்டிருந்தாலும், மக்கள் தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், சட்ட விதிகளை பின்பற்றாமை, வரைமுறையில்லாமல் கட்டடங்களை கட்டுவது, லஞ்சம் பெற்றுக்கொண்டு அதற்கு அனுமதியளிக்கும் அதிகாரிகள், ஆக்கிரமிப்பு போன்றவை, நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. மக்களும் நகர வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். திட்டமிட்ட தலைநகரங்கள் : கான்பெரா (ஆஸ்திரேலியா), வாஷிங்டன் (அமெரிக்கா), பிரேசில்லா (பிரேசில்), புதுடில்லி (இந்தியா), அபுஜா (நைஜீரியா), அஸ்டானா (கஜகஸ்தான்), இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) ஆகியவை உலகில் உள்ள தலைநகரங்களில், திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை. அப்படியா : உலகின் திட்டமிடப்பட்ட பெரிய நகரம் நவி மும்பை. இது 1972ம் ஆண்டு, மும்பை மாநகர் விரிவாக்கத் திட்டத்தின் படிஉருவாக்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்வி அறிவே வன்முறையை தீர்க்க மிகச்சிறந்த மருந்து : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு

""கல்வி அறிவே வன்முறைக்கு மிகச்சிறந்த மாற்று மருந்து,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூரில், மாணவர் விடுதி அடிக்கல் நாட்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தரின், 150வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: அமைதி, சகிப்புத் தன்மை மற்றும் மனிதாபிமானம் அதிகரிக்க, கல்வியே காரணமாக உள்ளது. இந்த சமுதாயத்தில் காணப்படும், வன்முறை, சகிப்புத் தன்மையின்மை, மக்களிடையே காணப்படும் பிரிவினை போன்றவற்றை தீர்க்க, மிகச்சிறந்த மாற்று மருந்து கல்வியே. கல்வி கற்பதன் மூலம், இந்தப் பிரச்னைகளை தீர்க்கலாம். எனவே, இளைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை, நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களையும், இந்த நாட்டையும் முன்னேற்ற வேண்டும். நம் நாட்டில், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிட்டத்தட்ட மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர், கிராமங்களில் வசிக்கின்றனர். என்ன தான், மருத்துவமனைகள், கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும், அங்கு சென்று பணியாற்ற மருத்துவர்கள் தயாராக இல்லை. இந்த சமுதாய நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாத வரை, இப்பிரச்னைக்கு விமோசனமே இல்லை. சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை, இளைஞர்கள் உள்வாங்கிக் கொண்டு அதை, இந்நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். நாம் முக்கியமானவராக இருப்பது நல்லதே, அதே நேரத்தில், நல்லவராக இருப்பது அதை விட நல்லது. இவ்வாறு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 7 November 2012

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2010-11-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 36 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு 15.11.2012 முற்பகல் 11.00 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு சேப்பாக்கம் சென்னை-5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும்.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2010-11-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 36 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு பணி நியமனம் கலந்தாய்வு. 2010-11-ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்திட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டு ஒதுக்கீடு பெறப்பட்டும், மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட பணி நாடுநர்களுக்கு எதிர்வரும் 15.11.2012 முற்பகல் 11.00 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு சேப்பாக்கம் சென்னை-5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும். மேற்கண்ட நாளில் அழைப்பாணை பெறப்பட்ட பணிநாடுநர்களை உரிய சான்றுகளுடன் தவறாது ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விழா முன் பணம் பெறுவதற்கான அரசாணை நம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 6 November 2012

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்த்துவதற்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்.


மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்த்துவதற்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்.
தலைமையாசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்:
# ஒவ்வொரு தலைமையாசிரியரும் தமது பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி சகவிகிதத்தை மாநிலச் சராசரித் தேர்ச்சி சதவிகிதத்தைவிட 5 விழுக்காடு உயர்த்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
# ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி சதவிகிதம் குறைவாகக் காட்டிய ஆசிரியர்களுக்கு வாரம் ஒருமுறை கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கித் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அந்த ஆசிரியர்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்களின் பாடத்தில் தேர்ச்சி சதவிகிதம் உயர்த்துவதற்குத் தலைமையாசிரியர் உறுதுணையாக இருக்கவேண்டும்.
# தோல்வி அடைந்த மாணவர்களுக்கான மாலைநேர வகுப்புகள் நடத்தும்பொழுது, அவர்களுக்குச் சிற்றுண்டி வழங்குவதற்குப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அப்பகுதியில் உள்ள கொடையுள்ளம் கொண்ட சமூக ஆர்வலர்களை நாடி, உரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
# தேர்ச்சி குறைந்த மாணவர்களின் பெற்றோரை அவர்களின் வசதிக்கேற்ற நாளில் வரவழைத்து, அவர்தம் பிள்ளைகளின் கல்வித்தேவையை உணர்த்தி, உறுதுணையாக இருக்கவும், அவர்கள் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும் வேண்டும்.
# தேர்ச்சி குறைந்த மாணவர்தம் பெற்றோரின் செல்பேசி எண்ணைப் பெற்றுத் தலைமையாசிரியரே அப்பெற்றோர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர்தம் பிள்ளைகளின் கல்விநிலை குறித்து எடுத்துக்கூறவேண்டும்.
# பள்ளிப் பொதுத் தேர்வின் ஒட்டுமொத்தச் சராசரி மதிப்பெண்ணைவிடக் குறைந்தபட்சம் 5 சதவிகிதம் உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
# பத்தாம் வகுப்பு தேர்ச்சி குறைந்த மாணவர்களை 6 முதல் 10ஆம் வகுப்புவரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒவ்வொருவருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பை வழங்கவேண்டும்.
# அப்பொறுப்பைத் தொடர்ந்து தலைமையாசிரியர் கண்காணித்து மாணவர்தம் முன்னேற்றத்தை உறுதிசெய்ய வேண்டும்.
# பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி குறைந்த மாணவர்களை 11 மற்றும் 12ஆம் வகுப்புக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொருவருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்தளித்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை முறையாகச் செய்கிறார்களா என்பதைத் தலைமையாசிரியர் உறுதிசெய்யவேண்டும்.
# ஒரு பாடம் மற்றும் இரு பாடங்களில் தேர்ச்சி குறைந்த மாணவர்களுள் 20 பேரைத் தன்பொறுப்பில் தத்தெடுத்து, அவர்தம் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் முழுப்பொறுப்பையும் தலைமையாசிரியர் ஏற்கவேண்டும்.
பாட ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்:
# என் பாடத்தில் 100 சதவிகிதத் தேர்ச்சியை அளிப்பேன்.
# நான் ஒரு போதும் பள்ளித் தேர்ச்சி சதவிகித குறைபாட்டிற்குக் காரணமாக இருக்கமாட்டேன்.
# சென்ற ஆண்டு என்னுடைய பாடச் சராசரி மதிப்பெண்ணைக் காட்டிலும் 5 சதவிகிதம் கூட்டுவேன்.
- என்னும் மூன்று உறுதிமொழிகளையும் பாட ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
# முக்கியமான வினாக்களுக்கான விடைகளை வகுப்பறைகளிலேயே மாணவர்களை எழுதச்செய்து, தேர்ச்சி குறைந்த மாணவர்களின் விடைத்தாள்களைச் சரிபார்த்து உரிய வழிகாட்டுதல்களை மேற்கொள்ள வேண்டும்.
# தேர்ச்சி சதவிகிதம் குறைந்த மாணவர்களுக்கு ஆசிரியரே விடைக்குறிப்புகளை எளிமைப்படுத்தி வழங்க வேண்டும்.
# பொதுத்தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் வினாக்களுக்கான விடைகளைத் தேர்ச்சி குறைந்த மாணவர்களுக்குக் கொடுத்துப் பயிற்சி அளிக்கவேண்டும்.
# தேர்ச்சி சதவிகிதம் குறைந்த பாடங்களுக்கான ஆசிரியர்கள், தத்தம் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு மணிநேரம் அம்மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்திக் கற்பிக்க வேண்டும்.
# தேர்ச்சி சதவிகிதம் மாணவர்கள் குறைந்தபட்சத் தேர்ச்சி சதவிகிதம் பெறும்வகையில் ஒருமதிப்பெண் வினாக்களுக்கான பயிற்சி அளிக்கவேண்டும்.
# அவர்களுக்கு எளிதில் மதிப்பெண் பெறக்கூடிய பாடப்பகுதிகளில் அடிக்கடி பயிற்சி அளிக்கவேண்டும். (சான்றாக, கணக்கு-ஜியோமிதி, சமூக அறிவியல்- மேப்)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB