டி.இ.டி., தேர்வுக்கு, விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு முடிந்தது. ஆறு லட்சம் பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர். அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 15 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 17,18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை, டி.ஆர்.பி., நடத்துகிறது. இதற்காக, கடந்த மாதம், 17ம் தேதி முதல், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்கவும், நேற்று கடைசி நாள். இதனால், மாநிலம் முழுவதும், விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அனைத்து இடங்களிலும், கூட்டம் அலைமோதியது. சென்னை மாவட்டத்தில், 21 மையங்களிலும், விண்ணப்ப விற்பனை, விறுவிறுப்பாக நடந்தன. எத்தனை லட்சம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர் என்ற விவரம், சரியாக தெரியவில்லை. எனினும், ஆறு லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தனர், அவர்களில், ஆண்கள் எத்தனை பேர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை, ஓரிரு நாளில், டி.ஆர்.பி., வெளியிடும். 1,100 மையங்களில், இந்த தேர்வுகள் நடக்க உள்ளன.
- READ ALL POST...CLICK HERE...
- PAY COM COLLECTION 2017 DOWNLOAD
- பொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு
- மார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்
- மார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்
- TEACHERS GENERAL COUNSELLING 2017-2018 HELP CENTRE
- PROMOTION PANEL 2017-2018 DOWNLOAD
- MUTUAL TRANSFER ENTRY | VIEW
- TNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு
- TNTET |QP,KEY & STUDY MATERIALS DOWNLOAD.
- தலைப்பு செய்திகள் | Today's Headlines!!!
- MARCH-2017-SSLC-HSC-ANSWER KEY-QP DOWNLOAD
- MARCH-2018-SSLC-HSC-STUDY MATERIALS DOWNLOAD
- NEET EXAM 2017 NEWS
- IT FORM 2017
- TNSET-2017
- TNPSC ANNUAL PLANNER 2017-2018 DOWNLOAD
- POLICE EXAM-2017
- SBI PROBATIONARY OFFICERS RECRUITMENT 2017
- LAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்
- TNTET EXAM - 2017 NEWS
- KALVISOLAI R.H-2017 | கல்விச்சோலை RH 2017
- Police Recruitment - 2017
- TNPSC-TRB-ONLINE TEST MATERIALS
- ALL LATEST STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- tnpsc study materials,question paper with answers
- DSE | DGE | DEE | G.O | OTHER DOWNLOADS
- Teachers General Counselling 2016-2017
- ALL STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- CLASS 12, 10 | MARCH-2016 | Q.P | KEY ANSWER DOWNLOAD
- LATEST TOP HEADLINES 25 !!! CLICK HERE
- LATEST TOP HEADLINES 200 !!! CLICK HERE
- DSE | DGE | DEE | G.O | LATEST DOWNLOADS
- செய்தித் துளிகள்!

Sunday, 30 June 2013
டி.இ.டி., விண்ணப்ப தேதி முடிந்தது: ஆறு லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தனர், அவர்களில், ஆண்கள் எத்தனை பேர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை, ஓரிரு நாளில், டி.ஆர்.பி., வெளியிடும் என தெரிகிறது.
இந்திய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். அவருக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்திய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். அவருக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, தற்போது, அல்டமாஸ் கபீர் உள்ளார். தலைமை நீதிபதி கபாடியா, ஓய்வு பெற்ற பின், கடந்த ஆண்டு, செப்டம்பர், 29ம் தேதி, தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். இவர், ஜூலை, 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த நிலையில் உள்ள, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக, 19ம் தேதி, பதவியேற்கிறார்.ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில், முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில், முதலாவதாக, சட்டப் படிப்பு முடித்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
சென்னை ஐகோர்ட்டில், அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, பதவி வகித்தார். சிவில், கிரிமினல், கம்பெனி வழக்குகளில் ஆஜராகி வந்தார். சென்னை ஐகோர்ட் நீதிபதியாக, 1996ம் ஆண்டு, ஜனவரி, 8ம் தேதி, நியமிக்கப்பட்டார். 11, ஆண்டுகளுக்குப் பின், பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டுக்கு, 2007ம் ஆண்டு, ஏப்ரலில், இடமாற்றம் செய்யப்பட்டார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, 2007ம் ஆண்டு, ஆகஸ்ட்டில் நியமிக்கப்பட்டார். தற்போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். 40வது, தலைமை நீதிபதியாக, இவர் பதவியேற்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 2014ம் ஆண்டு, ஏப்., 26ம் தேதி வரை, தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
பல்வேறு முக்கிய வழக்குகளில், நீதிபதி சதாசிவம் தீர்ப்பளித்துள்ளார். டில்லியில் நடந்த, ஜெசிகலால் கொலை வழக்கில், மனுசர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உறுதி செய்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.,யின், முதல் தகவல் அறிக்கையை, ரத்து செய்தார்.ரிலையன்ஸ் வழக்கில், "ஜனநாயகத்தில், நமது நாட்டின் சொத்துக்கள், மக்களுடையது. மக்களின் நலன்களுக்காக, அந்தச் சொத்துக்களை, அரசு பேணுகிறது' என, தீர்ப்பளித்தார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், 10 பேருக்கு, ஆயுள் தண்டனையாக குறைத்தும், தீர்ப்பளித்தார்.மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தான், ஆயுத சட்டத்தின் கீழ், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை, ஐந்து ஆண்டுகளாக, குறைத்து தீர்ப்பளித்தார். பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும் என, நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், நிர்வாகத் தலைவர் என்கிற முறையில், பல மாநிலங்களுக்கும் சென்று, சட்டக் கல்வியறிவு முகாம்களை, கிராமப்புறப் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் துவங்கியுள்ளார்.
அரை நூற்றாண்டுக்கு பிறகு தமிழர் : சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை சட்டக் கல்லூரியில் படித்த, நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, 1951- 54ல் பதவி வகித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின், இரண்டாவது தலைமை நீதிபதியாக, பதவி வகித்தார். நீதிபதி பதஞ்சலி சாஸ்திரிக்குப் பின், தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர். இவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
அரசு பள்ளியில் படித்து பெரும் சாதனை நீதிபதி சதாசிவத்தின் தாய் பெருமிதம்:
"கான்வென்டில் படித்தால் தான் சாதிக்க முடியும் என, நினைத்திருந்த எங்களுக்கு, அரசுப் பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும் என, என் மகன் நிரூபித்துள்ளார்,' என, அவரது தாய், நாச்சாயி அம்மாள் பெருமிதம் தெரிவித்தார்.
இந்திய முதன்மை நீதிபதியாக சதாசிவம் தேர்வு செய்யப்பட்டது குறித்து, அவரது தாய், நாச்சாயி அம்மாள் கூறியதாவது:என் மகன் சதாசிவம், சிறுவயதில் இருந்தே படிப்பில் அதிக ஆர்வம் உடையவர். பள்ளிக்கூடத்துக்கு லீவு எடுக்காமல் செல்வார். அதையே, இன்று வரை தொடர்கிறார். விவசாய குடும்பம் என்பதால், குடும்ப சூழல் காரணமாக, ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். நாங்கள் படிக்காதவர்கள்.படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால், ஆசிரியரின் மீது பெரிதும் மரியாதை கொண்டவர். மேல்நிலைப் பள்ளியின், கணித ஆசிரியர் விஸ்வநாதன் மேல் பக்தி கொண்டவர். அவர், படிப்பின் மேல் வைத்த மரியாதை, இன்று, பெரிய பதவிகளை கொடுத்துள்ளது. கான்வென்டில் படித்தவர்கள் தான் பெரிய பதவிக்கு வரமுடியும் என, நினைத்த எங்களுக்கு, அரசு பள்ளியில் படித்தாலும், வாழ்வில் உயரலாம் என, நிரூபித்துள்ளார்.சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது, திருமணம் செய்து வைத்தோம். லீவு எடுக்காமல் பணியாற்றுவதால், என்னை பார்க்க மட்டும் சொந்த கிராமத்துக்கு வருவார். தற்போது சண்டிகரில் பணியாற்றுகிறார். 19ம் தேதி, பதவியேற்பு விழாவுக்கு, 17ம் தேதியே நாங்கள் கிளம்பி, குடும்பத்துடன் டில்லிக்கு செல்கிறோம். சுயமுயற்சியால், என் மகன் வெற்றி பெற்றார்.என் மகனை பள்ளியில் சேர்த்ததுடன், அவராகவே ஒவ்வொன்றாக தேர்வு செய்து படித்தார். என் மகன், இந்தியாவின் முதன்மை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டது, எங்கள் அனைவருக்கும் பெருமிதமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
ரேஷன் கடைகள் இனி, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும்; வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, வரும், 7ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
"ரேஷன் கடைகள் இனி, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும்; வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும்' என்ற தமிழக அரசின் அறிவிப்பு, வரும், 7ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. தமிழகத்தில், 33,521 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 35 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர் பணியாற்றுகின்றனர். தற்போது, ரேஷன் கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயங்குகின்றன; ஞாயிறு, வாராந்திர விடுமுறை நாள். பெரும்பாலான குடும்பங்களில், கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். பல தொழில் நிறுவனங்களில், ஞாயிற்றுக்கிழமை, வார விடுமுறை நாளாக உள்ளது. இதனால், பெண்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர், ரேஷன் கடைக்கு சென்று, பொருட்கள் வாங்க சிரமப்பட்டனர்.
