Friday, 14 June 2013

TAMIL G.K 0631-0650 | TNPSC | TRB | TET | 62 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0631-0650 | TNPSC | TRB | TET | 62 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

631. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்-ஆங்கிலப் பேரகராதியைத் தொகுத்து வெளியிட்டது யார்?

Answer | Touch me வின்சுலோ


632. 8-ஆம் வகுப்பு | தமிழ் |1925-இல் தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியை வெளியிட்டது யார்?

Answer | Touch me பவானந்தன்


633. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“மதுரைத் தமிழ்பேரகராதி” எந்த ஆண்டு வெளிவந்தது?

Answer | Touch me 1937-ஆம் ஆண்டு


634. 8-ஆம் வகுப்பு | தமிழ் |1985-ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தமிழ்-தமிழ் அகரமுதலி யாரால் தொகுக்கப்பட்டது?

Answer | Touch me மு. சண்முகம்


635. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது?

Answer | Touch me சென்னைப் பல்கலைக்கழக அகராதி


636. 8-ஆம் வகுப்பு | தமிழ் | சென்னைப் பல்கலைக்கழக அகராதி ஆறு தொகுதிகளாக எந்த பெயரில் வெளியிடப்பட்டது?

Answer | Touch me தமிழ் லெக்சிகன்


637. 8-ஆம் வகுப்பு | தமிழ் | 1985-ஆம் ஆண்டு யாருடைய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் முதல் தொகுதி வெளிவந்தது?

Answer | Touch me தேவநேயப்பாவாணர்


638. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் இரண்டாம் தொகுதி எப்போது வெளிவந்தது?

Answer | Touch me 1993-ஆம் ஆண்டு


639. 8-ஆம் வகுப்பு | தமிழ் |படங்களுடன் வந்த இரண்டாவது அகரமுதலி எது?

Answer | Touch me 1993-ஆம் ஆண்டு வந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி இரண்டாம் தொகுதி


640. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் தமிழ் அகரமுதலி எது?

Answer | Touch me கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி


641. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்க்கலைக் களஞ்சியங்களின் முன்னோடி எது?

Answer | Touch me அபிதான கோசம்


642. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அபிதான கோசம் வெளிவந்த ஆண்டு எது?

Answer | Touch me 1902-ஆம் ஆண்டு


643. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப் பொருள்களையும் முதன் முதலாக சேர்த்து விளக்கம் தந்த கலைக் களஞ்சியம் எது?

Answer | Touch me அபி;தான சிந்தாமணி


644. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அபிதான சிந்தாமணி யாரால் எப்போது தொகுத்து வெளியிடப்பட்டது?

Answer | Touch me 1934-ஆம் ஆண்டு, சிங்காரவேலனார்


645. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சொற்கள் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me நான்கு


646. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சொற்களின் வகைகள் யாவை?

Answer | Touch me இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்


647. 8-ஆம் வகுப்பு | தமிழ் |எல்லோருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் _______ எனப்படும்.

Answer | Touch me இயற்சொல்


648. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய சொற்கள் எவ்வாறு அமைக்கப்படுகிறது?

Answer | Touch me திரிசொல்


649. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் திசைச்சொற்கள் _______ எனப்படும்.

Answer | Touch me திசைச்சொல்


650. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழில் வந்து வழங்கினாலும் தமிழ்சொற்கள் அல்;லாதவை எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

Answer | Touch me வடசொல்






No comments: