Sunday, 29 June 2014

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு |29.06.2014 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் பாடவாரியாக தமிழ் -171,ஆங்கிலம் -42,கணிதம்- 81,அறிவியல் -155,சமூக அறிவியல் -81 என்ற எண்ணிக்கையில் இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு |29.06.2014 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் பாடவாரியாக தமிழ் -171,ஆங்கிலம் -42,கணிதம்- 81,அறிவியல் -155,சமூக அறிவியல் -81 என்ற எண்ணிக்கையில் இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேற்காண் எண்ணிக்கைக்கு மிகாமல் இணையதளம் வழியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ள நிலையில் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2014ம் ஆண்டிற்கான முதல் யு.ஜி.சி. நெட் தேர்வு, ஜுன் 29ம் தேதி நடைபெறுகிறது.

2014ம் ஆண்டிற்கான முதல் யு.ஜி.சி. நெட் தேர்வு, ஜுன் 29ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 79 பாடங்களில் நெட் தேர்வு நடத்தப்படுகிறது மற்றும் இத்தேர்வு 3 கட்டங்களாகவும் நடத்தப்படுகிறது. நெட் தேர்வுக்கான கேள்விகள் ஆப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும் மற்றும் தவறான பதிலுக்கு நெகடிவ் மதிப்பெண் கிடையாது. தேர்வெழுத வருவோர், போட்டோ அடையாள அட்டை மற்றும் பிரின்ட் எடுத்த ஆன்லைன் அட்மிஷன் கார்டு ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். இத்தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோடு எண் 23. இத்தேர்வை, நாடு முழுவதும் லட்சக்கணக்கான பேர் எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் வழங்கியதில், நான்கு பக்கங்களை காணவில்லை. மறு மதிப்பீடு செய்ய தாக்கலான வழக்கில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் வழங்கியதில், நான்கு பக்கங்களை காணவில்லை. மறு மதிப்பீடு செய்ய தாக்கலான வழக்கில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பொன்னுச்சாமி தாக்கல் செய்த மனு: என் மகன் பிரகாஷ், பிளஸ் 2 தேர்வில், 1200 க்கு 1080 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆங்கிலம், கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல் விடைத்தாள் நகல்கள் கோரி, அரசுத் தேர்வுகள் துறைக்கு விண்ணப்பித்தேன். இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ததில், கணிதம் தவிர, பிற பாடங்களுக்கு நகல்கள் கிடைத்தது.கணித விடைத்தாள் நகல் கோரி, புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரிடம், பிரகாஷ் விண்ணப்பித்தார். கணிதத்தில், 44 பக்கங்கள் விடையளித்திருந்தார். ஆனால், கல்வி அலுவலகம் மூலம் வழங்கிய விடைத்தாள் நகலில், பக்கம், 35 முதல், 38 வரை காணவில்லை.மொத்தம், 100 மதிப்பெண்ணிற்குரிய, 10 மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளித்திருந்ததில், 97 மதிப்பெண் வழங்கியுள்ளனர். 6 மதிப்பெண்ணிற்குரிய, 10 கேள்விகளுக்கு, 56 மதிப்பெண், மொத்தம், 153 மதிப்பெண் வழங்கியுள்ளனர்.

கேள்விகளுக்கு விடையளித்ததில் தவறு இருந்தால், பூஜ்ஜியம் (0); விடையளிக்காமல் இருந்தால் வெறும் கோடு ஆகியவற்றை அடையாளமாக, விடைத்தாள் முதல் பக்கத்தில் குறிப்பிடப்படுவர். பிரகாஷ், 40 மதிப்பெண்ணுக்குரிய ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளித்திருந்தார். ஆனால், விடையளிக்கவில்லை என, பூஜ்ஜியம் இட்டுள்ளனர். இதனால், பிரகாஷுக்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால், பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் போது, முக்கிய கல்லுாரியில் இடம் கிடைக்குமா என, அச்சப்படுகிறேன். நாற்பது வினாக்களுக்கு விடையளித்துள்ளதை மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கவும், பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில், என் மகனின் பெயரை சேர்க்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி, 'அரசுத் தேர்வுகள் இயக்குனர், விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 28 June 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் ‘2ஏ’ பதவிக்கான தேர்வு 114 மையங்களில் நடக்கிறது. இதை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.

குரூப் ‘2ஏ’ பதவிக்கான தேர்வு 114 மையங்களில் நடக்கிறது. இதை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) குரூப் ‘2ஏ’ பதவியில் (நேர்முக தேர்வு அல்லாத பதவி) அடங்கிய 2,846 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடத்துகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதற்காக 114 தேர்வு மைங்களில் 2217 தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் அனைத்து கூடங்களும் வீடியோ எடுக்கப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் காலை 10.30 மணி வரை மட்டும் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவர்களுக்கு இணையான பதவியில் உள்ள அலுவலர்களை கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு கூடங்கள் அனைத்தும் ‘வெப்காஸ்டிங்’ மூலம் தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளது. சில கண்காணிக்கப்பட வேண்டிய தேர்வுக்கூடங்கள் வெப்காஸ்டிங் மூலம் அந்தந்த மாவட்ட ஆட்சியராலும், தேர்வாணைய கட்டுப்பாட்டு அறைகளிலிருந்தும் கண்காணிக்கப்பட உள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 26 June 2014

TNEA - 2014 General Academic Counselling for Engineering Admissions scheduled to commence from 27.6.2014 stands postponed | அண்ணா பல்கலைக்கழக பொதுப்பிரிவினருக்கான பி.இ., கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை துவங்குவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான பி.இ., கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளை துவங்க, ஏ.ஐ.சி.டி.இ., சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கோரியிருந்தது. வரும் ஜூலை 3ம் தேதி வரை ஏ.ஐ.சி.டி.இ.,க்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 In view of the orders passed on 26.6.2014 by the Hon’ble Supreme Court in the Writ Petitions Nos. 538 of 2014 etc., granting 7 days time to AICTE to take a decision on all the applications pending before the AICTE for grant of approval to certain technical institutions and in view of the opinion expressed by the Hon’ble Supreme Court that it would not be appropriate to adhere to the present schedule of counselling published by the Tamil Nadu Engineering Admissions (TNEA-2014), the General Academic Counselling for Engineering Admissions scheduled to commence from 27.6.2014 stands postponed. The revised date of counselling for the candidates who have been called for counselling from 27.6.2014 onwards will be informed shortly. Secretary, TNEA.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்தியாவை சேர்ந்த மொபைல் நிறுவனமான கார்பன் ரூ.5,990 க்கு மிகக்குறைவான விலையில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு கிட் காட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது்.

மைக்ரோமேக்ஸ், லாவாவை அடுத்து இந்தியாவை சேர்ந்த மொபைல் நிறுவனமான கார்பன் ரூ.5,990 க்கு மிகக்குறைவான விலையில் லேட்டஸ்ட் 
ஆண்ட்ராய்டு கிட் காட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது். 

டைட்டானியம் எஸ் 99 என்ற இந்த மொபைல், பெரிய வரவேற்பை பெற்றுள்ள மோட்டரோலாவின் மோட்டோ-ஈ க்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

4 இன்ச் ஐ.பி.எஸ். டச் டிஸ்பிளே கொண்ட இந்த போனில் 1.3 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசசரும், 512 எம்.பி. ரேமும் உள்ளது. சிறப்பம்சமாக 4 ஜி.பி. இன்டர்னெல் மெமரி கொண்டுள்ளது. 

5 மெகா பிக்சல் கேமிரா கொண்டிருந்தாலும் எல்.இ.டி பிளாஷ் உள்ளதால் இரவிலும் கூட தெளிவாக பட்ம எடுக்க முடிகிறது. 1400 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளதால் நீண்ட நேரம் ஸ்டேன்ட் பை கிடைக்கிறது. 3-ஜியில் இன்டெர்நெட் உபயோகித்தாலும் கூட பேட்டரி நன்றாக சார்ஜ் இறங்காமல் உள்ளது.இதுதவிர, வை-பை, புளூடூத், ஜி.பி.எஸ் என மற்ற வசதிகளும் உள்ளன. இதில் உள்ள ஆண்ட்ராய்டு கிட்காட் ஓ.எஸ். பல்வேறு புதிய வசதிகளை கொண்டுள்ளது. இந்த பதிப்பு பேட்டரியை குறைவாகவே உபயோகப் படுத்துகிறது. ஜி.பி.எஸ் உபயோகித்தாலும் விரைவாக சார்ஜ் இறங்காமல் நன்றாக உள்ளது. பிராசசர் நல்ல சப்போர்ட்டாக இருப்பதால் ஆப்ஸ்களும் விரைவாக இயங்குகிறது.ஆரம்பத்தில் கருப்பு, வெள்ளை நிறங்களில் மட்டுமே வரும் இந்த மாடல் விரைவில் கவர்ச்சியான வண்ணங்களிலும் வரவுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில் , அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப , மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது .

இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில் , அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப , மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது . புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த மனு : எம் . எஸ் . சி .,- எம் . எட் ., படித்துள்ளேன் . தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன் . ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013) 84 மதிப்பெண் பெற்றேன் . பள்ளிக் கல்வித்துறை ,' இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 10, பட்டப்படிப்பு 15, பி . எட் .,15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ( டீ . இ . டீ .,) 60 என மொத்தம் 100 ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் ,' என மே 30 ல் உத்தரவிட்டது . இதனால் , 10 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள் பாதிக்கப்படுவர் . பிளஸ் 2 பாடத்திட்டத்தில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது . பிளஸ் 2 வில் பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன . மதிப்பெண் வழங்கும் முறையில் வேறுபாடு உள்ளது . உயிரியல் , தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில் , மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது . பொருளாதாரம் , வணிகவியல் பாடப் பிரிவுகளில் செய்முறைத் தேர்வு இல்லை . பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு பல்கலைகளில் , மதிப்பெண் கணக்கிடுவதில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது . தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலை தான் . பி . எட் ., செய்முறைத் தேர்விற்கு மதிப்பெண் வழங்குவதில் , ஒவ்வொரு பல்கலையிலும் வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன . முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது , வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை , கற்பித்தல் அனுபவத்திற்கு ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் வழங்கப்படுகிறது . ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் , இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை . பாரபட்சம் காட்டப்படுகிறது . பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் . இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை , கற்பித்தல் அனுபவ அடிப்படையில் ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் வழங்கி , நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் , என குறிப்பிட்டார் . பள்ளிக் கல்வி செயலாளர் , ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கே . ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் கடந்த 2009-10 ஆண்டில் 6700 மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 99 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்கள் ராக்கிங் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் கொடுமைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். கல்வி நிலையங்களில் ராக்கிங் கொடுமைகளை தடுக்கும் வகையில் அந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் சிறார் நீதி சட்டத்திலும் இந்த குற்றங்களை தண்டனைக்கு உரியதாக சேர்க்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை, தீவிர காயமேற்படுத்துதல் மற்றும் மனரீதியான உளைச்சல் ஏற்படுத்துவதற்கும் மூனறாண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளது. இவை தவிர, அக்குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர் உள்ளிட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் இச்சட்டத் திருத்தத்தில் வழிவகை ஏற்படுத்தப்படும்.இந்த திருத்தங்கள் அடங்கிய மசோதா மீது மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று இந்த மசோதாக்கள் எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் நியமனம் தொடர்பான கவுன்சிலிங்கை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் நியமனம் தொடர்பான கவுன்சிலிங்கை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கடல்குடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக இருப்பவர் வையண்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-தமிழகத்தில் 100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. எனக்கு மேல்நிலைப்பள்ளியில் உயிரியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பதவி பெற தகுதி உள்ளது.இந்நிலையில், ஆசிரியர் பணியிடங்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கின் போது, மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை அதிகாரிகள் மறைத்து விட்டனர். பணியிட மாறுதல் கேட்காத ஆசிரியர்களுக்கு, அந்த இடங்கள் மறைமுகமாக வழங்கப்பட்டது.

அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இதுபோல் இடங்களை வழங்குகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த கவுன்சிலிங்கின்போது, காலி இடங்கள் இருந்தும் அவற்றை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக இருந்த இடத்தை காட்டாமல், அந்த இடத்துக்கு சீனிபிரியா என்ற ஆசிரியரை நியமித்துள்ளனர். எனவே சீனிபிரியாவுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனக்கு அந்த பணியிடத்தை வழங்க உத்தரவிட வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-ஏற்கனவே மனுதாரர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், இடம் மாறுதல் மற்றும் பணி நியமனம் தொடர்பான கவுன்சிலிங் வெளிப்படையாக நடைபெறுவதில்லை என்றும், ரகசியமாக நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளது. மனுதாரர் தொடர்ந்த வழக்கு வெற்றி பெறாமலும், அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.தற்போது, அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சீனிபிரியா என்ற ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.நேர்மைஇந்த வழக்கு விசாரணையின்போது, ஜூன் 24-ந் தேதி ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பான கவுன்சிலிங் நடைபெற உள்ளதாகவும், அந்த கவுன்சிலிங்கிற்கு தான் விண்ணப்பித்துள்ளதால், சீனிபிரியா பணி நியமனத்துக்கு தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. எனவே, பள்ளி கல்வித்துறை ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பணி நியமனம் தொடர்பான கவுன்சிலிங்கை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 25 June 2014

2013 -14 -ஆம் ஆண்டு முதல், GPF சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி) வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு ஊழியர்களுக்கான 2013-14- ஆம் நிதியாண்டின் ஜிபிஎப் கணக்கு அறிக்கை, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு (டி.டி.ஓ.) ஜூலை இரண்டாம் வாரத்திலிருந்து அனுப்பப்பட உள்ளது. ஜிபிஎப் சந்தாதாரர்கள், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி எந்த அலுவலகத்தில் பணியாற்றினார்களோ, அந்த அலுவலக டி.டி.ஓ.விடம் தங்களின் ஆண்டு கணக்கு அறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், 2013 -14 -ஆம் ஆண்டு முதல், ஜிபிஎப் சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தில் (www.agae.tn.nic.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆண்டு அறிக்கை நகல்கள் இனி மாநில கணக்காயர் அலுவலகத்தில் வழங்கப்படமாட்டாது. மேலும் நடப்பு நிதியாண்டு முதல், ஜிபிஎப் ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள் இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
agae.tn.nic.in,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 24 June 2014

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் ரயில்வே பட்ஜெட், 8ம் தேதியும், முதல் பொது பட்ஜெட் ஜூலை 10-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளன.

பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர், அடுத்த மாதம், 7ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 14ம் தேதி வரை நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின், முதல் ரயில்வே பட்ஜெட், 8ம் தேதியும், 10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் ரயில்வே பட்ஜெட், 8ம் தேதியும், முதல் பொது பட்ஜெட் ஜூலை 10-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 மாதங்களுக்கு மட்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட் ஒதுக்கீடுகள் ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்கு முன்பாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இதையொட்டி நாடாளு மன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் இந்தக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 14-ம் தேதி நிறைவடைகிறது. தேவைப்பட்டால் மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.

கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான ஜூலை 8-ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப் பட உள்ளது. 9-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஜூலை 10-ம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2014-15-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் என்பதால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருப்பினும் கூன் விழுந்த இந்திய பொருளாதாரத்தை நிமிர்த்த சில கசப்பான மருந்துகளை உட்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக சுட்டிக் காட்டியிருப்பதால் மத்திய பட்ஜெட்டில் பல்வேறு கடுமையான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.

இதனிடையே பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், போலாவரம் அணைத் திட்டம், டிராய் திருத்தச் சட்டம், செபி தொடர் பான சட்டம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய் யப்பட்டது. இந்த மசோதாக் களை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ரயில் கட்டண உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பத் திட்டமிட் டுள்ளதால் பட்ஜெட் கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசிடம் மக்களின் எதிர்பார்ப்புகள்:
*வருமானத்திற்கான குறைந்தபட்ச வரி விலக்கில் (தற்போது 2 லட்சம் ரூபாய்) மாற்றம்.
*சேமிப்பை அதிகரிக்க, 80சி பிரிவின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைக்கான வரம்பை உயர்த்த வேண்டும்.
*தொழில் முதலீடுகளுக்கு சிறப்பு சலுகைககள், குறிப்பாக, சொத்து மதிப்பு விரைவாக சரிய வாய்ப்புள்ள தொழில்களுக்கு சலுகை வழங்க வேண்டும்.
*மத்திய அரசின் நேரடி ஊக்குவிப்பு திட்டங்களில் சிலவற்றை நீக்கி, அவற்றை மாநில அரசுகளின் பொறுப்பில்விடலாம். இதனால், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும்.
*பங்குச் சந்தை நன்கு இருப்பதால், சிதம்பரம் அறிவித்த பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை இலக்கை விட, கூடுதலாக நிர்ணயிக்கலாம்.
*மறைமுக வரிகளில், குறிப்பாக, உற்பத்தி மற்றும் சுங்க வரிகளில் சில மாற்றங்கள் செய்யலாம்.
*சரக்கு மற்றும் சேவைகள் வரி அமலாக்கத்தை, வரும், 2015 மத்தியில் அல்லது, 2016 ஏப்ரலில் அமலாக்க, புதிய காலக்கெடு விதிக்கலாம்.
*வரும், 2015, ஏப்ரல் 1ம் தேதி முதல், நேரடி வரிகள் விதிமுறை அமல் குறித்து அறிவிக்கலாம்.
*கல்வி, திறன் வளர்ப்பு, ஆரோக்கியம் மற்றும் நகர்ப்புற திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு, கழிப்பறை, வீடு, சாலைகள், சிறப்பு உற்பத்தி 
மண்டலங்கள் என, பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களுக்கு துவக்க ஒதுக்கீடுகளையும் செய்யலாம்.
*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், நிலச் சட்டங்கள் ஆகியவற்றை மேலும் சீர்படுத்தி, வளர்ச்சி மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தலாம்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு என்ஜினீயரிங் கலந்தாய்விற்காக செல்ல வசதியாக 20 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாநகர போக்குவரத்து கழகம் செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு என்ஜினீயரிங் கலந்தாய்விற்காக செல்ல வசதியாக 20 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாநகர போக்குவரத்து கழகம் செய்துள்ளது. இது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்ஜினீயரிங் படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து காலை 5 மணி முதல் 10 நிமிட இடைவெளியில் (கோயம்பேடு–திருவான்மியூர்) டி70 வழித்தடத்தில் வடபழனி, அசோக் பில்லர், சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகம் வழியாக 10 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன. பெருங்களத்தூரில் இருந்து காலை 5 மணியில் இருந்து (பெருங்களத்தூர்–பிராட்வே) 21ஜி வழித்தடத்தில் தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழகம் வழியாக 10 நிமிட இடைவெளியில் 10 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 300 பஸ்கள் இது தவிர தாம்பரம், வடபழனி, சென்டிரல், எழும்பூர், பிராட்வே, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், தியாகராயநகர், திருவான்மியூர் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 300 மாநகர பஸ்கள் அண்ணா பல்கலைக்கழகம் வழியாக இயக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் தொடங்கி வைத்தார்.

பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்கள் சேர்வதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ–மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் வருடந்தோறும் நடத்தி வருகிறது.

இந்த வருடம் விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. விளையாட்டு பிரிவினருக்கு 500 இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 890 பேர் கலந்தாய்வுக்கு வர அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களில், ரேங்க் அடிப்படையில் முதல் 10 பேருக்கு, அவர்கள் தேர்ந்து எடுத்த கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான உத்தரவுகளை அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் வழங்கி, கலந்தாய்வை தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் உள்ளார். பதிவாளர் கணேசன், பேராசிரியர்கள் ராமலிங்கம், நாகராஜன், ராஜேந்திர பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல் மாணவி மிசேல் கேத்தரின் செஸ் வீராங்கனை. இவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து உள்ளார். நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு பள்ளியில் படித்தவர். இவர் பெற்றோர் பிரின்ஸ்–சுகிமாவுடன், சென்னை அசோக் நகரில் வசித்து வருகிறார்.

2–வது இடம் பெற்றவர் மாணவர் ஆகாஷ். செஸ் வீரரான இவர், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் பிரிவை எடுத்துள்ளார். சென்னை ஜாபர்கான் பேட்டையில் பெற்றோர் கணேசன்–மஞ்சுளாவுடன் வசித்து வருகிறார். அசோக்நகரில் உள்ள ஜவகர் வித்யாலயா பள்ளியில் படித்தவர்.

3–வது இடம் பெற்ற ஸ்நேகா அங்கிதா டேபிள் டென்னிஸ் வீராங்கனை. இவர் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. சிவில் எடுத்துள்ளார். மதுரை ஜெயின் வித்யாலயா பள்ளியில் படித்த இவர், பெற்றோர் செல்வக்குமார்–சுதாமதியுடன் மதுரையில் வசித்து வருகிறார்.

இவர்கள் 3 பேர் உள்பட 10 பேருக்கு கல்லூரியில் சேர்வதற்கான உத்தரவுகளை வழங்கிய துணைவேந்தர் ராஜாராம் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த வருடம் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வுக்கு வருபவர்கள் அனைவருக்கும் பி.இ. சேர இடம் கிடைக்கும். காரணம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பி.இ. இடங்கள் உள்ளன. பொது கலந்தாய்வு 27–ந் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு வருகிற அனைவருக்கும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், பெற்றோர்கள் உட்கார கூடாரம் போடப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு பி.இ. சேர இடங்கள் 6 ஆயிரம் உள்ளன. ஆனால் 400 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், கலந்தாய்வின் போது யாராவது அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் இடைத்தரகர்கள் வந்து குறிப்பிட்ட கல்லூரியை தேர்ந்து எடுத்து படிக்க மாணவரிடமோ அல்லது பெற்றோரிடமோ, யாரிடமாவது பேசுவதாக தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பணிக்கான தேர்வு நடவடிக்கைகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கே.பி.ஜெகநாதன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கடலூர் மாவட்டத்தில், கிராம உதவியாளர் பணிக்கு பெயர் பட்டியலை அனுப்பும்படி, கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் திட்டக்குடி தாசில்தார் 2010–ம் ஆண்டு கடிதம் அனுப்பினார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, இதுபோன்ற தேர்வுக்கு பத்திரிகைகள், இணையதளம், அரசு அலுவலகத்தில் உள்ள விளம்பரம் பலகை மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக விளம்பரம் செய்யவேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பட்டியல் பெற்று பணி நியமனம் செய்வது சட்டவிரோதமானது’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொது விளம்பரம் செய்யாமல் கிராம உதவியார் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை ரத்து செய்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:– ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், அரசு பணிக்கான தேர்வு நடவடிக்கையை குறைந்தது 2 பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான், தனி நீதிபதி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் எந்த தவறும் இல்லை. எனவே அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், எதிர்வரும் காலங்களில், இதுபோன்ற பணிக்கு நடைபெறும் தேர்வு நடவடிக்கைகளை பத்திரிகைகளில் விளம்பரம் செய்து மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 25–11–2013 முதல் 6–12–2013 வரை நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்த்தலின்போது அவர்கள் பெற்ற மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அரசு உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மேலும் சில தகவல்களை சேகரிக்கவேண்டி உள்ளது. எனவே கேட்கப்படும் சரியான ஆவணங்களை தேர்வர்கள் சமர்ப்பிக்கவேண்டும். தேர்வர்கள் பி.எட். மற்றும் எம்.எட் கல்லூரிகளில் பெற்ற சர்வீசஸ் பற்றிய விவரத்தை படிவம் 1–ல் தெரிவித்து சமர்ப்பிக்கவேண்டும்.அவர்கள் எம்.பில். மற்றும் பட்டப்படிப்பை தொலை தூரக்கல்வியில் படித்தார்களா? அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தார்களா? என்பதற்கு படிவம் 2–ஐ சமர்ப்பிக்கவேண்டும்.சமர்ப்பிக்கவேண்டிய இடம் காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி ஆகும்.தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவினர் ஜூலை 1–ந் தேதியும், வணிகவியல் பாடப்பிரிவினர் 2–ந் தேதியும், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் 3–ந் தேதியும், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இதர பாடப்பிரிவினர் 4–ந் தேதியும் சமர்ப்பிக்கவேண்டும். அனைத்து பாடப்பிரிவினரும் மேற்கண்ட குறிப்பிட்ட தேதிகளில் காலை 9–30 முதல் மாலை 5–30 மணிவரை சமர்ப்பிக்கலாம்.இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் கலந்தாய்வுக்கு பிந்தைய அதிகாரப்பூர்வ கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், படிப்பில் சேர காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவும் கலந்தாய்வுக்கு பிந்தைய அதிகாரப்பூர்வ கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நிறைவுக்குப் பிறகு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்துப் பிரிவு மாணவர்களைப் பொருத்தவரை பொது தரவரிசை எண் 632-லும் (கட்-ஆஃப் மதிப்பெண் 199.25), பிற்படுத்தப்பட்ட வகுப்பை (பி.சி.) சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களது வகுப்பு வாரி எண் 957-லும் (கட்-ஆஃப் மதிப்பெண் 198.50) படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 2,023 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள் என முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் (வகுப்பு வாரியாக) கீழே அளிக்கப்பட்டுள்ளது.

வகுப்பு | அரசு எம்.பி.பி.எஸ் | சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ் | அரசு பி.டி.எஸ்.

ஓ.சி                 | 199.25                              | 198.25                                        | 198.25

பி.சி                 | 198.50                               | 198.00                                        | 198.00

பி.சி.(எம்)      | 197.50                               | 197.00                                        | 197.00

எம்.பி.சி        | 197.75                               | 197.00                                         | 197.25

எஸ்.சி           | 195.25                              | 193.50                                          | 194.25

எஸ்.சி.(ஏ)    | 192.50                              | 190.75                                          | 192.00

எஸ்.டி           | 188.00                                | 185.75                                         | 187.50
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 23 June 2014

மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்தது. இதில் 2,521 எம்பிபிஎஸ் இடங்களும் 85 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. அடுத்தகட்ட கவுன்சலிங் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் பங்கேற்கும் தகுதியான மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது. www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.

மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்தது. இதில் 2,521 எம்பிபிஎஸ் இடங்களும் 85 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. அடுத்தகட்ட கவுன்சலிங் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது.தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள், சென்னையில் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் 18 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. திருவாரூரில் சில ஆண்டுக ளுக்கு முன்பு 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. போதுமான வசதிகள் இல்லை என கூறி, அங்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) நிறுத்தி வைத்தது. அதேபோல திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட 50 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூ ரியில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட 25 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை மருத்துவ கவுன்சில் நிறுத்திவிட்டது. இதுதவிர மத்திய அரசின் கல்வி நிறுவனமான கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் 5 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை. 

இதனால், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 18 ஆகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் 7 ஆகவும் குறைந்தன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 175 குறைந்து 2,380 ஆனது. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 357 இடங்கள் போக, மாநில அரசுக்கு 2,023 இடங்கள் இருந்தன. இதேபோல சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக மீதமுள்ள 85 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு இருந்தன. கடந்த கல்வி ஆண்டில் 12 தனியார் மருத்துவக் கல்லூரி களில் இருந்து மாநில அரசுக்கு 900-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்தன. இந்த ஆண்டு 5 தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்காத தால், 7 தனியார் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு 498 இடங்களே கிடைத்தன. இந்நிலையில், 2014-15ம் கல்வி ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க் கைக்கான கவுன்சலிங் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்து வக் கல்லூரியில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடந்த சிறப்புப் பிரிவு கவுன்சலிங்கில் 44 மாணவ, மாணவிகள் அனுமதி கடிதம் பெற்றனர். இதையடுத்து 18-ம் தேதி தொடங்கிய பொதுப் பிரிவு கவுன்சலிங், ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்தது. 

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக (டிஎம்இ) அதிகாரிகள் கூறியதாவது: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2,521 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 2,606 இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. இரண்டாம் கட்ட கவுன்சலிங், ஜூலை 2-வது வாரத்தில் தொடங்க உள்ளது. 19 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு கிடைக்கும் சுமார் 950 இடங்கள், 2-ம் கட்ட கவுன்சலிங்கில் நிரப்பப்படும். திருவாரூர், திருச்சி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் 5 தனியார் கல்லூரிகளுக்கு மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தால் மாநில அரசுக்கு கூடுத லாக சுமார் 600 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி கிடைக்கும் இடங்களும் இரண்டாம்கட்ட கவுன்சலிங்கில் நிரப்பப்படும். இவ்வாறு தெரிவித்தனர். இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் பங்கேற்கும் தகுதியான மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது. www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் கவுன்சலிங் தொடக்கம் | பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் 23.06.2014 திங்கள்கிழமை தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் நடத்தப்படுகிறது.

பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் 23.06.2014 திங்கள்கிழமை தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் நடத்தப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்பட சுமார் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் இந்த ஆண்டு பொது கவுன்சலிங் மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஒரு லட்சத்து 73 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது. விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மறுநாள் (17-ம் தேதி) வெளியானது. இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் (திங்கள், செவ்வாய்) விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கான கவுன்சலிங் நடக்கிறது. இதில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.ராஜாராம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்க உள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்ச லிங் 25-ம் தேதி நடைபெறுகிறது. பொது கவுன்சலிங் (அகடமிக்) ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 28-ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. கவுன்சலிங் இன்று தொடங்குவதையொட்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வெளியூர் மாணவர்கள், துணைக்கு வரும் பெற்றோர் ஓய்வெடுக்க பிரம்மாண்டமான கூடாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 22 June 2014

MBBS RANDOM NUMBER | MERIT LIST | CALL LETTER | DATE WISE ALLOTTED LIST | DATE WISE VACCANCY-2014-2015 | TENTATIVE 1ST PHASE COUNSELLING SCHEDULE FOR MBBS/BDS COURSE 2014-2015 | B.E/B.TECH RANDOM NUMBER | MERIT LIST | CALL LETTER | DATE WISE ALLOTTED LIST | DATE WISE VACCANCY-2014-2015 | TENTATIVE 1ST PHASE COUNSELLING SCHEDULE FOR B.E/B.TECH COURSE 2014-2015 |

    COUNSELLING NEWS-2014-2015
  1. கலந்தாய்வு செய்திகள்-2014-2015.

  2. MBBS/BDS ADMISSION-2014-2015
  3. 1ST PHASE COUNSELLING SCHEDULE-2014-2015.

  4. MBBS/BDS MERIT LIST-2014-2015

  5. MBBS/BDS Course 2014-2015 Provisional Merit List for Children of Ex-Servicemen.

  6. MBBS/BDS DATE WISE ALL ALLOTTED NAME LIST

  7. MBBS/BDS DATE WISE DATE WISE VACCANCY LIST

  8. MBBS/BDS CALL LETTER

  9. B.E/B.TECH ADMISSION-2014-2015
  10. B.E/B.TECH ADMISSION - COUNSELLING SCHEDULE-2014-2015.

  11. Rank Enquiry 2014

Tags :
MBBS/BDS ADMISSION-2014-2015,B.E/B.TECH ADMISSION-2014-2015
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

D.ELE.ED HALL TICKET | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து இயக்ககம் வெளியிட்ட செய்தி: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் (2014 ஜூன்) இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஜூன் 26 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வுகள் ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் மற்ற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஜூன் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் (மருத்துவம்) மற்றும் பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.ஜுன் 25-ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் (மருத்துவம்) மற்றும் பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.ஜுன் 25-ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் (சுயநிதி) படிப்புகளில் சேர 7,651 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் மாணவர்கள் 3,011 பேர், மாணவிகள் 4,640 பேர் அடங்குவர். 11 மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனர்.

எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட்டது.

தரவரிசைப் பட்டியலில் மதுரையைச் சேர்ந்த வி.பிரியதர்ஷினி 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த நிரஞ்சனா 200-க்கு 200 மதிப்பெண்கள், திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்ரீதர் சிவக்குமார் 199.75 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளனர்.

25-இல் கவுன்சிலிங்: வரும் 25-ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான அழைப்புக் கடிதம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு குறித்து ஸ்பீட் போஸ்ட் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

எஸ்எம்எஸ் மூலமும் தகவல் அனுப்பப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தரவரிசைப் பட்டியல் குறித்தும், கலந்தாய்வு அழைப்புக் கடிதம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய பல்கலைக்கழக இணையதள முகவரி: www.annamalaiuniversity.ac.in .
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 21 June 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 4,477 பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில் 933 பேர் (20 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான சுய விவரப் படிவம், அடையாளப் படிவம், அங்கீகாரப் படிவும் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதில் பங்கேற்பதற்காக அழைப்புக் கடிதங்கள் தனியாக அனுப்பப்படாது. மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் சலுகை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அவர்கள் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேறு யாரையாவது நியமிக்கலாம். அதற்காக அங்கீகாரக் கடிதத்தை தேர்வர் அந்த நபருக்கு வழங்க வேண்டும். 
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடங்கள்:

Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

HIGH SCHOOL HM NEW PANEL | 01.01.2014 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப்பட்டியல் 12-05-2014 நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் தமிழாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளை முன்னுரிமைக்கு எடுத்துக்கொள்ள வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட W.P.No.16217/14, W.P.No.16218/14, W.P.No.16219/14 W.P.No.15925/14 மற்றும் இதர நீதி மன்ற வழக்கின் இறுதி தீர்ப்பிற்குட்பட்டு திருத்திய முன்னுரிமைப்பட்டியல் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.999/சி1-இ1/2014 நாள் 20-06-2014 ன் படி வெளியிடப்படுகிறது. இதற்கு முன் வெளியிடப்பட்ட 12/05/2014 நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி வெளியிடப்பட்ட முன்னுரிமைப்பட்டியல் இரத்து செய்யப்படுகிறது.

HIGH SCHOOL HM NEW PANEL | 01.01.2014 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப்பட்டியல் 12-05-2014 நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் தமிழாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளை முன்னுரிமைக்கு எடுத்துக்கொள்ள வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட W.P.No.16217/14, W.P.No.16218/14, W.P.No.16219/14 W.P.No.15925/14 மற்றும் இதர நீதி மன்ற வழக்கின் இறுதி தீர்ப்பிற்குட்பட்டு திருத்திய முன்னுரிமைப்பட்டியல் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.999/சி1-இ1/2014 நாள் 20-06-2014 ன் படி வெளியிடப்படுகிறது. இதற்கு முன் வெளியிடப்பட்ட 12/05/2014 நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி வெளியிடப்பட்ட முன்னுரிமைப்பட்டியல் இரத்து செய்யப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 June 2014

ஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (அட்வான்ஸ்டு) முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (அட்வான்ஸ்டு) முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜே.இ.இ. தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. இதில் முதலில் முதல்நிலைத் தேர்வும் (மெயின்) பின்னர் முதன்மைத் தேர்வும் (அட்வான்ஸ்) நடத்தப்படும். 2014-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு (எழுத்துத் தேர்வு) ஏப்ரல் 6-ஆம் தேதியும், ஆன்-லைன் தேர்வுகள் ஏப்ரல் 9,11,12 மற்றும் 16-ஆம் தேதிகளிலும் நடத்தப்பட்டன.இந்தத் தேர்வை நாடு முழுவதும் 11 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவு மே 2-ஆம் தேதி நள்ளிரவு சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் சேர முடியும். மேலும் இந்த முதல்நிலைத் தேர்வில் முதல் 1.50 லட்சம் தரவரிசைக்குள் வருபவர்கள் ஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மைத் தேர்வை எழுத முடியும்.இந்த முதன்மைத் தேர்வு கடந்த மே 25-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வியாழக்கிழமை (ஜூன் 19) வெளியிடப்பட உள்ளது.

இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள், நாடு முழுவதும் உள்ள ஐஐடி மற்றும் ஐஎஸ்எம் உயர் கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் சேருவதற்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்வதற்கான வாய்ப்பு ஜூன் 24-ஆம் தேதியுடன் முடிந்துவிடும்.மேலும் இந்த உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் கட்டடவியல் பொறியியல் துறைகளில் சேருவதற்கான கட்டடவியல் நுண்ணறி தேர்வு ஜூன் 26-ஆம் தேதி நடத்தப்படும். இதில் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த கட்டடவியல் நுண்ணறி தேர்வு முடிவு ஜுன் 29-ஆம் தேதி வெளியிடப்படும்.

JEE(Advanced) - 2014 Result
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்த 7ஆயிரத்து 651 பேருக்கும், பிஎஸ்சி (விவசாயம் மற்றும் தோட்டக்கலை) படிப்புக்கு விண்ணப்பித்த 11 ஆயிரத்து 654 பேருக்கும், பிஎஸ்சி(நர்சிங்), பிபிடி, பிபார்ம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்த 947 பேருக்கும் ரேண்டம் எண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிஎஸ்சி( விவசாயம்) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழக வளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஷிவ்தாஸ்மீனா தலைமை தாங்கி 10 எண்கள் கொண்ட ரேண்டம் பட்டியலை வெளியிட்டார். பதிவாளர் டாக்டர் பஞ்சநதம், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிரசாத், பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மைதிலி, விவசாயத்துறை தலைவர் டாக்டர் வசந்தகுமார், பொறியியல்துறை தலைவர் டாக்டர் வேலுசாமி, தொலைதூரகல்வி இயக்க இயக்குனர் டாக்டர் சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், கிருஸ்துராஜ், மக்கள் தொடர்புதுறை அலுவலக மேலாளர் காளிதாஸ் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா நிருபர்களிடம் கூறியதாவது : அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக ரேண்டம் எண் பட்டியல் வெளியிடப்படுகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்த 7ஆயிரத்து 651 பேருக்கும், பிஎஸ்சி (விவசாயம் மற்றும் தோட்டக்கலை) படிப்புக்கு விண்ணப்பித்த 11 ஆயிரத்து 654 பேருக்கும், பிஎஸ்சி(நர்சிங்), பிபிடி, பிபார்ம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்த 947 பேருக்கும் ரேண்டம் எண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதை அண்ணாமலை பல்கலைக்கழக வெப்சைட்டில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு(கவுன்சிலிங்) தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

2014-15 - Know Your Random Number
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

6.25 லட்சம் பேர் எழுத உள்ளகுரூப்2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப்2 தேர்வு ஹால்டிக்கெட் குரூப்2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாடு அலுவலர் ஷோபனா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 29ம் தேதி முற்பகல், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில்(குரூப் 2 பதவி) அடங்கிய 2,846 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு 6.25 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து உரிய விண்ணப்பக்கட்ட ணம் மற்றும் தேர்வுக்கட்ட ணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு கிடைக்க பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா? என்பதை நிராகரிப்புப்பட்டியலில் கண்டறியலாம். நிராகரிப்பு பட்டியலில் இடம் பெறாத, சரியான முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் நகலு டன் தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com க்கு வருகிற 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நுழைவுச் சீட்டினை டவுன்லோடு செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப் பின் 1800 425 1 002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 19 June 2014

வரி விதிப்பு முறைகளை எளிமையாக்க வேண்டும்

இப்போது இந்தியாவில் `வரி தீவிரவாதம்’ நடந்து கொண்டிருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் எப்படியெல்லாம் வரி விதிக்க முடியுமோ அப்படி வரி விதித்து வருகிறார்கள். இவ்வளவு வரி விதிப்பு முறைகள் இருந்தும் அரசுக்கு வருமானம் வந்ததா என்று கேட்டால் அதுவும் இல்லை. இந்த வரி விதிப்பு முறைகளால் கருப்புப் பணமும் ஊழலும்தான் அதிகரித்திருக்கிறது. இதனால் முதலீட்டு சூழ்நிலை பாதிக்கப் படுகிறது. 

வரி சம்பந்தமாக பல விஷயங்களை நிதி அமைச்சர் செய்ய வேண்டும். அதில் முதலாவது சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) எவ்வளவு சீக்கிரம் கொண்டுவரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டுவர வேண்டும். இதில் சில சில இடங்களில் பிரச்சினைகள் இருந்தாலும் ஜி.எஸ்.டி அவசியம். இதேபோன்ற பிரச்சினை, எதிர்ப்புதான் 2004-ம் ஆண்டு மதிப்பு கூட்டு வரி (வாட்) கொண்டு வரும்போதும் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை சரியாகிவிட்டது. 
இதேபோலதான் ஜி.எஸ்.டி. கொண்டுவரும் போது சில மாநிலங்களுக்கு வருமானம் பாதிக்கப்படலாம். அந்த மாநிலங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் இழப்பீட்டைக் கொடுக்கலாம். அது 2015 ஏப்ரல் 1-ம் தேதி நடைமுறைக்கு வருமாறு இருக்க வேண்டும். 

120 கோடிக்கும் மேலான மக்கள் தொகை இருக்கும் நாட்டில் சுமார் நான்கு கோடி மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். இத்தனை வருடங்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை. தற்போது இருக்கும் சிக்கலான வரி அமைப்பில் இந்த எண்ணிக்கையை அதிகரிப்பது கடினம். அதனால் எவ்வளவு சீக்கிரம் இதை நீக்க முடியும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும். அதனால் இந்த உச்ச வரம்பை ரூ. 2 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் வருமான வரி மூலம் திரட்டப்படும் தொகை அதிகமாக இருக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. ஆனால் புதிய நபர்கள் மூலம் இதை வசூல் செய்ய வேண்டும் என்று நினைக்காமல், ஏற்கெனவே சரியாக வரி கட்டும் நபர்களிடமிருந்தே இதை எதிர்பார்க்கிறது அரசு. ஐந்த லட்சத்துக்கு பிறகு, 10 லட்சம் என இந்த சிஸ்டத்தை முழுமையாக நீக்க வேண்டும். அப்படியானால் வருமானத் துக்கு அரசு என்ன செய்யும் என கேள்வி வரலாம். வருமான வரி கட்டவில்லை என்றால் மக்கள் வங்கி சேமிப்பில் இறக்குவார்கள். அதன் மூலம் கடன் கொடுக்க பட்டு வளர்ச்சி இருக்கும். செலவு செய்தால் கூட ஜி.எஸ்.டி மூலமாக அரசுக்கு வருமானம் கிடைத்துக்கொண்டுதான் இருக்கும். மேலும் 80 சி வரம்பில் கொடுக்கப்படும் ஒரு லட்ச ரூபாய் வரம்பையும் 5 லட்ச ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும். 
இந்த எல்லையை அதிகரிக்கும் போது நீண்டகால சேமிப்பு அதிகரிக்கும். 

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல வகையான சலுகைகள் கொடுக்கப்பட்டுவருகின்றன. இந்த சலுகைகளை சீரமைக்க வேண்டும். கொடுத்தால் அனைத்து நிறுவனங்களுக்கும் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் யாருக்கும் கிடையாது என்று சொல்ல வேண்டும். குறிப்பிட்ட மாநிலம், துறை, பொருட்கள், இடம் என்று எந்த விதமான சலுகையும் இல்லாமல் வரி அமைப்பு இருக்க வேண்டும். நிறுவனங்கள் வருமானத்தை கணக்கிட்டு, அதில் செலவுகள், தேய்மானம் கழித்து வரி கட்டுவதை விட, நிறுவனங்களின் வருமானத்தில் 1.5% (அ) 2% கட்டிவிட்டால் போதும். எந்த விதமான கணக்கும் தேவை இல்லை என்பது போல கொண்டு வரலாம். 

வீட்டுக்கடனையும் (முதல் வீடு) வருமான வரிச்சட்டத்திலிருந்து எடுக்க வேண்டும். அதாவது வீட்டுக்கடனுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை நீக்க வேண்டும். அதேபோல அந்த முதல் வீட்டில் இருந்து வாடகை வருமானம் கிடைத்தாலும் அதற்கு வரி செலுத்த தேவை இல்லை. வீட்டுக்கடனுக்கு சலுகை கொடுப்பதனால் தேவையே இல்லாமல் நிறைய நபர்கள் வீடு வாங்குகிறார்கள். இதனால் வீடுகளின் விலை அதிகரிக் கிறது. அனைவருக்கும் ஒரு வேளை ஒரே நபரே இரண்டாவது வீடு வாங்கும்போது, அந்த வீட்டில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் நேரடியாக 40 சதவீதம் வரி விதிக்க வேண்டும். 

கஷ்டப்பட்டு சம்பாதித்து வரிகட்டி, அந்த பணத்தை சேமிப்பதற்காக வங்கியில் முதலீடு செய்யும்பட்சத்தில் அதில் கிடைக்கும் வட்டிக்கும் வரி விதிப்பது தேவை இல்லாதது. மேலும் வயதானவர்கள் இந்த டெபாசிட்டை நம்பிதான் இருக்கிறார்கள். அதனால் மூன்று வருடங்களுக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்யும் பட்சத்தில் அதற்கு வரி விதிக்க கூடாது. 

30 வருடத்துக்கு நீண்ட கால கடன் பத்திரங்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதில் முதலீடு செய்யப்படும் தொகையை கட்டுமான திட்டங் களுக்கு மத்திய அரசு பயன் படுத்திக்கொள்ளலாம். மேலும், இந்த பத்திரத்தில் முதலீடு செய்பவர்கள் கொண்டுவரும் பணத்தை பற்றி எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கிக்கொள்ளவேண்டும்.(தங்கம் கொண்டுவந்தாலும், அதை வைத்துக்கொண்டு கடன்பத்திரம் வழங்கவேண்டும்) அதே சமயத்தில் அவர்கள் மீது எந்த விதமான கிரிமினல் வழக்கும் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த கடன் பத்திரம் குறிப்பிட்ட வருடங்களுக்கு வர்த்தகம் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும். அடுத்து 1,000 ரூபாய் தாளை புழக்கத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இதன் மூலம் ஊழலை தடுக்க முடியும். 


Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2014-15-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஜூலை 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2014-15-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஜூலை 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜூலை 7-ம் தேதி தொடங்கும் என்றும் ரயில்வே பட்ஜெட் 9-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது. பொது பட்ஜெட் 11-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் முதல் பட்ஜெட் இது. மேலும் நரேந்திர மோடி அரசின் முக்கிய கொள்கை விளக்க ஆவணமாகவும் இது இருக்கும். பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கெனவே தொடங்கிவிட்டார். விலைவாசி உயர்வு, பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை அருண் ஜேட்லி எதிர்கொண்டுள்ளார். அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் மானியங்களை குறைப்பது தொடர்பான அம்சங்கள் பட்ஜெட்டில் முக்கிய இடம்பெறும் என கூறப்படுகிறது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்புகளை மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளில் புரிந்து கொண்டு படிக்கும் வகையில் இணையதளம் வழியாக 4 மொழிகளில் 700 பாடங்களை மத்திய அரசு வெளியிடவுள்ளது.

பொறியியல் படிப்புகளை மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளில் புரிந்து கொண்டு படிக்கும் வகையில் இணையதளம் வழியாக 4 மொழிகளில் 700 பாடங்களை மத்திய அரசு வெளியிடவுள்ளது. முதல்கட்டமாக, தமிழில் ஒரு பாடத்திற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உயர் கல்வி துறையில் பொறியியல் கல்லூரி களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. இதையொட்டி, பொறி யியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. உயர் கல்வியில் தரத்தை மேம்படுத்துவதுதான் தற்போது பெரிய சவாலாக இருக் கிறது. பொறியியல் படிக்கும் மாணவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே கல்லூரி படிக்கும் போதே வேலைவாய்ப்பை பெறுகின்றனர். ஆனால், மீதமுள்ள லட்சகணக்கான பொறியியல் பட்டதாரிகள் மீண்டும் பயிற்சி வகுப்புகளை பெற்ற பின்னரே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.இதற்கிடையே, உயர்கல்வி துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப வழி கல்வி மேம்பாட்டு திட்டம் (என்பிடிஇஎல்) 2003-ல் தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு திட்டங்களுக்காக மொத்தம் ரூ.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட மான இத்திட்டத்தில், பொறியியல் பிரிவில் கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் உள்ளிட்ட 700 பாடங்கள் மற்றும் 14,000க்கு மேற்பட்ட வீடியோக்களை http://nptel.iitm.ac.in, http://youtube.com/iit ஆகிய இணையதள முகவரியில் ஆங்கிலத்தில் பார்த்து படிக்க முடியும். மாணவர்கள் படிக்கும்போதே, சுயமாக சிந்திக்கும் திறன் தாய்மொழி கற்றல் மூலமே மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்பி டிஇஎல் திட்ட தேசிய ஒருங்கிணைப்பா ளரும், சென்னை ஐஐடி பேரா சிரியரு மான மங்கல சுந்தர் கூறியதாவது: தற்போது பொறியியல் படிப்பு படித்து வரும் மாணவர்கள் ஆங் கிலத்தில் படித்து முடித்து விட்டு, வேலைக்கு சென்றாலே போதும் என்று படித்து வருகின்றனர். மாணவர்கள் அவரவர்களின் தாய் மொழிகளில் படித்தால் தான், சுயமாக சிந்திக்க முடியும். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வும் முடியும். பல்வேறு வகை பொறியியல் படிப்புகளில் சுமார் 700 பாடங்கள் உள்ளன. இந்த பாடங்களை பிராந்திய மொழிகளில் இணையதளம் மூலம் படிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம். தற்போது, முதல்கட்டமாக பொறியியல் படிப்பில் முதலாண் டில் வரும் ‘பேசிக் எலக்ட் ரானிக்ஸ்’ என்ற பாடத்தை தமிழில் மொழி பெயர்க்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். அடுத்த 3 மாதங்களில் இந்த பாடத் திற்கான மொழிபெயர்ப்பு பணிகள் முடிந்துவிடும். இதைய டுத்து, http://nptel.iitm.ac.in என்ற இணையதளத்தில் அது வெளியிடப்படும். அடுத்தடுத்து பொறியியல் பாடத்திட்டங்களை பிராந்திய மொழிகளில் (இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம்) மொழி பெயர்க்கும் பணியை மேற் கொள்ளவுள்ளோம். இதற்காக மொத்தம் ரூ.4 கோடி செலவாகும் என மதிப்பிட்டுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் பொறியியல் படிக்கும் 70 சதவீத மாணவர்கள் பயன்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார். மாணவர்கள் படிக்கும்போதே, சுயமாக சிந்திக்கும் திறன் தாய்மொழி கற்றல் மூலமே மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவப் படிப்பு 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பு பொதுப் பிரிவு கவுன்சலிங் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி நடந்து வருகிறது.தமிழகத்தில் மொத்தம் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,023 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 84 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவை தவிர தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசு ஒதுக்கீட்டில் 498 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவை தவிர தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 900 இடங்கள் உள்ளன.  கவுன்சலிங் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறும். தமிழகத்தில் தற்போது 7 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதனால் அக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 498-க்கான கவுன்சலிங் பின்னர் நடத்தப்படும். 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். செப்டம்பர் 1 வரை மாணவர் சேர்க்கை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை செப்டம்பர் 1-ம் தேதிவரை சேர்க்கலாம். அதனால் மற்ற சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில், அதன் மூலம் கிடைக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜூலை 12-ம் தேதிக்கு மேல் கவுன்சலிங் நடத்தி நிரப்பப்படும் .

தமிழகத்தில் 2014-15-ம் கல்வி ஆண்டில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மற்றும் 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் விவரம்:
1. சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி)
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
3. கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி
4. மதுரை மருத்துவக் கல்லூரி
5. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி
6. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி
7. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி
9. சேலம் எம்.கே.எம்.மருத்துவக் கல்லூரி
10. திருச்சி கே.ஏ.பி.வி.மருத்துவக் கல்லூரி
11. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி
12. கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி
13. வேலூர் மருத்துவக் கல்லூரி
14. தேனி மருத்துவக் கல்லூரி
15. தர்மபுரி மருத்துவக் கல்லூரி
16. விழுப்புரம் மருத்துவக் கல்லூரி
17. சிவகங்கை மருத்துவக் கல்லூரி
18. திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி
தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளின் விவரம்:
1. ஐ.ஆர்.டி.மருத்துவக் கல்லூரி (பெருந்துறை)
2. பி.எஸ்.ஜி.மருத்துவக் கல்லூரி (கோயம்புத்தூர்)
3. மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி (குலசேகரம்)
4. கற்பக விநாயக மருத்துவக் கல்லூரி (சின்னக்கோளம்பாக்கம்).
5. தனலட்சுமி சினிவாசன் மருத்துவக் கல்லூரி (பெரம்பலூர்)
6. கற்பகம் பேக்கல்டி ஆப் மெடிக்கல் சயின்ஸ் அன்டு ரிசர்ச் (கோயம்புத்தூர்)
7. வேலம்மாள் மருத்துவக் கல்லூரி (மதுரை).
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3 மாதத்திற்குள் தேர்வின் முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3 மாதத்திற்குள் தேர்வின் முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 2,342 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த சனிக்கிழமை எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 243 மையங்களில் மொத்தம், 10 லட்சத்து 8,662 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 7 லட்சத்து 63 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 2 லட்சத்து 45 ஆயிரத்து 662 பேர் தேர்வு எழுத வரவில்லை. விஏஓ தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) புதன்கிழமை வெளியிடப்பட்டன. உத்தேச விடைகள் குறித்து முறையிட விரும்பினால் ஜூன் 24-ம் தேதிக்குள் விவரங்களை அனுப்புமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஆன்சர் கீ தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம். அது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்யும். அதன் பின்னர், புதிய ஆன்சர் கீ வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை குறைந்த பட்சம் 3 மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2014-2015 ஆம் வருட மருத்துவ உயர் சிறப்பு பட்ட மேற்படிப்பிற்கான (டி.எம்/எம்.சி.எச் ) மாணவர் சேர்க்கை அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSLC HALL TICKET | நடைபெறவுள்ள ஜுன் 2014, எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு உடனடித் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 19.06.2014 முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSLC HALL TICKET | நடைபெறவுள்ள ஜுன் 2014, எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு உடனடித் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 19.06.2014 முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று “SSLC SPECIAL SUPPLEMENTARY EXAM JUNE 2014 – HALL TICKET PRINT OUT” என்ற வாசகத்தினை ‘‘Click’’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது, மார்ச் 2014 பதிவெண் பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 18 June 2014

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கவுன்சலிங் | 156 உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்த இடங்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கவுன்சலிங் | 156 உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்த இடங்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை: தொடக்க கல்வி இயக்ககத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கவுன்சலிங் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 344 உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் 156 உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்த இடங்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. மேலும், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதலுக்கான கவுன்சலிங்கில் கலந்து கொண்ட நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில் 7 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மூலம் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களாக ஆணையும் வழங்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை தேர்வில் பாஸ் ஆனவர்களை பெயில் என்று கெசட்டில் வெளியிட்டது. மீண்டும் பாஸ் என்று திருத்தம் செய்து சரியாக கெசட்டை வெளியிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை சார்ந்த தேர்வில், பாஸ் ஆனவர்கள், பெயில் என்று கெசட்டில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியால் உடனடி நடவடிக்கையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துறைத் தேர்வுகளில் ஒன்றான லோக்கல் பண்ட் ஆடிட்டிங் டிபார்மெண்ட் தேர்வை கடந்த டிசம்பரில் நடத்தியது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை 5,000க் கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் எழுதினர். இதற்கான ரிசல்ட் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்ச்சி பெற்றதாக, அவர்களின் தேர்வு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. அதன் பிறகு புல்லட்டின் (கெசட்) வெளியிடும்போது தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்டங்கள் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், புல்லட்டின் தலைப்பில் பாஸ் ஆனவர்கள் என்பதற்கு, பதிலாக தவறுதலாக பெயில் ஆனவர்கள் என்ற தலைப்பில் பாஸ் ஆனவர்கள் பெயர்கள் போடப்பட்டிருந்தன. இதனால், தேர்வு எழுதிய அரசு ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.இந்த தவறால் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக டி.என்.பி. எஸ்.சி. நிர்வாகத்தின் அலட்சியத்தால் அரசு ஊழியர்கள் தவிப்பு என்ற தலைப்பில் தினகரன் நாளிதழில் நேற்று ஆதாரத்து டன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சி யாக டி.என்.பி.எஸ்.சி. உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தினகரன் செய்தியால்தான் ஒரே நாளில் எங்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது என்று தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், துறை தேர்வுகளில் ஒன்றான லோக்கல் பண்ட் ஆடிட்டிங் டிபார்மெண்ட் தேர்வு முடிவின் தேர்வாணைய செய்தி வெளியீட்டு எண் 6, பக்கங்கள் 591& 597 வரை உள்ள லிஸ்டில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலின் தலைப்பானது, பெயில் என்று பதிவாகியுள்ளது. இதனை மாற்றி தேர்ச்சி பெற்றோர் பட்டியல் என திருத்தி வாசிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நேரடியாக என்ஜினீயரிங் 2–ம் ஆண்டு சேர கலந்தாய்வு 19–ந்தேதி தொடங்கி ஜூலை 2–ந்தேதி வரை நடக்கிறது.

நேரடியாக என்ஜினீயரிங் 2–ம் ஆண்டு சேர கலந்தாய்வு 19–ந்தேதி தொடங்கி ஜூலை 2–ந்தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார்ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தொழில்நுட்பக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2014–15 கல்வியாண்டுக்கான நேரடி 2–ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் பொறியியற்கல்லூரியில் வரும் 19–ந்தேதி முதல் ஜூலை 2–ந்தேதி வரை நடக்கிறது.

வரும் 19–ந்தேதி பி.எஸ்.சி. பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க விரும்பும், விளையாட்டுத்துறை மாணவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடக்கிறது. 20–ந்தேதி கெமிக்கல் டெக்ஸ்டைல், தோல் (லெதர்) மற்றும் அச்சகம் (பிரிண்டிங்) போன்ற பாடப்பிரிவுகளுக்கும், 20–ந்தேதி பிற்பகல் முதல் 22–ந்தேதி வரை சிவில் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கு வரும் 23–ந்தேதி முதல் 27–ந்தேதி காலை வரையும், 27–ந்தேதி பிற்பகல் முதல் ஜூலை 2–ந்தேதி வரை எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள www.accet.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம். மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் மதிப்பெண்களில் மாறுதல் ஏதேனும் இருப்பின் கலந்தாய்வு மையத்திற்கு முன்கூட்டிய நாளிலேயே வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறவில்லையெனினும் தகுதியுள்ள மாணவர்களும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ‘ஹால்டிக்கெட்’ பெற முடிய வில்லையா? இதோ அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கூறும் வழிமுறைகள்

அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிற, பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்விற்கு பள்ளிகள் மூலமாகவும், தேர்வு மையங்கள் மூலமாகவும் தேர்வுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த தேர்வர்கள் கடந்த 13–ந்தேதி முதல் www.tndge.in என்ற இணையதள முகவரியில் ‘ஹால்டிக்கெட்’டுகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

எனினும், சில தேர்வர்கள் தமக்குரிய ‘ஹால்டிக்கெட்’டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை என தெரிவித்ததன் காரணமாக, இவ்வாறான தேர்வர்கள் தாங்கள் தேர்வுக்கட்டணம் செலுத்திய பள்ளி அமைந்துள்ள மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகத்தை உடன் தொடர்பு கொண்டு ‘ஹால்டிக்கெட்’டினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்வுக்கட்டணத்தினை பள்ளியில் செலுத்தியதற்கு ஆதாரமாக, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து தேர்வர் தேர்வுக்கட்டணம் செலுத்தியுள்ளார் மற்றும் ஜூன், ஜூலை 2014 பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தகுதியானவர் எனக்கடிதம் பெற்று மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேர்வர் சமர்பித்த பிறகே ‘ஹால்டிக்கெட்’ வழங்கப்படும்.

மேலும் தேர்வர் 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தினை எடுத்து ஒன்றினை ‘ஹால்டிக்கெட்’டில் ஒட்ட வேண்டும். மற்றொடு புகைப்படத்தினை தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வில் விளையாட்டுத்துறை மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 17 June 2014

2014-15 - ம் ஆண்டுக்கான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 699 வரையில் இடம் பெற்றுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 19.06.2014 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 09.00 மணிக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமெனபள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

2014-15 - ம் ஆண்டுக்கான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 699 வரையில் இடம் பெற்றுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 19.06.2014 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 09.00 மணிக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
விரிவாக பாருங்கள்
Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளம் அறிவியல் படிப்பிற்கானதரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளம் அறிவியல் படிப்பிற்கானதரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொது கல்வி பிரிவில் ஆர்.சூர்யமல்லிகராஜ், டி.இலக்கியபிரியா ஆகியோர் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள்பெற்றுள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் இளம் அறிவியல் பிரிவில் 13 பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் உறுப்புக்கல்லூரிகளில் 1040 இடங்கள், இணைப்புக் கல்லூரிகளில் 780 இடங்கள் எனமொத்தம் 1820 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு இளம் அறிவியல் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம்விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. விண்ணப்ப விநியோகம் மே 12-ஆம் தேதி தொடங்கி ஜூன் 7-ஆம் தேதி வரை நடந்தது. இதனிடையே ஆன்லைனில் விண்ணப்பித்து விண்ணப்பங்களை பதிவிறக்கம்செய்து பூர்த்தி செய்து அனுப்பும் பணி ஜூன் 7-ஆம் தேதி முடிவடைந்தது.இதன்படி சுமார் 42,784 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இது கடந்தஆண்டைக் காட்டிலும் 5,284 விண்ணப்பங்கள் அதிகமாகும் என மாணவர்சேர்க்கை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் பொது கல்வியில், தொழில்முறை படிப்பு, முன்னாள் ராணுவவீரர்களின் மகன் மற்றும் மகள், சிறப்பு பிரிவினர், சுதந்திரப் போராட்டதியாகிகளின் சந்ததியினர், வெளிநாடுவாழ் இந்தியர் மற்றும் நிறுவனஉபயதாரர்களுக்கென தனித்தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொது கல்வி பிரிவு தரவரிசைப் பட்டியலில் 25,534 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆர்.சூர்யமல்லிகராஜ், டி.இலக்கியபிரியா ஆகியோர்200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து 199.50கட்-ஆப் மதிப்பெண்களை 5 மாணவர்கள் பெற்றுள்ளனர்.தொழில்முறை படிப்பு பிரிவு தரவரிசைப் பட்டியலில் 1,673 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் எஸ்.கௌரீஸ்வரி 199.25 கட்-ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து எம்.தமிழரசன் 197.75 கட்-ஆப் மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், என்.கலைச்செல்வி 197.00 கட்-ஆப் மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். தொழில்முறை படிப்பில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல்,பி.டெக். வேளாண் பொறியியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சேரலாம். சிறப்பு பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியலில் 40 பேரும், முன்னாள்ராணுவ வீரர்களின் மகன், மகள் பிரிவில் 260 பேரும், சுதந்திரப் போராட்டதியாகிகளின் சந்ததியினர் பிரிவில் 6 பேரும் இடம் பெற்றுள்ளனர். வெளிநாடுவாழ் இந்தியர் மற்றும் நிறுவன உபயதாரர்கள் பிரிவில் 91 பேர் இடம் பெற்றுள்ள்ளனர். பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு, தொழில் கல்விக்கான முதல் கட்டகலந்தாய்வு ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது கட்ட கலந்தாய்வு ஜூலை 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிகிறது.
Tags :
TAMIL NADU EDUCATION FLASH NEWS,SCHOOL EDUCATION NEWS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்புக்கான மாணவர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 271 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 ‘கட்ஆப் மார்க்’ பெற்றுள்ளனர். பொது கலந்தாய்வு வரும் 27-ந்தேதி தொடங்குகிறது.

பொறியியல் படிப்புக்கான மாணவர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 271 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 ‘கட்ஆப் மார்க்’ பெற்றுள்ளனர். பொது கலந்தாய்வு வரும் 27-ந்தேதி தொடங்குகிறது.என்ஜினீயரிங் கல்லூரிகள்தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் என சுமார் 570 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.மொத்தம் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் மாணவர்கள் சேருவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்த உள்ளது. 