இந்நிலையில், "ரேஷன் கடைகள் இனி, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும். மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை, விடுமுறை நாளாக இருக்கும்' என, முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஏப்ரல் மாதம், சட்டசபையில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு, பொதுமக்களிடம் அதிக வரவேற்பு காணப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகி பல நாட்களாகியும், செயல்பாட்டிற்கு வராதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த புதிய நடைமுறை வரும், 7ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இதுகுறித்து, உணவு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "புதிய நடைமுறையில், விடுமுறை விடுவது குறித்த அரசாணை, சில தினங்களுக்கு முன் வெளியானது. ஜூலை மாதத்தில் இருந்து, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில், ரேஷன் கடைகள் செயல்படும். இதற்கு மாற்றாக, வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை விடப்படும்' என்றார்.
ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு
ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு, மறுகூட்டல் முடிவுகளை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
தேர்வுத்துறை அறிவிப்பு: சமீபத்தில், ஆசிரியர் கல்வி முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பட்டய தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிவிற்குப் பின், பல மாணவர், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள், சம்பந்தபட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்குச் சென்று, மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
ஆதிதிராவிடர் மாணவருக்கு கட்டண விலக்கு: கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு
கலந்தாய்வு மூலம், கல்லூரிகளில் சேரும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு, சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு மற்றும் அரசு நிர்ணயிக்கும் கட்டணம், அரசால் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள, அனைத்து சுயநிதி கல்வி நிறுவனங்களில், இலவசம், கட்டணம், நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ, ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு, சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு மற்றும் அரசு நிர்ணயிக்கும் கட்டணம், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், அரசால் செலுத்தப்படும்.
இவ்விவரம், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது, கலந்தாய்வு மூலம், கல்லூரியில் சேர்க்கை நடைபெறும் பொறியியல், மருத்துவம், கல்வியியல் மற்றும் இதர படிப்புகளுக்கு, கட்டணம் வசூலிக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய சுயநிதி கல்வி நிறுவனங்கள், தேவையான கட்டணங்களை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில், நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
கட்டண விலக்கு பெற விரும்பும் மாணவர், கலந்தாய்வின்போது, அசல் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான அரசாணையை, www.tn.gov.in மற்றும் www.tnteu.in இணையதளங்களில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக (SSA) மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனெவே அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக பணிபுரிந்த திரு.முகமது அஸ்லாம், இ.ஆ.ப அவர்களை சிறுபான்ன்மை நலத்துறை ஆணையாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
அரசு” தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., ஆகிய இரு அமைப்புகளும், தமிழக அரசு துறைகளில், புதிய நியமனங்களை செய்வதில், பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, இரு அமைப்புகளும், தலா, 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியை செய்து வருகின்றன.நடப்பு ஆண்டிலும், வரும் செப்டம்பருக்குள், 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில், இரு அமைப்புகளும், மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
குரூப்-4 தேர்வு மூலம், 5,566 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட் 25ல், போட்டித்தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வை, 6 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில், 5,566 பேரும் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை, மாதச்சம்பளம் கிடைக்கும்.இதேபோல், சுகாதாரத்துறையில், 2,594 உதவி மருத்துவர்களை நியமனம் செய்ய, செப்டம்பர், 22ம் தேதி, போட்டித்தேர்வை நடத்துகிறது. இதனை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவை மட்டுமில்லாமல், பல்வேறு குறைந்தபணியிடங்களுக்கான தேர்வுகளும், தொடர்ந்து நடக்க உள்ளன.
அரசு பள்ளிகளில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும்முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகளில், டி.ஆர்.பி., ஈடுபட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம், 15 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு, ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வை, 7 லட்சம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு விண்ணப்பிக்க, நாளை ஜூலை 1ம் தேதி கடைசி நாள். அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,900 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வை, ஜூலை, 21ம் தேதி நடத்துகிறது. இந்த தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். மேலும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,100உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகளிலும், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.மேலும், அரசு பள்ளிகளில், தையல், இசை, உடற்கல்வி ஆசிரியர்களும், நியமிக்கப்பட உள்ளனர். வரும் செப்டம்பருக்குள், இந்த அனைத்து பணி நியமனங்களும் முடிக்கப்பட்டுவிடும் என்பதால்,வேலை வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள பட்டதாரிகள், உற்சாகம் அடைந்து உள்ளனர்.அதே நேரத்தில், பணி நியமனங்களே நடக்காமல் உள்ள, இதர துறைகளில் உள்ள, காலி பணியிடங்களை நிரப்பவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பட்டதாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Friday, 28 June 2013
NOTIFICATION RELEASED FOR ADMISSIONS INTO IGNOU B.Ed., & M.Ed., COURSES
For January 2014 cycle admissions open for Master in Education (M.Ed.,) & B.Ed., in Indira Gandhi National Open University.
Eligibility for M.Ed., Course:
1. B.Ed. with 55% marks.
1. B.Ed. with 55% marks.
2. Two years teaching/professional experinece after completion of B.Ed programme in a Government/Government recognized school/NCTE recognized teacher education/research institution in education.
Fee Particulars:
Rs. 1000/- (Including Registration Fee) (Rs. 1000/- at counter and Rs. 1050/- by post).
The student Handbook & Prospectus can be obtained from all IGNOU's Regional Centres or from Registrar (SRD) IGNOU, Maidan Garhi, New Delhi - 110 068.
Fee Particulars:
Rs. 1000/- (Including Registration Fee) (Rs. 1000/- at counter and Rs. 1050/- by post).
The student Handbook & Prospectus can be obtained from all IGNOU's Regional Centres or from Registrar (SRD) IGNOU, Maidan Garhi, New Delhi - 110 068.
Important Dates:
- Last date to submitting filled-in application form to the concerned Regional Centre: 8th August 2013
- Date of Entrance Examination: 8th September 2013
Important Downloads:
- M.Ed., -2014 Prospectus - Click Here
- Corrigendum For M.Ed., Course - Click Here
- B.Ed., - 2014 Prospectus Click Here
- Corrigendum For B.Ed., Course - Click Here
Details of IGNOU, Program, Regional Centres, etc., available at www.ignou.ac.in .
அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் சோ.செல்வம் வெளியிட்டுள்ல செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வானது எதிர்வரும் 10.07.2013 அன்று நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வு அரசாணை எண்.29 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள் 18.06.2013இல் உள்ள நெறிமுறைகளின்படி நடைபெறும் எனவும், பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களை 05.07.2013ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்தில் உரிய வழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிளஸ்–1 படிக்கும் 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ்–1 படிக்கும் 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. அதற்காக உதிரிபாகங்களை கொண்டு சைக்கிள்களை உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் எழுத படிக்க தெரியாதவர்கள் யாரும் இருக்கக்கூடாது, உயர்கல்வியை எல்லோரும் படிக்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழக அரசு மாணவ–மாணவிகளுக்கு பல்வேறு விலை இல்லா திட்டங்களை உருவாக்கி அவற்றை வழங்கி வருகிறது. பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், கலர் பென்சில்கள், புத்தகப்பைகள், சைக்கிள்கள், லேப்டாப், சீருடை முதலியவற்றை வழங்கி மதியம் சாப்பிட சத்துணவையும் வழங்கி வருகிறது.
தற்போது பிளஸ்–1 வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்புகளில் படிக்கும் 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் ரூ.200 கோடி செலவில் வழங்கப்பட உள்ளன.
அதற்காக சைக்கிள்கள் உதிரிபாகங்களாக வாங்கப்பட்டு அவை லாரிகளில் பள்ளிக்கூடங்களில் வந்து இறங்கி உள்ளன. ஒரு மாவட்டத்தில் கொடுக்கவேண்டிய பள்ளிகளுக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் வைத்து சைக்கிள் உதிரி பாகங்களை இணைத்து சைக்கிள்கள் தயாராகும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையை பொறுத்தவரை சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட பல பள்ளிகளில் இந்த பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் தலா 100–க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் முழுமையாக்கப்பட்டு உள்ளன.
உருவாக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் வரை வெயிலிலும், மழையிலும் நிறுத்தாமல் ஏதாவது கூரையின் கீழ் நிறுத்தினால் நல்லது என்று பொது நலம் கொண்டவர்கள் கூறுகிறார்கள்.
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதுகலைஆசிரியர் போட்டித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்க மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இந்த முறை இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும் எனவும், தபாலில் அனுப்பப்படாது எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Tuesday, 25 June 2013
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு 24.06.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும் என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி தேதி.
டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை, 6 லட்சத்தை எட்டியுள்ளது; கடைசி நாளான, ஜூலை, 1ம் தேதிக்குள், மேலும், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. அரசு பள்ளிகளில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, மூன்றாவது முறையாக, வரும் ஆக., 17, 18 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வு (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடக்கிறது. இதற்கு, கடந்த, 17ம் தேதி முதல், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த வாரம் வரை, 6 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி நாளான, ஜூலை, 1ம் தேதிக்குள், மேலும், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களும், வந்தபடி உள்ளன. 7 லட்சம் முதல், 7.5 லட்சம் பேர் வரை, தேர்வை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வு, ஆக., 17ம் தேதியும், பட்டதாரி ஆசிரியருக்கான, இரண்டாம் தாள் தேர்வு, 18ம் தேதியும் நடக்கின்றன. இரு தேர்வுகளையும், 1,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில் நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. கடந்த தேர்வு, 1,072 மையங்களில் நடந்தது. இந்த எண்ணிக்கைக்கு குறையாமல், தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தேர்வு மூலம், 15 ஆயிரம் ஆசிரியர், தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிய ஆசிரியர் அனைவரும், அக்டோபருக்குள், பணி நியமனம் செய்யப்படுவர்.
மீண்டும் பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்ற, மாணவ, மாணவியர், முதல்வரிடம் பரிசு பெற முடியாததால், கடும் ஏமாற்றமடைந்தனர். முதல்வர் பரிசு வழங்குவார் எனக்கூறி, அதிகாரிகள் நாள் முழுக்க காக்க வைத்து, திருப்பி அனுப்பியதால், பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து, தினமலர் நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதை அறிந்த முதல்வர், மீண்டும் அவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா நடத்த உத்தரவிட்டுள்ளார்; இவ்விழா, 26ம் தேதி, நடைபெற உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில், தமிழை முதல் பாடமாகப் படித்து, பொதுத்தேர்வில், மாநில அளவில், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும், மாணவ, மாணவியருக்கு, ரொக்கப்பரிசு வழங்குவதுடன், அவர்களின், உயர்கல்வி செலவை, தமிழக அரசே ஏற்கிறது.
எண்ணிக்கை அதிகம்: ஒவ்வொரு ஆண்டும், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும், மாணவ, மாணவியர், சென்னை கோட்டைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு, முதல்வர், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குவார். வழக்கமாக, இரண்டு வகுப்பிலும் சேர்த்து, முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும், மாணவர்கள் எண்ணிக்கை, 25க்குள் இருக்கும். ஆனால், இம்முறை, 10ம் வகுப்பில், 198 மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், 13 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர். அனைவருக்கும், முதல்வர் பரிசு வழங்கும் விழா, கடந்த, 19ம் தேதி காலை, கோட்டையில் நடைபெறும், என, அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவியர், பல்வேறு மாவட்டங்களிலிருந்து, அழைத்து வரப்பட்டிருந்தனர்.
ஏமாற்றம்: ஆனால், காலையில் விழா நடைபெறவில்லை. பகல், 2:30 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, பிளஸ் 2 வகுப்பில், முதல், மூன்று இடங்களைப் பிடித்த, 13 மாணவர்கள், 10ம் வகுப்பில், முதலிடம் பிடித்த, ஒன்பது பேருக்கு மட்டும் பரிசு வழங்கினார். பத்தாம் வகுப்பு தேர்வில், இரண்டாமிடம் பிடித்த, 52 மாணவர்கள், மூன்றாமிடம் பிடித்த, 137 õணவர்களுக்கு, கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் பரிசு வழங்குவார் என, அதிகாரிகள் அறிவித்தனர். அவரும் மாலை வரை வரவில்லை. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்தனர். லர் பரிசு வேண்டாம் என புறப்பட்டு சென்றனர். இறுதியாக, அதிகாரிகள் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
தினமலர் செய்தி எதிரொலி: இதுகுறித்து, தினமலர் நாளிதழில், 20ம் தேதி விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் அதிருப்தியிலிருக்கும் தகவல், முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து, மீண்டும் விழா நடத்தும்படியும், அதில், தான் கலந்து கொள்வதாகவும், அதிகாரிகளிடம் ஜெ., தெரிவித்தார். அதை ஏற்று, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த, மாணவ, மாணவியருக்கு, மீண்டும் பரிசு வழங்கும் விழா நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்விழா, 26ம் தேதி காலை, சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. விழாவில், அனைத்து மாணவ, மாணவியருக்கும், முதல்வர், தன் கையால் பரிசு வழங்க உள்ளார். இத்தகவலை, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறப்பு பரிசு: பெரும்பாலான மாணவ, மாணவியருக்கு, ஏற்கனவே பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு சிறப்புப் பரிசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிசு விவரத்தை, அதிகாரிகள், சஸ்பென்சாக வைத்துள்ளனர். கடந்த முறை போன்று, இம்முறை குளறுபடி ஏற்படாமலிருக்க, விழா ஏற்பாடுகளை கவனிக்கும் பணியில், அனைத்து கல்வித்துறை இயக்குனர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு இயக்குனருக்கும், ஆறு மாவட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அவரது உத்தரவை, சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். அனைத்து மாணவ, மாணவியரையும், சென்னை வரவழைத்து, பாதுகாப்பாக தங்க வைத்து, விழா முடிந்து, அவர்கள் ஊர் திரும்ப, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பி.எஸ்.சி. நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கடைசி தேதி ஜூலை 5.
பி.எஸ்.சி. நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் அரசு மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 5–ந்தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.சி. நர்சிங் (4 வருடம்), பி.பார்ம் (4 வருடம்), பிசியோதெரபி (பி.பி.டி.) (4வருடம்), பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய்க் குறியியல் பட்டப்படிப்பு) (4 வருடம்), பி.எஸ்.சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி (பி.எஸ்.சி. ஐ.எம்.) (3 வருடம்), பி.எஸ்.சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி (பி.எஸ்.சி. ஆர்.டி.) (3 வருடம்), பி.ஓ.டி (4 வருடம்) போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று முதல் தொடங்கியது. இந்த விற்பனை ஜூன் 4–ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த படிப்பில் சேர பிளஸ்–2 படிப்பில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதப்பாடங்களை கொண்ட பிரிவில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு மருத்துவக்கல்லூரிகளில் 180 பி.எஸ்.சி. நர்சிங் இடங்களும், 120 பி.பார்ம் இடங்களும், 25 பி.ஏ.எஸ்.எல்.பி. இடங்களும், 60 பி.எஸ்.சி. ஐ.எம். இடங்களும், 60 பி.எஸ்.சி. ஆர்.டி. இடங்களும் உள்ளன.
இந்த மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்களை பெற, செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை–10 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டி.டி. எடுத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் கொடுத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் தங்கள் ஜாதி சான்றிதழ்களின் உண்மை நகல் சான்றொப்பம் பெறப்பட்ட 2 நகல்களை கொடுத்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
இந்த விண்ணப்பங்கள் சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, செயலாளர், தேர்வுக்குழு, 162, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை–6000 010. என்ற முகவரியில் ஜூலை 5–ந்தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் விண்ணப்பிக்கும் காலம் முதல் கலந்தாய்வு முடிவுகள் தெரியும் வரை தங்கள் விண்ணப்பங்கள் பற்றிய முழு விவரங்களை http://www.tnhealth.org/www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அவ்வப்போது பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Sunday, 23 June 2013
செய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தி என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
செய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தி என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது "பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு போதிய அளவில் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் எனவும் நீதிபோதனை, உடல்நலக்கல்வி , கலைக்கல்வி, வாழ்க்கைக்கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, முதல் உதவி மற்றும் தற்காப்பு விதிகள் இன்றைய காலக்கட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு அவசியம் எனவும், பள்ளி செயல்பாடுகள் மாணவர்களுக்கு முழுமையான கல்வியினை அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடும் தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை எண். 264 னை வெளியிட்டது.
இவ்வரசாணையில் காலை வழிபாட்டுக்கூட்டம் நடத்தப்பட வேண்டிய முறை மற்றும் தியானம், எளிய உடற்பயிற்சிகள் மற்றும் யோகா, நீதிபோதனை உள்ளிட்ட வகுப்புகள் மற்றும் மதிய இடைவேளைக்கு பின்னர் வாய்ப்பாடு சொல்லுதல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதைக்கேட்டு எழுதுதல் மற்றும் வெள்ளிக்கிழமை இறுதிவகுப்பில் மாணவர்களின் தனித்திறன் செயல்பாடுகள் போன்றவை நடைபெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை செயல்படுத்துவதற்காக பாடவேளை நேரங்களில் மாற்றம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கூறியதன்பேரில் அவர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து பாடவேளைகளை மாற்றி அமைக்கப்பட்டது. அதற்காக ஒரு மாதிரி பாட காலஅட்டவணை தயார் செய்யப்பட்டது. இதேபோன்று பாடவேளை நேரங்களை பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரத்திற்குட்பட்டு மாற்றியமைத்துக்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பாட காலஅட்டவணையில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டன எனவே தற்பொழுது செய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தியாகும். பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரம் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பள்ளிகள் வழக்கமாக தற்பொழுது செயல்படும் நேரங்களிலேயே செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது."
Wednesday, 19 June 2013
தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 4,431 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 4,431 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. ஆனால், அந்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பேர் மட்டுமே பட்டயப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பதாரர்களில் 4,000 பேர் மாணவிகள், 431 பேர் மாணவர்கள் ஆவர். பெண்களே இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 3,800 பேர் மட்டுமே இந்தப் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
2 லட்சத்துக்கும் அதிகமானோர் காத்திருப்பு: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள்தான் தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். இந்தப் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மற்றும் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
ஆசிரியர் பட்டயப் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்கெனவே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.
அதோடு, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் அதிக காலியிடங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதும் இந்தப் படிப்பில் ஆர்வம் குறைவதற்கு ஒரு காரணம் என கல்வித்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆண்டுதான் சுமார் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். எனவே, புதிதாக பெரிய எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் இப்போதைக்கு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் இடையே இந்தப் படிப்புக்கு வரவேற்பு மிகவும் குறைவாக உள்ளது. ஆசிரியர் பட்டயப் படிப்பு வழங்குவதற்காக தமிழகத்தில் இப்போது 39 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் மட்டும் 2,720 இடங்கள் உள்ளன. இதுதவிர 500-க்கும் அதிகமான அரசு உதவி பெறும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு மட்டும் சுமார் 30 ஆயிரம் இடங்கள் உள்ளன.
இதில் கலந்தாய்வுக்கு மட்டும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கலந்தாய்வின் மூலம் இந்தப் படிப்பில் சுமார் 2 ஆயிரம் மாணவியர் மட்டுமே சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மூடப்படும் பயிற்சி நிறுவனங்கள்: ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு வரவேற்பு இல்லாததாலும், ஏற்கெனவே தேவைக்கும் அதிகமானோர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளதாலும், ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் தங்களது அங்கீகாரத்தை ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திடம் திருப்பி ஒப்படைத்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் அதிகமான பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வரும் நிலையில், பி.எட். கல்லூரிகளைத் தொடங்குவதற்கு தனியாரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு: இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்தப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மே 17 முதல் ஜூன் 12 வரை விநியோகம் செய்யப்பட்டன. இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 மாணவர்கள் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று ரேங்க் பெற்ற 13 மாணவ, மாணவியர் மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் ரேங்க் பெற்ற 9 மாணவியருக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டுப் பத்திரத்தையும், ரொக்கப் பரிசையும் வழங்குவார் எனத் தெரிகிறது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா சான்றிதழ்களையும், ரொக்கப் பரிசையும் வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று ரேங்குகளை 198 மாணவ, மாணவியர் பெற்றனர். எனவே, அவர்கள் அத்தனை பேருக்கும் முதல்வரே நேரில் சான்றிதழ்களை வழங்குவது குறித்து முடிவுசெய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று ரேங்குகள் பெற்ற 13 மாணவ, மாணவிகள் மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் ரேங்க் பெற்ற 9 மாணவிகள் மட்டும் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்திக்க அழைத்துச்செல்லப்பட உள்ளனர். மாநில அளவில் முதல் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
பள்ளிக்கூடங்களில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் வேலைவாய்ப்பை பதிவு செய்துகொள்ளலாம்
சமீபத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். இந்த பதிவு ஜூன்மாதம் 20–ந்தேதி முதல் 15 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் என்றைக்கு பதிவு செய்தாலும் 20–ந்தேதி பதிவு செய்ததாக, வேலைவாய்ப்பு பதிவு அட்டை வழங்கப்படும். பதிய செல்லும்போது குடும்ப அட்டை, சாதி சான்று, தாய், தந்தை பெயர் முகவரி ஆகியவற்றை கொண்டுசெல்லவேண்டும். இந்த தகவலை சென்னை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–
தமிழ்–ஆங்கிலம்
பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
பி.ஏ. ஆங்கிலம் – பி.ஏ. கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் ஆங்கிலம், பி.ஏ. பங்ஷனல் இங்கிலீஷ், பி.ஏ. சிறப்பு ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் (தொழிற்கல்வி) (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்)
கணிதம்–இயற்பியல்
பி.எஸ்சி. கணிதம் – பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. கணிதம் (கம்ப்யூட்டர் பயன்பாடு)
பி.எஸ்சி. இயற்பியல் – பி.எஸ்சி. இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எட். படிப்பில் இயற்பியல் படித்திருக்க வேண்டியது கட்டாயம், பி.எஸ்சி. இயற்பியல் (சி.ஏ.) (கோவை பாரதியார் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. இயற்பியல் (இன்ஸ்ட்ருமென்டேஷன் டிப்ளமோ கட்டாயம்) (பாரதியார் பல்கலைக்கழகம்)
தாவரவியல்–விலங்கியல்
பி.எஸ்சி. தாவரவியல் – ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி, லைப் சயின்ஸ் பட்டம் (பிளான்ட் சயின்ஸ், மைக்ரோ–பயாலஜி, பயோ–டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று சிறப்பு பாடம்) (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. பிளான்ட் பயோ–டெக்னாலஜி (சென்னை பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. சுற்றுச்சூழல் உயிரியல் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. பிளான்ட் பயாலஜி, பயோ–டெக்னாலஜி (பாரதியார் பல்கலைக்கழகம்)
பி.எஸ்சி. விலங்கியல் – ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. லைப் சயின்ஸ் பட்டம் (அனிமல் சயின்ஸ் சிறப்பு பாடம்) (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி சுற்றுச்சூழல் விலங்கியல் (சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்)
வரலாறு
பி.ஏ. வரலாறு – பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா (பாரதியார் பல்கலைக்கழகம்)
மேற்கண்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு
மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களில், 120 பேரின் தரவரிசை மாறியுள்ளதாக, திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில், 5,726 பேர், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், தாங்கள் பெற்ற மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவும் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில், 3,291 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவால், மருத்துவ தரவரிசை பட்டியலில், 120 பேருக்கு மட்டும், அவர்களின் தரவரிசையில், மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய படிப்புகளுக்கான திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், கூடுதல் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம். முதுநிலை மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் விவரங்களையும், விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட இணையதளத்தில் பெறலாம்.
எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் 21, 22–ந்தேதிகளில் வழங்கப்படுகிறது
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலானவர்கள் மீண்டும் இந்த வருடம் படிப்பை தொடர வாய்ப்பளிக்கும் வகையில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் 21 மற்றும் 22 தேதிகளில் வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் வேப்பேரி பென்டிங் பள்ளியிலும், திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப்பள்ளியிலும், மைலாப்பூர் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியிலும், எழும்பூர் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் வழங்கப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு செயிண்ட் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளியிலும், காஞ்சீபுரம் அரசு சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் கவுடி மேல்நிலைப்பள்ளியிலும், மீஞ்சூர் டி.வி.எஸ்.ரெட்டி மேல்நிலைப்பள்ளியிலும் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.
தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 17–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பங்களை வாங்கிய வண்ணம் உள்ளனர்.
விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50 ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர்கள், பழங்குடியின வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். தேர்வு கட்டணத்தை விண்ணப்பத்துடன் கொடுக்கப்படும் செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கி கிளையிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ அல்லது கனரா வங்கியிலோ செலுத்தலாம்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்குச் செல்லும்போது விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலையும் வைத்துக்கொள்ள வேண்டும். கையெழுத்திடப்பட்டு கொடுக்கப்படும் அந்த ஜெராக்ஸ் பிரதி தான் ஒப்புகைச்சீட்டாக கருதப்படும்.
இதற்கிடையே, விண்ணப்பம் வாங்கிய பள்ளியின் அதிகார எல்லைக்குள் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் (டி.இ.ஓ. ஆபீஸ்) மட்டும்தான் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமா? அல்லது எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாமா? என்ற கேள்வி ஒருசில விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
காரணம் சில விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை எங்கேயாவது ஒரு பள்ளியில் வாங்கி இருப்பார்கள். அவர்களின் வீடு வேறு மாவட்டத்தில் இருக்கக்கூடும். இதுபோன்ற நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கென்று விண்ணப்பம் வாங்கிய பள்ளிக்கு உள்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்திற்கு செல்வதால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். தமிழகம் முழுவதும் 66 மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களுமே கடைசியில் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு தான் வரும்.
இந்த பிரச்சினை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் அறிவொளியிடம் கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உட்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்தில்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. வசதிக்கு ஏற்ப எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். எங்கு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் என்றெல்லாம் பார்க்காமல் அனைத்து டி.இ.ஓ. அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கிக்கொள்வார்கள்’’ என்று தெரிவித்தார்.
என்ஜினீயரிங் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் தேவை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெறுவதற்கு தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ) அங்கீகாரம் தேவை இல்லை என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். காலேஜ் ஆப் என்ஜினீயரிங் என்ற கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– எங்கள் கல்லூரி, ஏ.ஐ.சி.டி.இ.யின் அங்கீகாரம் பெற்று கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பையும் பெற்றுள்ளோம்.
ஆனால் இந்த கல்வியாண்டுக்கான (2013–2014) அங்கீகாரத்தை ஏ.ஐ.சி.டி.இ. வழங்கவில்லை. அங்கீகார கடிதத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்து தற்காலிக இணைப்பு அனுமதியை கடந்த ஆண்டு ஏ.ஐ.சி.டி.இ. வழங்கியது. ஒரு ஆலோசனை அமைப்பாகத்தான் ஏ.ஐ.சி.டி.இ. செயல்படுகிறது என்றும், எந்த ஒரு அனுமதியை வழங்கும் அதிகாரம் அந்த அமைப்புக்கு இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
எனவே பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதி பெறுவதற்கு ஏ.ஐ.சி.டி.இ.யின் அங்கீகாரம் தேவை என்பதை வலியுறுத்தாமல், இணைப்பை வழங்க உத்தரவிட வேண்டும்.எங்கள் கல்லூரிக்கு இந்த ஆண்டுக்கான அண்ணா பல்கலைக்கழகத்துடனான இணைப்பை வழங்கினால்தான் எங்கள் கல்லூரிக்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த முடியும். எனவே எங்கள் கல்லூரிக்கு இணைப்பை அனுமதிக்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசீதரன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:– மனுதாரர் கல்லூரி மே மாதத்தில் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ளனர். ஏ.ஐ.சி.டி.இ.யின் ஒப்புதல் உத்தரவு வேண்டும் என்பதை வலியுறுத்தாமல், அதே நேரத்தில் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருந்தால், கல்லூரியின் விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ததற்கான அறிக்கையையும் மனுதாரர் கல்லூரி தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து இணைப்பு அனுமதி தொடர்பான உத்தரவை அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங்கில் மனுதாரர் கல்லூரியை அனுமதிப்பது தொடர்பாக 28–ந் தேதிக்குள் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.மனுதாரர் தரப்பில் வக்கீல் கந்தன் துரைசாமி ஆஜரானார்.
Monday, 17 June 2013
வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்
ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வின் போது ஏற்படும், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, வட மாவட்டங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், விருதுநகர் மாவட்டம், 95.87 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் முதலிடம் பெற்றது. வட மாவட்டங்களான வேலூர், 81.13 சதவீதம், விழுப்புரம், 78.03, அரியலூர், 74.94, கடலூர், 73.21, திருவண்ணாமலை மாவட்டம், 69.91 சதவீதம் பெற்று, முறையே கடைசி ஐந்து இடங்களைப் பிடித்தன.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கன்னியாகுமரி மாவட்டம், 97.29 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. தூத்துக்குடி 95.42 சதவீதத்துடன் இரண்டாமிடமும், ஈரோடு 95.36, திருச்சி 95.14 சதவீதத்துடன் முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்தன.
அரியலூர், 82.41, விழுப்புரம், 81.99, நாகை, 79.53, திருவண்ணாமலை, 78.09, கடலூர் மாவட்டம், 75.25 முறையே கடைசி ஐந்து இடங்களில் உள்ளன. பிளஸ் 2, 10ம் வகுப்பு இரண்டிலுமே, வட மாவட்டங்கள் தொடர்ந்து தேர்ச்சி சதவீதத்தில் பின்தங்கியே வருகின்றன.
இந்த மாவட்டங்களில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிப்பொறியியல் உள்ளிட்ட பிரதான பாடங்களுக்கான, ஆசிரியர்கள் பற்றாக்குறை, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் பற்றாக்குறைகளைத் தீர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்கிறது.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட, மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் குறைவாக இருந்தனர். தகுதித் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெறும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அவர்கள் அடுத்த கல்வியாண்டில் நடக்கும் இடமாறுதல் கலந்தாய்வில், தங்கள் சொந்த மாவட்டங்களுக்குச் சென்று விடுவதால், வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனால், மாணவர்கள் இயற்பியல், உயிரியல், வேதியியல், கணக்கு பாடங்களில் மட்டுமல்ல மொழிப் பாடங்களிலும், தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைவதோடு, சொற்ப மதிப்பெண்களில் தேர்ச்சி பெறுவதால், பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட, உயர் கல்வியில் சேர முடியாமல், வட மாவட்ட மாணவர்கள் ஏமாற்றத்தை சந்திக்கின்றனர்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்ட தேசிய தரம் வாய்ந்த உயர் கல்வி நிலையங்களை, நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
TAMIL G.K 0981-1000 | TNPSC | TRB | TET | 80 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 0981-1000 | TNPSC | TRB | TET | 80 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
981. 9-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளிசை அளபெடையின் வேறுபெயர் என்ன?
Answer | Touch me
இசை நிறை அளபெடை
982. 9-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளி;ல் ஓசை குறைந்தால் மெய் எழுத்துகளும் அளபெடுக்கும், அவை _______ எனப்படும்.
Answer | Touch me
ஒற்றளபெடை
983. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“உறாஅர்க் குறுநோய் உரைப்பாய்” இத்தொடரில் _______ அளபெடை வந்துள்ளது.
Answer | Touch me
செய்யுளிசை அளபெடை
984. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“உடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு” இக்குறட்பாத் தொடரில் _______ அளபெடை வந்துள்ளது.
Answer | Touch me
இன்னிசை அளபெடை
985. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“வரனசைஇ இன்னும் உள்ளேன்” - இத்தொடரில்_______ அளபெடை வந்துள்ளது.
Answer | Touch me
சொல்லிசை அளபெடை
986. 9-ஆம் வகுப்பு | தமிழ் |எழுத்துக்களின் பிறப்பை எத்தனை வகையாகப் பிரிப்பர்?
Answer | Touch me
இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு
987. 9-ஆம் வகுப்பு | தமிழ் |எழுத்துக்கள் தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை _______ என்பர்.
Answer | Touch me
இடப்பிறப்பு
988. 9-ஆம் வகுப்பு | தமிழ் |உதடு முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதை _______ என்பர்.
Answer | Touch me
முயற்சிப் பிறப்பு
989. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஒலி எழக் காரணமான காற்று நிலைபெறும் இடங்களை _______ என்பர்.
Answer | Touch me
காற்றறைகள்
990. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஒலி எழுவதற்குத் துணை செய்யும் உறுப்புகளை _______ என்பர். ஒலிப்புமுனைகள்
Answer | Touch me
991. 9-ஆம் வகுப்பு | தமிழ் |பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், இடையின எழுத்துகள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?
Answer | Touch me
கழுத்து
992. 9-ஆம் வகுப்பு | தமிழ் |மெல்லின எழுத்துகள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?
Answer | Touch me
மூக்கு
993. 9-ஆம் வகுப்பு | தமிழ் |வல்லின எழுத்துக்கள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?
Answer | Touch me
மார்பு
994. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஆய்தமாகிய சார்பெழுத்து எதை இடமாகக் கொண்டு பிறக்கிறது?
Answer | Touch me
தலை
995. 9-ஆம் வகுப்பு | தமிழ் |கழுத்தினின்று பிறப்பவை ______ என்பர்.
Answer | Touch me
இடையினம்
996. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“சுவிட்ச்” என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?
Answer | Touch me
பொத்தான்
997. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “கிரைண்டர்” என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?
Answer | Touch me
அரைவை இயந்திரம்
998. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“டீ” என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?
Answer | Touch me
தேநீர்
999. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“ஐஸ்வாட்டர்” என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?
Answer | Touch me
குளிர்நீர்
1000. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“உன்னையே நீ அறிவாய்” யார் கூறியது?
Answer | Touch me
சாக்ரடீஸ்
TAMIL G.K 0961-0980 | TNPSC | TRB | TET | 79 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 0961-0980 | TNPSC | TRB | TET | 79 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
961. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“எண்பது விழுக்காடு” அளவிற்குத் திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி எது?
Answer | Touch me
தமிழ்
962. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நம் தாய் மொழியாம் தமிழ் எவ்வாறு ஒளிர்கிறது?
Answer | Touch me
நம் தாய்மொழியாம் தமிழ் செவ்வியல் மொழியாய் ஒளிர்கிறது
963. 9-ஆம் வகுப்பு | தமிழ் |பிற மொழிகள் தோன்றி வளர அடிப்படையாகும் மொழி எது?
Answer | Touch me
மூலமொழி
964. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை _______ என்பர்.
Answer | Touch me
கிளைமொழி
965. 9-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசன் எவற்றைச் சாடினார்?
Answer | Touch me
மூடநம்பிக்கையை
966. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உரைநடைக் காலம் என்று எந்த நூற்றாண்டைக் கூறுகிறோம்?
Answer | Touch me
இருபதாம் நூற்றாண்டு
967. 9-ஆம் வகுப்பு | தமிழ் |மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது எது?
Answer | Touch me
மொழி
968. 9-ஆம் வகுப்பு | தமிழ் |மொழியைப் பிழையின்றிப் பேசவும் கேட்கவும் கற்கவும் எழுதவும் துணை செய்வது எது?
Answer | Touch me
இலக்கணம்
969. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழிலக்கணம் எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
ஐந்து. அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி இலக்கணங்களாகும்.
970. 9-ஆம் வகுப்பு | தமிழ் |எழுத்துக்களின் வகைகள் யாவை?
Answer | Touch me
முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும்.
971. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கு முதற்காரணமாய் இருப்பதால் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer | Touch me
முதலெழுத்துகள்
972. 9-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் எழுத்துகள் எத்தனை?
Answer | Touch me
முப்பது (“அ” முதல் “ஒள” வரை 12-ஆம், “க்” முதல் “ன்” வரை 18-ஆம்)
973. 9-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் எழுத்துகளைச் சார்ந்து இயங்கும் எழுத்துகள் ______ எனப்படும்.
Answer | Touch me
சார்பெழுத்துகள்
974. 9-ஆம் வகுப்பு | தமிழ் |சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer | Touch me
பத்து, அவை. 1.உயிர்மெய், 2.ஆய்தம், 3.உயிரளபெடை, 4.ஒற்றளபெடை, 5.குற்றியலிகரம், 6.குற்றியலுகரம், 7.ஐகாரக் குறுக்கம், 8.ஒளகாரக் குறுக்கம் 9.மகரக்குறுக்கம்,
10.ஆய்தக் குறுக்கம்
975. 9-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் ஓசை குறையும்போது ஒரு சொல்லின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும் அவ்வாறு நீண்டு ஒலிப்பதை _______ என்பர்.
Answer | Touch me
அளபெடை
976. 9-ஆம் வகுப்பு | தமிழ் |அளபெடை எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
இரண்டு
977. 9-ஆம் வகுப்பு | தமிழ் |உயிரளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer | Touch me
மூன்று. அவை. செய்யுளிசை, இன்னிசை, சொல்லிசை அளபெடைகள்.
978. 9-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் இசையை நிறைக்க வரும் அளபெடை _______ எனப்படும்.
Answer | Touch me
செய்யுளிசை அளபெடை
979. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஓசை குறையாவிட்டாலும், இனிய ஓசைக்காக அளபெடுத்தலை _______ என்பர்.
Answer | Touch me
இன்னிசை அளபெடை
980. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் மற்றொரு சொல்லாகப் பொருள்படவரும் அளபெடை _______ என்பர்.
Answer | Touch me
சொல்லிசை அளபெடை
TAMIL G.K 0941-0960 | TNPSC | TRB | TET | 78 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 0941-0960 | TNPSC | TRB | TET | 78 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
941. 9-ஆம் வகுப்பு | தமிழ் |இன்பத்துப் பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
Answer | Touch me
25 அதிகாரங்கள்
942. 9-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியதில் சிறந்த உரை எது?
Answer | Touch me
பரிமேலழகர் உரை
943. 9-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளுக்கு அந்நாளில் உரை எழுதிய பதின்மர் யார்?
Answer | Touch me
1. தருமர், 2. மணக்குடவர், 3. தாமத்தர், 4. நச்சர்,
5. பரிதி, 6. பரிமேலழகர், 7. திருமலையர், 8. மல்லர்,
9. பரிப்பெருமாள், 10. காளிங்கர்
944. 9-ஆம் வகுப்பு | தமிழ் |விக்டோரியா மகாராணியார் காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் எது?
Answer | Touch me
திருக்குறள்
945. 9-ஆம் வகுப்பு | தமிழ் |நம் நாட்டில் எத்தனைக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன?
Answer | Touch me
1300 மொழிகள்
946. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“மொழிகளின் காட்சிச்சாலை” என்று எந்த நாட்டை மொழியில்; பேராசிரியர் ச.அகத்தியலிங்கம் குறிப்பிடுகிறார்?
Answer | Touch me
இந்தியா
947. 9-ஆம் வகுப்பு | தமிழ் |இன்று உள்ள திராவிட மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Answer | Touch me
23-க்கும் மேல் உள்ளன
948. 9-ஆம் வகுப்பு | தமிழ் |திராவிட மொழிகளை எத்தனை வகையாக பிரிப்பர்?
Answer | Touch me
1. தென் திராவிட மொழிகள்
2. நடுத்திராவிட மொழிகள்
3. வட திராவிட மொழிகள்
949. 9-ஆம் வகுப்பு | தமிழ் |தென் திராவிட மொழிகள் யாவை?
Answer | Touch me
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா
950. 9-ஆம் வகுப்பு | தமிழ் |நடுத்தி;ராவிட மொழிகள் எத்தனை உள்ளன?
Answer | Touch me
தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு
951. 9-ஆம் வகுப்பு | தமிழ் | வட திராவிட மொழிகள் யாவை?
Answer | Touch me
குரூக், மால்தோ, பிராகுய்
952. 9-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer | Touch me
திராவிடப் பெருமொழிகள்
953. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“திராவிடம்” என்பதன் பொருள் யாது?
Answer | Touch me
திராவிட நாடு
954. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
கால்டுவெல்
955. 9-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழையும் அதன் கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை எவ்வாறு அழைத்தனர்?
Answer | Touch me
தமிளியன் அல்லது தமுலிக்
956. 9-ஆம் வகுப்பு | தமிழ் |அழிந்து வரும் பண்டையத் தமிழ் ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்துப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எது மேற்கொண்டு வருகிறது?
Answer | Touch me
யுனெஸ்கோ நிறுவனம்
957. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கடல் கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம் எது?
Answer | Touch me
இலெமூரியாக்கண்டம்
958. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“திராவிட” எனும் சொல் எந்த சொல்லிலிருந்து உருவானது?
Answer | Touch me
தமிழ்
959. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“திராவிட” என்ற சொல் “தமிழ்” என்ற சொல்லிலிருந்து உருவானதாக கூறிய மொழியியல் அறிஞர் யார்?
Answer | Touch me
ஈராஸ் பாதிரியார்
960. 9-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் மொழியில் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையானது எது?
Answer | Touch me
தொல்காப்பியம்
Sunday, 16 June 2013
அரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை 19.06.2013 முதல் 10.07.2013 வரை கிழ்கண்ட கல்லூரிகளிலிருந்து ரூ-100 ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.
அரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை 19.06.2013 முதல் 10.07.2013 வரை கிழ்கண்ட கல்லூரிகளிலிருந்து ரூ-100 ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.
APPLICATION FORMS ARE SOLD AND FILLED-IN APPLICATIONS ARE RECEIVED IN THE FOLLOWING COLLEGES
01 ARIYALUR Govt. Arts College, Ariyalur
02 CHENNAI i) Presidency College, Chennai ii) Quaid-e-Millet College, Anna Salai, Chennai
03 COIMBATORE Govt. Arts College, Coimbatore
04 CUDDALORE Periyar Govt Arts College, Cuddalore
05 DHARMAPURI Govt. Arts College, Dharmapuri
06 DINDUGAL MVM Govt. Arts College for Women, Dindukal
07 ERODE Chikkaiah Naicker College, Veerappan Chatram, Erode
08 KANCHEEPURAM R.V. Govt. Arts College, Chingleput
09 KANNIYAKUMARI Pioneer Kumarasamy College, Nagerkoil
10 KARUR Govt. Arts College, Karur
11 KRISHNAGIRI Govt. Arts College, Krishnagiri
12 MADURAI Sri Meenakshi Govt Arts College for Women,Madurai
13 NAGAPATTINAM Dharmapuram Gnanambigai Govt. Arts College for Women, Mayiladuthurai
14 NAMAKKAL Arignar Anna Govt Arts. College, Namakkal
15 PERAMBALUR Govt. Arts College, Ariyalur
16 PUDUKKOTTAI H.H. Raja's College, Pudukkottai
17 RAMANATHAPURAM Sethupathi Govt. Arts College,Ramanathapuram
18 SALEM Govt. Arts College for Men, Salem
19 SIVAGANGAI Raja Durai Singam Govt. Arts College,Sivaganga
20 THANJAVUR Raja Sarfoji Govt. Arts College, Thanjavur
21 THENI Jeyaraj Annapackiam College, Mount St.Anne,Thamaraikulam, Periakulam
22 THE NILGIRIS Govt. Arts College, Ooty
23 THIRUCHIRAPPALLI Periyar EVR Arts College, Trichy
24 THIRUNELVELI Rani Anna Govt. College, Thirunelveli
25 THIRUVALLUR Sri Subramaniya Swamy Govt. Arts College,Tirutanni
26 THIRUVANNAMALAI Govt. Arts College, Thiruvannamalai
27 THIRUVARUR Thiru Vi.Ka. Govt. Arts College, Thiruvarur
28 TIRUPUR L.R.G. Govt. Arts College for Women, Tirupur
29 TUTICORIN Kamaraj College, Tutucorin
30 VELLORE Muthurangam Govt. Arts College, Vellore
31 VILLUPURAM Arignar Anna Govt. College, Villupuram
32 VIRUDHU NAGAR V.V.Vannia Perumal College for Women,Virudhunagar
TAMIL G.K 0930-0939 | TNPSC | TRB | TET | 77 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 0930-0939 | TNPSC | TRB | TET | 77 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
930. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஏர்எழுபது, சிலை எழுபது, சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
Answer | Touch me
கம்பர்
931. 9-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் யாருடைய அவைக்கலப் புலவராக விளங்கினார்?
Answer | Touch me
குலோத்துங்கச் சோழன்
932. 9-ஆம் வகுப்பு | தமிழ் |கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியர் எனவும் போற்றப்படுபவர் யார்?
Answer | Touch me
கம்பர்
933. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கம்பர் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
934. 9-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் தான் எழுதிய கம்பராமாயணத்திற்கு என்ன பெயர் வைத்தார்?
Answer | Touch me
இராமாவதாரம்
935. 9-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பராமாயணத்தி;ல் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவை யாவை?
Answer | Touch me
பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்கள் ஆகும்.
936. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கம்பர் பிறந்த ஊர் எது?
Answer | Touch me
தேரழுந்தூர்
937. 9-ஆம் வகுப்பு | தமிழ் |மாதானுபங்கி, நாயனார், தேவர் என போற்றப்பட்;டவர் யார்?
Answer | Touch me
திருவள்ளுவர்
938. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது எது?
Answer | Touch me
திருக்குறள்
939. 9-ஆம் வகுப்பு | தமிழ் |அறத்துப் பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
Answer | Touch me
38 அதிகாரங்கள்
Saturday, 15 June 2013
TAMIL G.K 0911-0929 | TNPSC | TRB | TET | 76 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 0911-0929 | TNPSC | TRB | TET | 76 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
911. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“மருமக்கள் வழி மான்மியம்” என்ற நகைச்சுவைக் களஞ்சியத்;தை எழுதியவர் யார்?
Answer | Touch me
கவிஞர் தேசிய விநாயகனார்
912. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “யாப்பு” என்றால் பொருள் என்ன?
Answer | Touch me
கட்டுதல்
913. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளுக்கு உரிய உறுப்புகளைக் கொண்டு பாடலை உருவாக்குவதே _______ எனப்படும்.
Answer | Touch me
யாப்பு
914. 8-ஆம் வகுப்பு | தமிழ் |யாப்பின் உறுப்புகள் யாவை?
Answer | Touch me
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறும் உறுப்புகள் ஆகும்.
915. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஓரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது _______ ஆகும்.
Answer | Touch me
அசை
916. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அசை எத்;தனை வகைப்படும்?
Answer | Touch me
அசை நேரசை, நிரையசை என இருவகைப்படும்.
917. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அசைகள் பல சேர்ந்து அமைவது _______ ஆகும்.
