Monday, 30 December 2013

SSLC,PLUS TWO STUDY MATERIALS AND GOVT QUESTION PAPER DOWNLOAD | கல்விச்சோலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு எளிய வடிவிலான பாடங்கள் மற்றும் செப்டம்பர் 2013 வரையிலான அரசு பொதுத்தேர்வு வினாத்தாட்கள் வெளியிடப்பட்டுள்ளன.

SSLC,PLUS TWO STUDY MATERIALS AND GOVT QUESTION PAPER DOWNLOAD | கல்விச்சோலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு எளிய வடிவிலான பாடங்கள் மற்றும் செப்டம்பர் 2013 வரையிலான அரசு பொதுத்தேர்வு வினாத்தாட்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

துணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வு, 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

துணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வு, 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் பதவி(3 இடம்), துணை போலீஸ் சூப்பிரண்டு பதவி(33), உதவி கமிஷனர் பதவி(33), கிராமப்புற வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பதவி(10) உள்பட 4 உயர் பதவிகளுக்கான 77 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் முடிவு செய்து உள்ளது.

இதற்கான முதல் நிலை தேர்வை 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net என்ற இணையதளங்கள் வாயிலாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று சட்டம் பயின்றவர்களுக்கு 1 ஆண்டு வயது வரம்பு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 28–ந் தேதி கடைசி நாள் ஆகும்.

தமிழக அரசு ஆணையின்படி, இந்த தேர்வில், தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குரூப்–1 முதல்நிலை தேர்வானது 3 மணி நேரம் நடைபெறுகிறது.

இதில் 150 பொது அறிவு வினாக்கள், 50 திறனாய்வு வினாக்கள் என மொத்தம் 200 கொள்குறி(Objective) வகை வினாக்கள் கேட்கப்படும்.

குரூப்–1 முதல்நிலை தேர்வானது, சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், அரியலூர், திருச்சி, சிதம்பரம், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாகர்கோவில், நாகப்பட்டினம், நாமக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்பட 33 மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு கட்டணமாக 125 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இ–மெயில் முகவரி மற்றும் கைபேசி எண்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முரண்பாடு.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றி ருந்தால் காலியிடங்களுக்கு ஏற்ப குறிப் பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ஆசிரியர் பணியில் 50 சதவீத இடங்கள் நேரடியாகவும், 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில், முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள். முதுகலை ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரையில், நேரடி நியமனம் என்றால் இளநிலை, முதுகலை இரண்டு பட்டப் படிப்பிலும் குறிப்பிட்ட பாடத்தைப் படித்து பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், பதவி உயர்வு நிய மனத்தில், பி.எட். தகுதியுடன் சம்பந்தப் பட்ட பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும். பட்டப் படிப்பில் அவர்கள் எந்த படிப்பும் படித்திருக்கலாம் (கிராஸ் மேஜர்). உதாரணத்துக்கு பி.எஸ்சி. இயற்பியல் பட்டம் பெற்ற அறிவியல் ஆசிரியர் எம்.ஏ. ஆங்கிலம் படித்திருந்தால் அவர் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்.

இந்த பதவி உயர்வில், அறிவியல் படிப்புகளுக்கு (இயற்பியல், வேதியி யல், விலங்கியல்) மற்றும் கணித படிப்புக்கு கிராஸ் மேஜர் அனுமதி இல்லை. ஆனால், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் கிராஸ் மேஜர் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்குகிறார்கள். வணிகவியல், பொருளாதார முதுகலைப் பாடங்களில் 3:1 என்ற விகிதாச்சாரமுறையும் கடை பிடிக்கப்படுகிறது.

அதாவது, 3 இடங்கள் கிராஸ் மேஜர் பட்டதாரிகளுக்கும் ஒரு இடம் இளங்கலை, முதுகலை இரண்டும் ஒரே பாடத்தில் படித்தவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் 1:1 விகிதாச்சாரத்தை பின்பற்று கிறார்கள். ஒரு காலியிடம் கிராஸ் மேஜர் பட்டதாரிக்கும் ஒரு இடம் இளநிலை, முதுகலை இரண்டிலும் தமிழோ அல்லது ஆங்கிலமோ படித்தவர் களுக்கும் ஒதுக்கப்படுகிறது. இதனால், ஒரே பாடத்தில் இளநிலை, முதுகலை பட்டங்களை பெற்ற ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அறிவியல் பாடங்களுக்கான பதவி உயர்வில் மட்டும் கிராஸ் மேஜர் முறை இல்லாதபோது மொழிப்பாடத்திலும், வணிகவியல், பொருளாதார பாடங் களில் மட்டும் இந்த முறையை அனு மதிப்பது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கழக மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.என்.ஜனார்த்தனன் கூறியதாவது:-

தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தேவையான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கிடைக்காத காலத்தில் இதுபோன்ற பதவி உயர்வு உத்தரவு போடப்பட்டது. ஆனால், தற்போது இந்த பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மிக அதிகமாக உள்ளனர்.

அப்படியிருக்கும்போது இன்னும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பது முரண்பாடாக இருக் கிறது. இளங்கலை வேறு பாடத் தையும் முதுகலை வேறு பாடத்தையும் படித்த ஆசிரியர்களைக் காட்டிலும் இரண்டு படிப்பிலும் ஒரே பாடத்தை படித்துள்ள ஆசிரியர்களுக்கு பாட அறிவு ஆழமாக இருக்கும் என்றார்.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்லூரி ஆசிரியருக்கான யு.ஜி.சி.,யின் தேசிய அளவிலான தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது

கல்லூரி ஆசிரியருக்கான தேசிய அளவிலான தகுதி தேர்வு, தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது.

யு.ஜி.சி. என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியருக்கான தகுதியை ஏற்படுத்தும், தேசிய அளவிலான தகுதித்தேர்வு(NET) நேற்று நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தான், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தேர்வு சென்னையில் 13 மையங்கள், மதுரையில் 15 மையங்கள், திருச்சியில் 10 மையங்கள், கோவையில் 9 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வை 6 லட்சம் முதுநிலை பட்டதாரிகள் எழுதினார்கள்.

சென்னை எஸ்.ஐ.டி. கல்லூரி, புது கல்லூரி, ஸ்டெல்லாமேரி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர்.–ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை ஒரு தேர்வு, காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை 2–வது தேர்வு, பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 3–வது தேர்வு என 3 தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த 3 தேர்விலும், அனைத்து கேள்விகளும் கொள்குறி வகையில் கேட்கப்பட்டிருந்தன. இதில், சோசியாலஜி, சோசியல் ஒர்க், சைக்காலஜி, மேனேஜ்மென்ட் உள்பட பல்வேறு பாடப்பரிவுகளை சேர்ந்த மாணவர்கள் எழுதினார்கள்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மிரண்டா தாம்கின்ஷன் என்ற 100 சதவீதம் பார்வை குறைபாடு உடைய சோசியாலஜி பாடப்பிரிவு மாணவர், கல்லூரி பேராசிரியருக்கான தேசிய அளவிலான தகுதி தேர்வில் தனக்கு ‘பிரெய்லி’ முறையில் கேள்வித் தாள் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை ஐகோர்ட்டு அந்த மாணவருக்கு ‘பிரெய்லி’ முறையில் கேள்வித்தாள் வழங்குமாறு யு.ஜி.சி.–க்கு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற தேர்வில் அந்த மாணவருக்காக டெல்லியில் இருந்து அவருக்கு என ‘பிரெய்லி’ முறையில் பிரத்தேகமாக தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் வரவழைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மேலும் அவருக்கு விடைத்தாளை நிரப்புவதற்கு உதவியாளரும், கூடுதல் நேரமும் ஒதுக்கப்பட்டது.

சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.–ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மிரண்டா தாம்கின்ஷன் தகுதித்தேர்வை எழுதினர் .
CLICK HERE FOR ALL STUDY MATERIALS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுகலை ஆசிரியராக, 733 பேருக்கு, பதவி உயர்வு, உத்தரவுகள் வழங்கப்பட்டன.

முதுகலை ஆசிரியராக, 733 பேருக்கு, பதவி உயர்வு, உத்தரவுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த, 897 பேருக்கு, பதவி உயர்வு வழங்க, மாநிலம் முழுவதும், கலந்தாய்வு நடந்தது. பதவி உயர்வு இடம், எதிர்பார்ப்பிற்கு மாறாக, நீண்ட தொலைவில் இருந்ததால், 164 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40, திருவள்ளூரில், 31, வேலூரில், 47, சேலத்தில், 48 பேர், பதவி உயர்வு பெற்றனர். சென்னை மாவட்டத்தில், ஐந்து காலி பணியிடங்கள் மட்டுமே இருந்தன. கலந்தாய்வில், 26 பேர், பங்கேற்றபோதும், "சீனியர்' ஐந்து பேர், காலியிடங்களை தேர்வு செய்தனர். 
CLICK HERE FOR ALL STUDY MATERIALS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்1 வகுப்பிற்கு முப்பருவ கல்வி முறை வருமா?

'தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில், முழுக்க முழுக்க, பிளஸ்2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை, தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்' என, கல்வித் துறை வலியுறுத்தி உள்ளது.

தனியார் பள்ளிகளின் வளர்ச்சி யில், பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள், 100 சதவீத பங்கை வகிக்கின்றன. 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில், குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதன் மூலம், நாமக்கல், கிருஷ்ண கிரி, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளன. வட மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ்1 வகுப்பிலும், அந்த வகுப்பிற்குரிய பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில், 10ம் வகுப்பு பாடத்தை நடத்துவதை யும், பிளஸ்1 வகுப்பில், பிளஸ்2 பாடத்தை நடத்துவதையும், பல ஆண்டுகளாக, கடைப்பிடித்து வருகின்றனர். இரு ஆண்டுகள், ஒரே பாடத்தை படிப்பதன் மூலம், மாணவர்களுக்கு, பாடப் பகுதிகள், நன்றாக மனப்பாடம் ஆகிவிடுகின்றன. தேர்வில், சாதிப்பதற்கு, இதுவே காரணமாக உள்ளது. இதுபோன்ற விதிமீறலை தடுக்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும், இந்த வகுப்பிலும், முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என, கல்வித் துறை கருதுகிறது.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ்1 வகுப்பு, பெயர் அளவிற்குத் தான் உள்ளது. பாடமும், சரியாக நடத்துவதில்லை; தேர்வும், முறையாக நடப்பதில்லை. முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தினால், தனியார் பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளிலும், முறையாக, பிளஸ்1 வகுப்புகள் நடக்கும்.

அந்தந்த பருவ பாடங்களை, ஆசிரியர் நடத்துவர்; தேர்வும் முறையாக நடக்கும். இதனால், முன்கூட்டியே, பொது தேர்வு பாடங்களை நடத்துவதையும் தடுக்க முடியும். தற்போது, ஒன்பதாம் வகுப்பிலும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு பாடங்கள், சரியாக நடக்கின்றன. 10ம் வகுப்பு பாடத்தை, முன்கூட்டியே நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார். பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை வருவதே, பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், பிளஸ்1 வகுப்பிற்கு வருமா என்பது, கேள்விக்குறியே.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 29 December 2013

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. | Deputy Collector - 3,Deputy Superintendent of Police - 33, Assistant Commissioner - 33, Assistant Director of Rural Development Department - 10 | Applications are invited only through online mode upto 28.01.2014

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. | Deputy Collector - 3,Deputy Superintendent of Police - 33, Assistant Commissioner - 33, Assistant Director of Rural Development Department - 10 | Applications are invited only through online mode upto 28.01.2014.

CLICK for STUDY MATERIALS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 28 December 2013

நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர், தியாகராஜன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது. சங்க தலைவர், தியாகராஜன், பள்ளி கல்வி இயக்குனருக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித் துறையின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, கடைசி வரை, பதவி உயர்வே கிடையாது. பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மட்டும், கல்வி தகுதிக்கு ஏற்ப, பதவி உயர்வு பெற முடிகிறது. தற்போது, முதுகலை ஆசிரியர் காலி இடங்களில், 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம், நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன. இதில், நேரடி நியமனத்திற்கான, 50 சதவீத இடங்களில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கி, பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார். 