இந்த கலந்தாய்வுக்காக 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பித்த மாணவ- மாணவிகளில் சிலருக்கு ஒரே ‘கட்ஆப் மார்க்’, கணிதம், இயற்பியல் பாடத்தில் ஒரே மதிப்பெண், 4-வது விருப்ப பாடத்தில் ஒரே மதிப்பெண், பிறந்தநாள் தேதி சரி சமமாக இருத்தல் போன்றவை இருக்குமானால் அது போன்ற சமயத்தில் ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். இந்த ரேண்டம் எண் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டது.தரவரிசை பட்டியல் வெளியீடுஇந்தநிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் நேற்று காலை வெளியிட்டார். இதில் துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்கா, தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார்ஜெயந்த், உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் உமா மகேஸ்வரி, மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-5,264 விண்ணப்பங்கள் நிராகரிப்புஅண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கல்ந்தாய்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 48 மாணவர்கள், 66 ஆயிரத்து 639 மாணவிகள் ஆவார்கள்.1 லட்சத்து 68 ஆயிரத்து 423 மாணவ-மாணவிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 5 ஆயிரத்து 264 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான காரணம் அந்தந்த மாணவர்களுக்கு விளக்கங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.271 பேர் 200-க்கு 200 ‘கட்ஆப் மார்க்’நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அந்தந்த மாணவர்கள் சரி செய்தால் அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். தரவரிசைப்பட்டியலில் 271 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 கட்ஆப் மார்க் பெற்றுள்ளனர். அவர்களில் முதல் 100 பேர் 4-வது விருப்ப பாடத்திலும் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்தவர்கள் ஆவார்கள்.ஏற்றுக்கொள்ளப்பட்ட 1 லட்சத்து 68 ஆயிரத்து 423 மாணவர்களில், 124 மாணவர்களுக்கு ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டில் இது 24 மாணவர்களுக்கு ரேண்டம் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.வரும் 27-ந்தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் நாள் காலை 9 மணிக்கு தொடங்கும் பொது கலந்தாய்வில் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்துக் கொள்கிறார்கள். அடுத்து நடைபெறும் பொது கலந்தாய்வில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட உள்ளனர். கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 3500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.32 நாட்கள் பொது கலந்தாய்வுமொத்தம் 32 நாட்கள் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. கடந்த ஆண்டில் 37 நாட்கள் நடந்தது. விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.பொது கலந்தாய்வுக்கு எந்தெந்த நாட்களில் மாணவர்கள் வரவேண்டும் என்பது குறித்த அனைத்து தகவல்களும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்தந்த மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்படும். மேலும் அந்தந்த மாணவர்களுக்கான கலந்தாய்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.தரவரிசைப்பட்டியல்மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்களும், என்ஜினீயரிங் படிப்புக்கும் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் மருத்துவப்படிப்புக்கே அதிகம் பேர் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 14-ந்தேதி மருத்துவப்படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த மாணவர்களில் சிலர் நேற்று வெளியிடப்பட்ட என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப்பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு:-கே.சுந்தர் நடேஷ், எஸ்.அபிஷேக், வி.எஸ்.விஷ்ணுபிரியா, எம்.மிதுன், கே.ஆர். மைதிலி ஆகியோர் ஆவார்கள்.

Tags :
tnschool news ,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
  1. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்
  2. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
  3. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
  4. TEACHERS RECRUITMENT 2017 | AEES Kalpakkam (Tamil Nadu) | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - PGT-GT-SPECIAL TEACHERS | NO. OF VACANCIES - MANY
  5. பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை 2-ந்தேதி வரை பெறலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
  6. TIDCO RECRUITMENT 2017 | TIDCO-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES -1
  7. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  8. வெளிநாடு வாழ் இந்தியர் ’நீட்’ தேர்வு எழுதலாமா?
  9. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
  10. சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது
  11. மத்திய பட்ஜெட் தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?
  12. வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு
  13. கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
  14. www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்.
  15. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION
  16. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
  17. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
  18. TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் முறையான அறிவிப்பு-விண்ணபிக்க கடைசி தேதி 28.02.2017 | தேர்வு நாள் 29.04.2017 & 30.04.2017 | விண்ணப்ப பெற கட்டணம் ரூபாய் 50 | விண்ணபங்கள் கிடைக்கும் இடங்கள் -அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் | அச்சடிக்கப்படும் விண்ணப்பங்கள் 11 லட்சம் ..
  19. JIPMER MBBS 2017 ENTRANCE EXAM | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு. மார்ச் 27-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்.
  20. ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.
  21. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர், ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்
  22. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  23. TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. TNTET – 2017 குறித்த உண்மையான தகவல்களை படியுங்கள்...
  24. TNTET 2017 | ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
  25. ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு விரைவில் ‘ஆதார் பே’ மத்திய அமைச்சர் தகவல்
  26. சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம்
  27. IT FORM VERSION 2017.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2017.1..... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
  28. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் வங்கி மூத்த அதிகாரி தகவல்
  29. பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் தேர்வுத்துறை உத்தரவு
  30. ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு
  31. கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு
  32. TNTET EXAM 2017 | வெளியாகிறது TNTET 2017 குறித்த அறிவிப்பு - ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என தகவல்
  33. பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவிப்பு.
  34. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது
  35. Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment - 2017 | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு | மொத்த எண்ணிக்கை 15664 + 47 | கடைசி நாள் 22.02.2017 | எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.05.2017
  36. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு
  37. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் என்ன? தமிழக அரசு அறிவிப்பு
  38. இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம்
  39. இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ புகழாரம்
  40. அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
  41. 30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  42. மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு.
  43. தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் ’மாணவர் எழுச்சி’
  44. மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.
  45. ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத எழுச்சி போராட்டம் 25 லட்சம் பேர் திரண்டதால் ஸ்தம்பித்தது தமிழகம்
  46. பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செல்போனில் வங்கி பரிவர்த்தனைக்கு ‘மொபிகேஷ் எம்-வாலட்’ சேவை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், வங்கிக் கணக்கு தேவையில்லை
  47. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் : தமிழக அரசு
  48. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் தகவல்
  49. ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைகிறது ஆதார்அட்டை, ரேஷன்கார்டுகளை ஒப்படைப்போம் என அறிவிப்பு
  50. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் இன்று 20-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு உண்ணாவிரதம்- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
  51. ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து
  52. ஏறுதழுவுதல் திருவிழாவை நடத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
  53. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு
  54. சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
  55. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது
  56. ஆவின் பால் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட பிரிவில் 17 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 08-02-2017
  57. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் 15 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 04-02-2017
  58. INDIAN OIL RECRUITMENT 2017 | INDIAN OIL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - TECH ASST / ENGI ASST | NO. OF VACANCIES 4 | LAST DATE 17.02.2017
  59. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு விடுமுறை.
  60. நாளை கடை அடைப்பு போராட்டம் த.வெள்ளையன் பேட்டி
  61. அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.
  62. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் 32 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 29-1-2017
  63. பி.சி.பி.எல் நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017
  64. ரிட்ஸ் நிறுவனத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 16-1-2017
  65. ஏற்றுமதி ஆய்வுக்கழகத்தில் (EIC) 44 பணிகள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
  66. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி : கல்லூரிகளுக்கு விடுமுறை
  67. ஜல்லிக்கட்டு | மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம்
  68. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
  69. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - DIRECTOR | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
  70. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
  71. தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் உயர்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
  72. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களை விரைவில் நிரப்புகிறது.
  73. தேசிய அனல்மின் கழகத்தில் வேலை.
  74. மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே பணி!
  75. ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  76. நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
  77. TAMIL NADU OPEN UNIVERSITY RECRUITMENT 2017 | TN0U - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - CONTROLLER OF EXAMINATIONS | NO. OF VACANCIES 1 | LAST DATE 31.01.2017
  78. தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகம் பத்தாவது பட்டமளிப்பு விழா - விரிவான தகவல்கள்
  79. TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY RECRUITMENT 2017 | TNPESU - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST PROFFESSOR | NO. OF VACANCIES 6 | LAST DATE 06.02.2017
  80. வேளாண் அதிகாரி பணி வாய்ப்பு
  81. திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி...விரிவான விவரங்கள்...விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017
  82. பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
  83. மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு.கேட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
  84. மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 745 பணியிடங்கள்
  85. ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது.ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை.
  86. எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  87. வன சீருடைப் பணி நேர்முகத் தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு
  88. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
  89. வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.
  90. 17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி.
  91. ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும், ,8,000 ஆசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் பாண்டியராஜன்.
  92. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு.
  93. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!
  94. பாதுகாப்பு பணி தேர்வுக்கு ஹால்டிக்கெட்.
  95. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஆய்வக உதவியாளர் 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
  96. G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Download | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  97. வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அடுத்த மாதத்திற்குள் பான் அட்டைகளை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு
  98. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  99. SGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது.
  100. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நடவடிக்கை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தகவல்
  101. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு
  102. பல்கலை துணைவேந்தர் பதவி; கல்லூரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பில்லை
  103. பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்!
  104. ’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை
  105. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  106. 10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு
  107. புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை.
  108. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு : பிற மாநில ஓய்வூதியர்கள் தவிப்பு
  109. பி.எப்.,பில் ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு
  110. காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு 'மார்க்' : முடிவுக்கு வந்தது விண்ணப்ப சர்ச்சை
  111. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  112. JEE-MAIN | ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017
  113. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம்
  114. கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு
  115. பாடத்திட்டத்தை மாற்றுங்கள் - தினத்தந்தி தலையங்கம்
  116. எதிர்கால கனவுகளின் திருப்புமுனை பிளஸ் 2 மதிப்பெண் மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவுரை
  117. 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்
  118. மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  119. ஏப்ரலுக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? வங்கிகளிடம் விவரங்களை பெற வருமானவரித்துறை தீவிரம்
  120. பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.
  121. மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!
  122. மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு.
  123. கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.
  124. CPS PENSION மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!
  125. வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.
  126. இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்.
  127. எதிர்காலத்தை தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வு மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
  128. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம்
  129. EPF பென்ஷன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்!
  130. பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை.
  131. பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.