Answer | Touch me
சீர்
918. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது _______ எனப்படும்
Answer | Touch me
தளை
919. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சீர்கள் சேர்ந்து அமைவது _______ எனப்படும்
Answer | Touch me
அடி
920. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளின் இலக்கணத்தைக் கூறுவது _______எனப்படும்.
Answer | Touch me
யாப்பிலக்கணம்
921. 8-ஆம் வகுப்பு | தமிழ் | அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது _______ எனப்படும்.
Answer | Touch me
பா
922. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பா-வின் வகைகள் யாவை?
Answer | Touch me
வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா
923. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வெண்பாவிற்கு எடுத்துக்காட்டு கூறுகள்
Answer | Touch me
திருக்குறளின் 1330- குறளும் குறள் வெண்பா என அழைப்பர்.
924. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“அணி” என்பதன் பொருள் என்ன?
Answer | Touch me
அழகு
925. 8-ஆம் வகுப்பு | தமிழ் |புலவர்கள், பொருளழகும், சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே _______என்பர்.
Answer | Touch me
அணியிலக்கணம்
926. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது _______ அணியாகும்.
Answer | Touch me
உருவக அணி
927. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் இவ்விரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு வரப்பாடுவது _______ ஆகும்.
Answer | Touch me
உவமையணி
928. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் இரண்டும் தனித்தனியாக எடுத்துக்காட்டி இடையில் உவம உருபு மறையுமாறு அமைக்கப்படுவது _______ ஆகும்.
Answer | Touch me
எடுத்துக்காட்டு உவமையணி
929. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அணியிலக்கணத்திற்கான நூல்கள் யாவை?
Answer | Touch me
தண்டியலங்காரம், மாறனலங்காரம்
TAMIL G.K 0891-0910 | TNPSC | TRB | TET | 75 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 0891-0910 | TNPSC | TRB | TET | 75 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
891. 8-ஆம் வகுப்பு | தமிழ் | உலகிலேயே அதிக அளவு மழைபெறும் இடம்; எது?
Answer | Touch me
சிரபுஞ்சி
892. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வனவிலங்கு வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?
Answer | Touch me
அக்டோபர் முதல் வாரம்
893. 8-ஆம் வகுப்பு | தமிழ் | வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
Answer | Touch me
கி.பி. 1972-ஆம் ஆண்டு
894. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவில் எத்தனை வன விலங்குப்பாதுகாப்பு இடங்கள் உள்ளன?
Answer | Touch me
பதினேழு
895. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவில் எத்தனை தேசிய வனவிலங்கு ப10ங்காக்கள் உள்ளன?
Answer | Touch me
66 வனவிலங்கு ப10ங்காக்கள்
896. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவில் எத்தனை வன விலங்கு புகலிடங்கள் உள்ளன?
Answer | Touch me
368 வனவிலங்கு புகலிடங்கள்
897. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“உலக வனவிலங்கு நாள்” எப்போது கொண்டாடப்படுகிறது?
Answer | Touch me
அக்டோபர் 4-ஆம் நாள்
898. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னை எழும்ப10ரில் உள்ள அருங்காட்சியகம் எப்போது தொடங்கப்பட்டது?
Answer | Touch me
கி.பி. 1851-ஆம் ஆண்டு
899. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் இணையும் போது “வ்” அல்லது “ய்” இடையில் தோன்றும். இதற்கு _______ என்று பெயர்.
Answer | Touch me
உடம்படுமெய்
900. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழின்” ஆசிரியர் யார்?
Answer | Touch me
குமரகுருபரர்
901. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரரின் பெற்றோர் யார்?
Answer | Touch me
சண்முகசிகாமணிக் கவிராயர் - சிவகாமசுந்தரியம்மை
902. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
Answer | Touch me
திருவைகுண்டம்
903. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
குமரகுருபரர்
904. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
17-ஆம் நூற்றாண்டு
905. 8-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் இறைவனடி சேர்ந்த ஊர் எது?
Answer | Touch me
காசி
906. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
இரண்டு
907. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பிள்ளைத்தமிழின் பருவங்களின் எண்ணிக்கை எவ்வளவ?
Answer | Touch me
ஏழு
908. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இறைவனையோ, நல்லாரையோ, பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்படும் சி;ற்றிலக்கியவகை எவ்வாறு அழைக்கப்படும்?
Answer | Touch me
பிள்ளைத்தமிழ்
909. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“மதலை” என்பதன் பொருள் என்ன?
Answer | Touch me
குழந்தை
910. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நாஞ்சில் நாட்டுக் கவிஞர் யார்?
Answer | Touch me
கவிஞர் தேசிய விநாயகனார்
TAMIL G.K 0871-0890 | TNPSC | TRB | TET | 74 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
TAMIL G.K 0871-0890 | TNPSC | TRB | TET | 74 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
871. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பறம்பு மலையில்; நடந்த விழாவில் “கவியரசு” என்னும் பட்டத்தை முடியரசருக்கு வழங்கியவர் யார்?
Answer | Touch me
குன்றக்குடி அடிகளார்
872. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “ப10ங்கொடி” என்னும் காவியத்துக்கு தமிழக அரசு எந்த ஆண்டு முடியரசருக்கு பரிசு வழங்கியது?
Answer | Touch me
கி.பி. 1966-ஆம் ஆண்டு.
873. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முடியரசர் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
1920 முதல் 1998 வரை
874. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தேவநேயப் பாவாணரின் பெற்றோர் யார்?
Answer | Touch me
ஞானமுத்து – பரிப10ரணம்
தேவநேயப் பாவாணர் பிறந்த ஊர் எது?
சங்கரன் கோவில்
875. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தேவநேயப் பாவாணர் வாழ்ந்த காலம் எது?
Answer | Touch me
07.02.1902 முதல் 15.01.1981 வரை
876. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர் என 174 சிறப்புப் பெயர்கள் பெற்றவர் யார்?
Answer | Touch me
தேவநேயப் பாவாணர்
877. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் யார்?
Answer | Touch me
தேவநேயப் பாவாணர்
878. 8-ஆம் வகுப்பு | தமிழ் | பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக எப்போது பணியமர்த்தப்பட்;டார்?
Answer | Touch me
08.05.1974-ஆம் ஆண்டு
879. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பாவணர் கோட்டம், அவரின் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை எங்கு நிறுவப்பட்டுள்ளது?
Answer | Touch me
இராசபாளைத்தில்
880. 8-ஆம் வகுப்பு | தமிழ் | மதுரையில் 05.01.1981- அன்று நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் எந்த தலைப்பில் சொற்பொழிவாற்றினார்?
Answer | Touch me
மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்
881. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டு அல்லது பல சொற்கள் இணைவதற்குப் _______ என்று பெயர்.
Answer | Touch me
புணர்ச்சி
882. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நிலைமொழியும் வருமொழியும் சேரும் போது எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையென்றால் அது _______ ஆகும்.
Answer | Touch me
இயல்புப்புணர்ச்சி
883. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நிலைமொழியும் வருமொழியும் சேரும் போது மாற்றங்கள் ஏற்படுமானால் அதனை _______ என்பர்.
Answer | Touch me
விகாரப்புணர்ச்சி
884. 8-ஆம் வகுப்பு | தமிழ் |விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
மூன்று
885. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அல்10திணை என்பது _______ எனப் புணரும்.
Answer | Touch me
அஃறிணை
886. 8-ஆம் வகுப்பு | தமிழ் |விழுதும் வேரும் என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
பாரதிதாசன்
887. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
Answer | Touch me
கனகசுப்புரத்தினம்
888. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசனின் காலக்கட்டம் எது?
Answer | Touch me
29.04.1891 முதல் 21.04.1964 வரை
889. 8-ஆம் வகுப்பு | தமிழ் | பாவேந்தர், புரட்சிக் கவிஞர் போன்ற சிறப்புப் பெயர்கள் பெற்றவர் யார்?
Answer | Touch me
பாரதிதாசன்
890. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“விழுதும் வேரும்” என்ற தலைப்பில் உள்ள பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer | Touch me
அழகின் சிரிப்பு
Subscribe to:
Posts (Atom)