Monday, 5 August 2013

TAMIL G.K 1281-1300 | TNPSC | TRB | TET | 95 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1281-1300 | TNPSC | TRB | TET | 95 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1281. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சீர்கள் பல அடுத்து நடப்பது _____எனப்படும்.

Answer | Touch me அடி


1282. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடியின் வகைகள் யாவை?

Answer | Touch me குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐவகைப்படும்


1283. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் இருசீர்களைப் பெற்று வருவது_____ எனப்படும்.

Answer | Touch me குறளடி


1284. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது_____ எனப்படும்.

Answer | Touch me சிந்தடி


1285. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது_____ ஆகும்.

Answer | Touch me அளவடி அல்லது நேரடி


1286. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது_____ ஆகும்.

Answer | Touch me நெடிலடி


1287. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் ஆறு அல்லது அதற்கு மேற்கண்ட பல சீர்களைப் பெற்று வருவதைக் _____ எனக் கூறுவர்.

Answer | Touch me கழிநெடிலடி


1288. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மலர்களைத் தொடுப்பது போலவே சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமையத் தொடுப்பது _____ எனப்படும்.

Answer | Touch me தொடை


1289. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தொடை எத்தனை வகைப்படும்?

Answer | Touch me எட்டு


1290. 9-ஆம் வகுப்பு | தமிழ் | செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது_____ எனப்படும்.

Answer | Touch me அடிமோனைத் தொடை


1291. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது_____ எனப்படும்.

Answer | Touch me அடியெதுகைத் தொடை


1292. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் முதற்சீர் முரண்படத் தொடுப்பது _____ எனப்படும்.

Answer | Touch me அடிமுரண் தொடை


1293. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது_____ எனப்படும்.

Answer | Touch me அடிஇயைபுத் தொடை


1294. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் முதல் சீர் அளபெடுத்து வருவது_____ எனப்படும.;

Answer | Touch me அடியளபெடைத் தொடை


1295. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me முப்பத்தைந்து


1296. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நான்கு சீர்களையுடைய ஓரடியில் பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கது வாய், கீழ்க்கதுவாய், முற்று ஆகியன வரத்தொடுப்பது எது?

Answer | Touch me தொடை விகற்பம்


1297. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நாலடி கொண்ட சீருள் முதலிரு சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது_____எனப்படும்.

Answer | Touch me இணைமோனை


1298. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து ஒத்து வருவது _______ எனப்படும்.

Answer | Touch me பொழிப்பு மோனை


1299. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியின் முதற்சீரிலும் நான்காம் சீரிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.

Answer | Touch me ஒரூஉ மோனை


1300. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியின் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வருவது _______ எனப்படும்.

Answer | Touch me கூழைமோனை






No comments: