சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், வெளியிடப்பட்டது. டி.இ.டி., - ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களில், அனைத்துப் பாடங்களுக்கும் இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி.,யான ஆசிரியர் தேர்வு வாரியம், ஏற்கனவே
வெளியிட்டது. இதில், தேர்வு பெற்ற, 12,500 பேர், ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டனர். ஆனால், கன்னடம், தெலுங்கு, உருது, மலையாளம் ஆகிய நான்கு சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு, நான்கு சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது. பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சென்னை, கோவை மாநகராட்சிகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கு, தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு பெற்றவர்களின் பட்டியல், சம்பந்தபட்ட துறைகளுக்கு, ஓரிரு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பும். அதன்பின், அந்தந்த துறைகள், பணி நியமன உத்தரவை வழங்கும். மொத்தத்தில், 1,000 ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013
| |
Dated: 14-10-2014 |
Member Secretary
|
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,