தியாகராஜன் கூறியதாவது: முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், தகுதியானவராக இருக்கின்றனர். எனவே, இரு தேர்வுகளிலும், அவர்கள் பங்கேற்கலாம். பட்டதாரி ஆசிரியர், அதிகளவில் தேர்வு செய்யப்படுவதால், அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. ஆனால், எங்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வைத் தவிர, வேறு வாய்ப்பு இல்லை. எனவே, எங்களுக்கு, 25 சதவீதம் பதவி உயர்வு வழங்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது, என்றார்



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 27 December 2013

ICTACT Awards 2014- ICTACT Best Techno Teacher Award - apply online

Dear Sir,

Greetings from ICT Academy of Tamil Nadu!

ICT Academy of Tamil Nadu announces and invites nominations from the college faculty members for the Best Techno Faculty Award 2014. Kindly visitwww.ictact.in/awards for registration.Request you to kindly share this information through your esteemed website www.kalvisolai.com. Looking forward for your continuous support.

With Warm Regards,

Vishnu Prasad | Deputy Manager - Marketing
ICT Academy of Tamil Nadu
ELCOT Complex | 2-7 Developed Plots | Industrial Estate | Perungudi |Chennai – 600 096
Phone : 91- 044 42906800 | Mobile: 95001 45522 | Visit us @ www.ictact.in

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 26 December 2013

பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான  செய்திகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள் மற்றும் 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கு மாறுதல் ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து 28.12.2013 அன்றே 01.01.2013 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்தோர் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட விவரப்படி முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

1. தமிழ் வரிசை எண் 1 முதல் 153வரை
2. ஆங்கிலம் வரிசை எண் 1 முதல் 102 வரை
3. கணிதம் வரிசை எண் 1 முதல் 102 வரை
4. இயற்பியல் வரிசை எண் 1 முதல் 86 வரை
5. வேதியியல் வரிசை எண் 1 முதல் 105 வரை
6. தாவரவியல் வரிசை எண் 1 முதல் 37d வரை
7. விலங்கியல் வரிசை எண் 1 முதல் 41 வரை
8. வரலாறு வரிசை எண் 1 முதல் 116 வரை
9. பொருளியல் வரிசை எண் 1 முதல் 95 வரை
10. வணிகவியல் வரிசை எண் 1 முதல் 56 வரை
11. புவியியல் வரிசை எண் 1 முதல் 02
12. அரசியல் அறிவியல் வரிசை எண் 1 முதல் 12 வரை
13. உ.க.இ.நிலை-வரிசை எண் 1 1 முதல் 23 வரை

கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கி முதலில் முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர்/ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியராக மாவட்டத்திற்குள் மாறுதலும், அதனைத் தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும், அதனைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி பணிமாறுதல் மூலம் பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளது. 

முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரியும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்/ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்படி முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வு முடிக்கப்பட்ட பின்னரே மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்களுக்கு பணிக்கு மாறுதல் ஆணை வழங்கவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவும் கலந்தாய்வு 28.12.2013 இன்றுன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 25 December 2013

மார்ச் 2014, மேல்நிலைப் பொதுத் தேர்வு | பள்ளி மாணவர்களின் சரிபார்ப்பு பெயர்ப்பட்டியலில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் இருப்பின் 02.01.2014 மற்றும் 03.01.2014 தேதிகளில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அளவில் மட்டுமே திருத்தங்கள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் என தேர்வுத்துறை தற்போது அறிவித்துள்ளது. திருத்தம் உள்ளவர்கள் உடன் மாவட்டக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் .

மேல்நிலைப் பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியல் (Check List) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிவுரைகள் 

1. தங்கள் பள்ளியின் “Check List” – ல் உங்கள் பள்ளிக்குரிய அனைத்து தேர்வர்களின் பெயர்களும் அச்சழுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

2. தேர்வர்களின் பெயர்கள் ஏதேனும் விடுபட்டிருப்பின் அவ்விவரத்தினை “Check List” - ன் கடைசி பக்கத்தில் சிவப்புநிற மையினால் தெளிவாக எழுத வேண்டும். 

3. தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி மற்றும் இதர பாடங்களில் தேர்வெழுதவுள்ள மொழி (Medium of Instructions) ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெயரின் உச்சரிப்பு எழுத்துக்கள் (Spelling) சரிபார்க்கப்பட வேண்டும்.


4. மேலே குறிப்பிட்டுள்ளவைகளில் தவறுகள் ஏதேனும் இருப்பின் அதனை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான விபரத்தினைக் குறிப்பிடப்பட வேண்டும். 

5. மிக முக்கியமாக, தேர்வர்களின் Group Code மற்றும் Subject Code ஆகியவை சரியாகவும் வரிசைக்கிரமமாகவும் உள்ளதா? என்பதை ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துத் தவறுகள் ஏதேனும் இருப்பின் சிவப்பு நிற மையினால் அதனை சுழித்து சரியான விபரத்தினை தெளிவாக குறிப்பிட வேண்டும். 

6. தங்கள் பள்ளியின் எண், பெயர் மற்றும் பெயர் ஆகியவை சரியாக அச்சழுத்தம் செய்யப்பட்டுள்ளதா? என்பதைக் கவனத்துடன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும், அதில் திருத்தம் ஏதேனும் வேண்டின் அதனை சிவப்பு நிற மையினால் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். 

7. அனைத்து பாடத் தேர்வுகளின் வினாத்தாட்கள் Bilingual முறையில் அச்சடித்து வழங்கப்படும். எனினும், Typewriting பாடத் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தனித்தனியே வினாத்தாட்கள் அச்சடித்து வழங்கப்படும். எனவே, Typewriting பாடத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தேர்வெழுதும் மொழி தமிழ் அல்லது ஆங்கிலம் (“T” or “E”) என சரியாகக் குறிப்பிட வேண்டும். தவறு இருப்பின் அதனை சிவப்புநிற மையினால் சுழித்து உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். 

8. Physics, Chemistry, Biology, Botany, Zoology, Maths, History, Economics,Commerce, Accountancy ஆகிய பாடங்களுக்கு மட்டுமே மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் வினாத்தாட்கள் வழங்கப்படுகிறது என்பதும் இதர பாடங்களுக்கு கிடையாது என்பதையும் கருத்தில் கொண்டு Check List-ஐ கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். இதில் தவறு ஏற்படக்கூடாது. 

9. மேலே குறிப்பிட்டுள்ள பணிகளை தலைமையாசிரியர்கள் தங்களது நேரடி கவனத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும், இவற்றில் தவறுகள் ஏற்பட்டால் தேர்வு நேரத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதோடு சம்பந்தப்பட்ட தேர்வர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படும் சூடிநநிலை உருவாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

10. எக்காரணத்தைக் கொண்டும் தலைமையாசிரியர்கள் மேலே குறிப்பிட்டுள்ளவைகளை தங்களது நேரடி கண்காணிப்பில் சரிபார்க்காமல் “தலைமையாசிரியர்களால் சரிபார்க்கப்பட்டது” என்று Check list – ல் சான்றிட்டு எக்காரணங்கொண்டும் கையொப்பமிடக் கூடாது. மேலே சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளுடன் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டிருப்பின் அதன் பின்விளைவுகளையும், முழு பொறுப்பினையும் தலைமை ஆசிரியர்களே சந்திக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

11. ஒரே பெயர்(Name) மற்றும் தலைப்பெழுத்து (initials) கொண்ட மாணவ / மாணவியர்கள் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பின், அந்தந்த மாணவ/மாணவியரின் பிறந்த தேதியினை மிகக் கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். இப்பதிவில் தவறு ஏதும் நிகழாவண்ணம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். 

12.அனைத்துப் பள்ளிகளும் 02.01.2014  முதல் 03.01..2014 ( வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் ஆன்லைனில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். எனவே தலைமை ஆசிரியர்கள் மேலே குறிப்பிட்டுள்ளவைகளைக் கவனத்தில் கொண்டு தேர்வர்களின் நலன் பாதிக்காவண்ணம் தேர்வுப்பணியினை செம்மையாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு தேர்வு முடிவுகளை நல்ல முறையில் வெளியிட தங்களது முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. என தேர்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 
CLICK HERE FOR ALL STUDY MATERIALS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது.

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது. ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, 'ரெகுலர்' மாணவர் மற்றும் தனி தேர்வு மாணவர் என, 40 ஆயிரம் பேர் எழுதினர். தற்போது, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்ததை அடுத்து, அடுத்த வாரத்தில், முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க, தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

யு.ஜி.சி., நடத்தும், 'நெட்' தேர்வு, சென்னையில், 13 மையங்களில், வரும், 29ம் தேதி நடக்கிறது.

யு.ஜி.சி., நடத்தும், 'நெட்' தேர்வு, சென்னையில், 13 மையங்களில், வரும், 29ம் தேதி நடக்கிறது. பல்கலைக் கழக மானியக் குழு - யு.ஜி.சி., சார்பில், விரிவுரையாளர்களுக்கான, 'நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட் - நெட்' தகுதித் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை, மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான தேர்வு, இம்மாதம், 29ம் தேதி, நாடு முழுவதும் நடக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 December 2013

TNPSC Departmental Exam Dec 2013 Hall Ticket Available | TNPSC டிசம்பர் 2013 -துறைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Departmental Exam Dec 2013 Hall Ticket Available | TNPSC டிசம்பர் 2013 -துறைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.


 

Departmental Examinations, December, 2013
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 23.12.2013 to 31.12.2013)

           Enter Your Application Number :DED13                                  
                                                                                          Date                  Month             Year
                Enter Your Date of Birth         :                 /             /   

                                                                                               
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 19 December 2013

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி முதுகலை பட்டப் படிப்பு ஹால் டிக்கெட்டை தொலைதூரக் கல்வி நிறுவன இணைய தளத்தில் (www.ideunom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி முதுகலை பட்டப் படிப்புகள் மற்றும் தொழில் படிப்புகளுக்கான (எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. (ஐ.டி., பி.எல்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ்.) தேர்வுகள் டிசம்பர் 28-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தொலைதூரக் கல்வி நிறுவன இணைய தளத்தில் (www.ideunom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுஅட்டவணை, தேர்வு மையம், மாதிரி கேள்வித்தாள் ஆகிய விவரங்களையும் இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உதவிப் பேராசிரியர் நியமனத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் சிக்கல் அரசிடம் விளக்கம் பெற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

தமிழகத்தில் 81 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. போட்டித் தேர்வு இல்லாமல், அதேநேரத்தில் பதிவு மூப்பும் இல்லாமல் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி, பணி அனுபவம், உயர்கல்வித் தகுதி, நேர்முகத் தேர்வு ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் அளித்து அதன் அடிப்படையில் தேர்வு நடக்கவுள்ளது. இந்தப் பணிக்கு சுமார் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு நவம்பர் இறுதியில் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. 

அப்போது சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு பணி அனுபவம், உயர்கல்வித் தகுதி ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. அதி காரப்பூர்வ மதிப்பெண் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 

பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப் படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. முடித்திருந்தால் ஸ்லெட், நெட் தகுதித்தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். 

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான விதியின்படி, குறிப்பிட்ட பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை தமிழ் வழியில் பெற்றிருக்க வேண்டும். அதன்படி, உதவிப் பேராசிரியர் பணிக்கான கல்வித் தகுதியான முதுகலை பட்டம், ஸ்லெட் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி, பி.எச்டி. ஆகிய வற்றை தமிழ் வழியில் முடித்திருக்க வேண்டும். 

மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வும், தேசிய அளவி லான நெட் தகுதித் தேர்வும் தமிழ்ப் பாடம் நீங்கலாக மற்ற அனைத்து பாடங்களுக்கும் ஆங்கில வழியில்தான் நடத்தப்படுகின்றன.பி.எச்டி. பட்டத்துக்கான ஆய்வும் ஆங்கில வழியில்தான் சமர்ப்பிக் கப்படுகின்றன. எனவே, தமிழ் வழி ஒதுக்கீட் டுக்கு தகுதியை நிர்ண யிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக உயர்கல்வித் துறையிடம் உரிய விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஆசி ரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே, அஞ்சல்வழி எம்பில். பட்டத்தை ஏற்றுக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டு, அது ஒருவழியாக முடிவுக்கு வந்தது. தற்போது தமிழ்வழிக் கல்வி ஒதுக்கீட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துமாறு தேர்வுக்கு படித்து வரும் இளைஞர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துமாறு தேர்வுக்கு படித்து வரும் இளைஞர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

துணை ஆட்சியர் (ஆர்.டி.ஓ.), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய 8 வகையான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வை நடத்துகிறது.

இந்த தேர்வுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30. மற்ற அனைத்து வகுப்பினருக்கும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 தேர்வு குறித்த விழிப்புணர்வு கிராமப்புற மாணவர்களுக்கு தாமதமாக ஏற்படுவதாலும், ஐ.ஏ.எஸ். தேர்வு போன்று திட்டமிட்டபடி ஆண்டுதோறும் நடத்தப்படாததாலும் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக குரூப்-1 தேர்வு எழுதுவோர் கூட்டமைப்பு சார்பில் சுமதி, பிரியா, ரிச்சர்டு, ராமநாதன், அருள்மொழி ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: 

குரூப்-1 தேர்வு எழுதுவோரில் 50 சதவீதம் பேர் கிராமப்புற மாணவ-மாணவிகள்தான். தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு அதற்கு படித்து தயாராவதற்குள் வயதாகிவிடுகிறது. யு.பி.எஸ்.சி.யின் ஐ.ஏ.எஸ். தேர்வைப் போன்று குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது கிடையாது. கடந்த 13 ஆண்டுகளில் 5 தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு இருக்கின்றன.கேரளம், ஆந்திரம், குஜராத், அரியானா, பீகார் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் குருப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆகும். தமிழ்நாட்டில்தான் பொதுப்பிரிவினருக்கு 30 என்றும் இதர பிரிவினருக்கு 35 என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. குரூப்-1 அறிவிப்பு தொடங்கி பணிநியமனம் வரை கிட்டதட்ட 3 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. எனவே, ஒரு வாய்ப்பை இழந்துவிட்டால் 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் பல இளைஞர்கள் வயது வரம்பை கடந்து விடுகின்றனர். 

வயது வரம்பு காரணமாக ஏறத்தாழ 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு வாய்ப்பு வழங்குவதால் அரசுக்கு எந்தவிதமான நிதிச்சுமையும் ஏற்படப்போவதில்லை. இந்தியாவிலேயே கல்வியறி வில் முதன்மை மாநிலமான கேரளத்தில் உச்சவரம்பு 45 ஆக இருக்கும்போது மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா, கருணை உள்ளத்தோடு தமிழகத்திலும் குரூப்-1 தேர்வு வயது வரம்பை உயர்த்தும்படி வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மார்ச் 2014 SSLC-இடைநிலைப் பொதுத் தேர்வுக்கு பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் (Nominal Roll) www.tndge.in என்ற இணையதளத்தின் முலம் 23.12.2013 முதல் 27.12.2013 வரை பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2014 SSLC-இடைநிலைப் பொதுத் தேர்வுக்கு பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் (Nominal Roll) www.tndge.in என்ற இணையதளத்தின் முலம் 23.12.2013 முதல் 27.12.2013 வரை பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 

பணியிடங்கள் விவரம் வருமாறு:

பள்ளிக்கல்வித்துறை

முதுகலை ஆசிரியர் -981
பட்டதாரி ஆசிரியர்-தமிழ் -115
பட்டதாரி ஆசிரியர்-மற்ற பாடங்கள்  -417
உடற்கல்வி ஆசிரியர் -99
ஓவிய ஆசிரியர் -57
இசை ஆசிரியர் -31
தையல் ஆசிரியர் -37

தொடக்கக் கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர் -887
உடற்கல்வி ஆசிரியர் -37

மேற்கண்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வில் முறைகேட்டினை தடுக்க தேர்வுத்துறை புதிய அதிரடி திட்டங்களை அமல்படுத்த உள்ளது.

தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர். தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் வகையில் முதல், முதலாக சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்களே இந்த நியமனத்தை செய்ய உள்ளனர். 


தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொது தேர்வு முறைகளில் ஆண்டுக்கு ஆண்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ் 2 பொதுதேர்வுகள் வரும் மார்ச் 3ம் தேதி துவங்கி மார்ச் 25ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு மார்ச் 26ல் துவங்கி ஏப்ரல் மாதம் 9ம் தேதி வரையும் நடக்கும் என்று தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்வு எழுதுவோர் பட்டியல் விபரம் ஏற்கனவே தோராயமாக கேட்கப்பட்டு தற்போது இறுதி பட்டியல் கேட்கப்பட்டும் முழு விபரத்தையும் தனித்தனியாகவும், ஆன்லைன் மூலமாகவும் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆன்லைனில் இதனை அனுப்புவதற்கான படிவம் விபரம் நேற்று அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அந்த படிவத்தின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் விபரத்தை அனுப்பி வைக்கும் பணியினை அதிகாரிகள் துவக்கி இருப்பதாக கூறப்படுகிறது.இந் நிலையில் தேர்வில் சில பள்ளிகளில் முறைகேடு புகார் திடீர், திடீரென ஏற்படுவதால் அதனை முற்றிலுமாக ஒழித்து கட்டி நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்வினை சிறப்பாக எந்தவித பிரச்னையும் இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்று கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.இதற்காக முதல் முறையாக இதுவரை இருந்த சில நடைமுறைகளை மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு தேர்வு அறையிலும் கண்டிப்பாக 20 மாணவர்கள் தான் தேர்வு எழுத வைக்க வேண்டும். 

அதற்கு மேல் எண்ணிக்கையில் மாணவர்களை அனுமதிக்க கூடாது.ஒரு மையத்தில் உதாரணத்திற்கு 145 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்றால் 7 அறையில் தலா 20 மாணவர்களையும், ஒரு அறையில் 5 மாணவர்களும் தேர்வு எழுத வைக்க வேண்டும். 

 இதே போல் தேர்வு அறையின் கண்காணிப்பாளர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். அதில் சீனியர்கள், தலைமையாசிரியர்கள் போன்றோர் பறக்கும்படைக்கு நியமிக்கப்படுவர். இந்த நியமனம் அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அளவில் தேர்வு செய்து கொள்வர்.ஆனால் வரும் தேர்வுக்கு ஹால் சூப்ரவைசர்கள், பறக்கும்படைக்கு யார் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை சென்னையில் உள்ள இயக்குனர் நேரடி கண்காணிப்பில் அவர்களே தேர்வு செய்வர். தேர்வுக்கு பயன்படுத்தக் கூடிய ஆசிரியர்கள் லிஸ்ட் மட்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அனுப்பி வைத்து விட வேண்டும்.எந்த மையத்திற்கு எந்த ஆசிரியர் சூப்ரவைசர், பறக்கும்படையில் இடம் பெறப் போவது யார் என்பது குறித்த விபரத்தை இயக்குனர் தேர்வு செய்து அனுப்புவார். 

அதன் அடிப்படையில் தான் தேர்வு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த முறையும் புதியதாக வரும் தேர்வில் அமல்படுத்தப்படுகிறது.இதே போல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர் தேர்வும் சென்னையில் உள்ள கல்வித்துறை இயக்குனர் அளவில் தான் நடக்கிறது.  

விடைத்தாள் திருத்துவோர் பட்டியல் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தான் வரும். அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக விடைத்தாள் திருத்துவதற்கு சென்று ஆக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருக்கிறது.இயக்குனர் அளவில் தான் இந்த முடிவு என்பதால் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு புதிய முறை மூலம் பல்வேறு வேலைகள் இல்லாத நிலை உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வரும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் புதிய அதிரடி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு நடக்க உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 18 December 2013

பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 3ல் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19 லட்சம் கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன .

பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 3ல் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19 லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு பணி, வெளிமாநிலத்தில், மும்முரமாக நடந்து வருகிறது. 

பிப்ரவரி மத்தியில், அச்சகத்தில் இருந்து, நேரடியாக, கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு, அவை வந்து சேரும். ஒவ்வொரு தேர்வு மையம் வாரியாக, ஒரு மையத்தில், எத்தனை தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன என, கணக்கீடு செய்யப்பட்டு, அதன்படி, அச்சகத்தில் இருந்து, நேரடியாக, தேர்வு அறை எண்ணிக்கை வாரியாக, தலா, 20 கேள்வித்தாள்கள் அடங்கிய கட்டுகள் தயாரித்து, சீலிடப்பட்டு அனுப்பப்படும். இந்த கேள்வித்தாள் கட்டுகள், மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள, கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு வந்து சேரும். பின், அந்த மையத்தில் இருந்து, தேர்வு நாள் காலை, பள்ளிக்கு சென்றடையும். 2011 வரை, கேள்வித்தாள் கட்டுகள், தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு வந்து, பின், மாவட்டங்களுக்கு சென்றன. கடந்த ஆண்டில் இருந்து, நேரடியாக, அச்சகத்தில் இருந்து, மாவட்டங்களுக்கு செல்லும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே நடைமுறை, இந்த ஆண்டும் இருக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

மாணவர் எண்ணிக்கை வாரியாக, கேள்வித்தாள் அச்சிடப்பட்டு வருவதால், ஒரு கேள்வித்தாள் கூட, கூடுதலாக வராது என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மாத இறுதியில், தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள், அச்சகங்களுக்கு சென்றதும், குறிப்பிட்ட எண்ணிக்கையுடன், அச்சடிப்பு பணி நிறுத்தப்படும். பிப்ரவரி, 15 தேதிக்கு பின், கேள்வித்தாள்கள் வர ஆரம்பிக்கும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 தேர்வுக்கு, 8.5 லட்சம்; 10ம் வகுப்பு தேர்வுக்கு, 10.5 லட்சம் என, மொத்தம், 19 லட்சம் கேள்வித்தாள்கள், எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி அளவை பதிவேடை (ஸ்கேல் ரெஜிஸ்டர்) பார்வையிட்டு பணியிடங்களின் எண்ணிக்கையை துல்லியமாக சரிபார்த்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.

குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி 6 முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடம் 1:35 என்ற விகிதாச்சார அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.பாடவாரியான உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்திட ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளபடி 9, 10ம் வகுப்புகளுக்கு ஆசிரியர்&மாணவர் விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதில் ஆர்எம்எஸ்ஏ விதிகளின்படி 160 மாணவர்களுக்கு 5 பணியிடங்கள், கூடுதல் 30 மாணவர்களுக்கு 1 பணியிடம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணி பங்கீட்டை விரிவாக ஆய்வு செய்து பாட வேளைகள் உரிய விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்த பின்னர் உபரி என கண்டறியப்படும் ஆசிரியர்களை பள்ளி கல்வி இயக்ககம் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்ட உடன் பணி நிரவல் செய்து ஆணை வழங்க வேண்டும்.அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரையில் ஆசிரியரின்றி உபரி என்று கண்டறியப்படும் பணியிடங்களை மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கத்தக்க வகையில் கருத்துருக்கள், உரிய படிவத்தில் முதன்மை கல்வி அலுவலர்களால் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 15 December 2013

எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம் வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2013–2014 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ –மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000–க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.

புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் 25–12–2013–க்குள் ஒப்படைத்தல் வேண்டும். தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.in என்ற இணையதளம் மூலம் 23–ந்தேதி முதல் 31–ந்தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும்.

இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதியை நிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாநில கல்வி திட்டத்திற்கு மாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அதனையொட்டி வட்டார வளமைய மேற்பார்வையாளர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி மாநிலம் முழுவதும் 280 வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்கவும், 248 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், "பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை' (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர், அமெரிக்காவில் பயிலும் மாணவருடன் "வீடியோகான்பரன்ஸ்' மூலம் கலந்துரையாடும் திட்டம், பள்ளி கல்வித் துறையில் விரைவில் அமலாக உள்ளது.

தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், "பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை' (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இணையதளம் மூலம் "பள்ளி விட்டு பள்ளி, மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு' என்ற அடிப்படையில், கல்வியறிவு, கற்பதற்கான புதிய வழிகளை வேறுபட்ட முறையிலும், மாறுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் கற்கும் வாய்ப்பு இதனால் ஏற்படும். தமிழகத்தில் 160 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், 128 நடுநிலைப் பள்ளிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சோதனை ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தொழிற்நுட்ப கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், இணையதள வசதி, கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப், 3 ஜி டேட்டா கார்டு, வெப் கேமரா, மைக்ரோ போன், ஸ்பீக்கர்கள் வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் ஜெயலலிதாவின் தேதிக்காக, கல்வித்துறையினர் காத்திருக்கின்றனர். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், தமிழக பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருக்கும்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வரின், "விஷன் 2023' திட்டத்தின்கீழ் திட்டம் அமல்படுத்தப்படும். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், இடைநிலைக் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தவும் பயன்படும். முதற்கட்டமாக, மாநில பள்ளிகளில் "வீடியோகான்பரன்சிங்' வசதி செய்யப்படும். தொடர்ச்சியாக, வெளிநாட்டு மாணவர்களுடம் நம் மாணவர்கள் கலந்துரையாட விரைவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான தீவிர பணிகளில் கல்வித்துறை செயலாளர் சபிதா தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, நூலகப் புத்தகங்களை பயன்படுத்தத் தூண்டும். வேறுபட்ட வட்டார மொழிச் சொற்களின் அறிமுகம் பெறவும், மொழியாளுகைத் திறனும் மாணவர்களிடம் வளரும், என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.

துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.துணை கலெக்டர், 3; வணிக வரித்துறை அலுவலர், 30; ஊரக வளர்ச்சித் துறையில், 30 பணியிடம் உட்பட பல்வேறு துறைகளில், 70 முதல் 80 பணியிடங்கள் வரை, அறிவிப்பில் இடம்பெறும் என, தெரிகிறது. 17ம் தேதிக்குள், மேலும் கூடுதல் காலி பணியிடங்கள், அரசு துறைகளில் இருந்து, தேர்வாணையத்திற்கு வரும் பட்சத்தில், காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கடந்த கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என, 15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது. பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர், 694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். இதை, அரசு ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது.

கல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது. மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர், 887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 14 December 2013

01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

1. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களுக்கு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படவேண்டியுள்ளது. எனவே வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.

2. 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

IGNOU -M.Ed., நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது | M. Ed. Entrance Test, 2013 Results.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு .

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 312 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில: 

 * மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படித்தொகை மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிப்பு. 

* அரசு ஊழியர்களுக்கான குளிர்காலபடி மாதம் 500 ரூபாயாக உயர்த்தப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. 

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை. 

இந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

BRC-வட்டார வளமையம் | அரசாணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013-சொல்வது என்ன?

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றி வந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 324 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும்; 71 பேர் முதுகலை ஆசிரியராகவும்; 115 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிமாறுதல் அளிக்க உள்ளதாகவும், மேலும் வட்டார வளமையத்தினை மூத்த ஆசிரியர் பயிற்றுனர் வழிநடத்துவார். , ஒரு ஆசிரியர் பயிற்றுனருக்கு 10 பள்ளிகளை ஒதுக்கீடு செய்வது எனவும், அரசு ஆணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013- இன் படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 13 December 2013

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.

1. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களுக்கு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படவேண்டியுள்ளது. எனவே வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.

2. 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TEACHERS PROMOTION PANEL - 2013-2014

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

காவல்துறையின் பணிச் சுமையைக் குறைத்து, சட்டம் ஒழுங்கையும் சிறப்பாகப் பராமரிக்கும் வகையிலும் காவல்துறைக்கு துணையாக தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.

இளைஞர்களைக்கொண்டு மாவட்ட எஸ்.பி. மற்றும் காவல் ஆணையர்களால் உருவாக்கப்படும் இந்தப் படை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், கூட்ட நெரிசல்களை சரிசெய்தல் போன்ற வேலைகளோடு இரவு ரோந்துப் பணியிலும் ஈடுபடுத்த தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இந்தப் படையில் இவ்வாண்டு பத்தாயிரம் பேரையும், அடுத்த ஆண்டு 15 ஆயிரம் பேரையும் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 10-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் தேர்வு குழுமம் நடத்தியது.

இந்தத் தேர்வு 31 மாவட்டங்கள், 6 மாநகரங்கள் ஆகியவற்றில் மொத்தம் 94 மையங்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 120 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவு தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் குழுமத்தின் www.tnpolice.gov.in என்ற இணையத்தளத்திலும்,ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையத்தளத்திலும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த இணையத்தளத்தைப் பார்த்து தேர்வின் முடிவைத் தெரிந்துக் கொள்ளலாம்.

இத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை நடைபெறும்.

இதற்கான அழைப்புக் கடிதம் இம் மாதம் 26ம் தேதிக்குள் கிடைக்கப்பெறாதவர்கள், அவர்கள் விண்ணப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அழைப்பு கடிதத்தின் நகலை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும அலுவலகத்தை 044-28413658 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

இத் தகவலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இத் தேர்வில் பிழையான கேள்விகள் இடம் பெற்றிருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்த எஸ்.விஜயலெட்சுமி, ஜே.ஆன்டனி கிளாரா ஆகியோருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 21 இல் நடத்திய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர். பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதை தனி நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமாகிறது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மறுதேர்வு நடத்துவதால் இந்தப் பணி மேலும் தாமதமாகும். 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும் செலவினத்தை ஏற்படுத்தும். அதோடு, முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். மறுதேர்வை சில தேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஆகவே, மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

அதையடுத்து எம்.ஜெய்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, பி வரிசை கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழை, அச்சுப்பிழை தான், இதனால் கேள்வியின் அர்த்தம் எவ்விதத்திலும் மாறுபடாது. இத்தேர்வை எழுதும் முதுகலைப் பட்டதாரிகள், எளிதில் புரிந்து கொள்ள முடியும். மறுதேர்வு நடத்துவது அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஆகவே, தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அதையடுத்து மனுதாரர்கள் இருவருக்கும் 21 மதிப்பெண்களை வழங்க வேண்டும். மனுதாரர்களுக்கு இரு பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உத்தரவிட்டனர். 

மேலும், தமிழ் பாடத்துக்கான திருத்தப்பட்ட ரேங்க் பட்டியலைத் தயாரித்து, டிசம்பர் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த துறைகள் சார்பில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தெற்காசியாவிலேயே இருக்கும் ஒரே கல்வியியல் பல்கலைக்கழகம் என்ற பெருமை கொண்டது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், 674 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.

கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்குவது, ஆண்டுக்கு ஆண்டு இணைப்பு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அந்த இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிப்பது, பாடத் திட்டங்களை வகுப்பது, இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி, முடிவுகளை அறிவிப்பது என்பன உள்ளிட்ட பணிகளை மட்டுமே இத்தனை ஆண்டுகளாக இந்தப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் இப்போது முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் எம்.ஃபில்., மற்றும் பிஎச்.டி. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் புதன்கிழமை அளித்த பேட்டி:

பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலை அறிவியல் துறை, மதிப்பு சார்ந்த கல்வித் துறை, கல்வி உளவியல் துறை, கல்வி தொழில்நுட்பத் துறை, பாடத் திட்டம் தயாரிப்பு மற்றும் நிர்வாகத் துறை, கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் துறை என 6 துறைகள் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளன.

இந்த துறைகள் சார்பில் வரும் 2014 ஜனவரி முதல் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எம்.ஃபில். படிப்பில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். பிஎச்.டி.-யை பொருத்தவரை ஒரு பேராசிரியர் 8 பேருக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.

இந்த படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பரில் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டு ஜூலை மற்றும் ஜனவரியில் வகுப்புகள் தொடங்கப்படும்.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள துறைகளில் 5 துறைகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு துறைக்கும் 2 இணைப் பேராசிரியர்கள், 4 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த 4 கல்வி வாரியத்தை கலைத்து விட்டு பொது கல்வி வாரியம் 2008ல் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது. இந்த முறை வரவேற்பு பெற்றது.

தமிழகத்தில் உள்ள 16 பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் சில பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்றதல்ல என்று நிராகரிக்கப்படுகிறது.

சில பட்ட படிப்புகள் இணையில்லை என்றும் நிராகரிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுபவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தொடர்ந்து ஒரே சமச்சீரான கல்வியை நடைமுறைபடுத்த அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம் நடந் தது. அதில், கல்லூரிகளில் சமச்சீர் கல்வி கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான துணை வேந்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சமச்சீர் கல்வி தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து அறிய உயர் கல்வி துறை திட்டமிட்டுள்ளது. எனவே விரைவில் சமச்சீர் கல்வியை கொண்டுவருவதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கனமழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 13 விடுமுறை

கனமழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 13 விடுமுறை அளிக்கப்படுவதாக, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். எனினும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் பின்பற்றப்படும்

அரசுப் பொதுத் தேர்வுகளான பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும். ஒவ்வொரு தேர்வும் முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு தபால்துறை மூலம் மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தபால்துறையின் பல்வேறு விதமான பார்சல்களுடன் விடைத்தாள் கட்டுகளும் பயணம் செய்யும்.

இவ்வாறு தபாலில் அனுப்பும்போது விடைத்தாள் கட்டுகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கடந்த ஆண்டு நடந்த 2 சம்பவங்கள் விடைத்தாள் கட்டுகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தபாலில் அனுப்பப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகள் சில மாயமாகிவிட்டன. இதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆர்.எம்.எஸ். மூலம் அனுப்பிய விடைத்தாள் கட்டுகள், ரயிலில் இருந்து கீழே விழுந்து சேதமடைந்தன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான விடைத்தாள் கட்டுகள் தேர்வுத்துறையைப் போல் இல்லாமல் தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மதிப்பீட்டு மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களை மனதில் கொண்டும், எதிர்காலத்தில் இதுபோன்று தவறுகள் நடந்துவிடக் கூடாது என்பதாலும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்களை தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு எடுத்துச் செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, விடைத்தாள் கட்டுகளை ஒவ்வொரு மையத்துக்கும் சென்று சேகரித்து பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டுவர மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சார்பில் ஒரு காப்பாளரும் (கஸ்டோடியன்), தேர்வுத்துறை சார்பில் பொறுப்பு அதிகாரியும் நியமிக்கப்படுவர். பல்வேறு தேர்வு மையங்களில் விடைத்தாள்களை சேகரித்து ஒரு குறிப்பிட்ட மையத்துக்கு கொண்டு வந்துவிடுவார்கள். அங்கிருந்து தனி வாகனங்களில் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படும்.

பழைய முறையில், விடைத்தாள் கட்டுகளை தபால் அலுவலகத்தில் புக்கிங் செய்வதை வைத்து அந்தக் கட்டுகள் எந்த மதிப்பீட்டு மையத்துக்கு செல்கின்றன என்பது தெரிந்துவிடும்.

ஆனால், புதிய முறையில் விடைத்தாள் கட்டுகள் அனுப்பப்படும் மதிப்பீட்டு மையம் எளிதில் வெளியே தெரியாது. விடைத்தாள் கட்டுகளின் பாதுகாப்புக்கான இந்த புதிய நடைமுறையை அடுத்த ஆண்டு மார்ச் பொதுத்தேர்வு முதல் அமல்படுத்த தேர்வுத்து றை முடிவு செய்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE