Tuesday, 12 January 2016

ஓய்வு பெற்ற, இறந்தஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில்இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில்கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற, இறந்தஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில்இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில்கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் எரியோடையை சேர்ந்த
பிரடெரிக்ஏங்கல்ஸ் என்பவர், பள்ளி கல்விஇயக்குனர் அலுவலகத்தில்தகவல் உரிமைச்சட்டத்தில் மனு அளித்தார். அதில் 2003 ஏப்., 1க்குபின் ஆசிரியராகபணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்தோரின்விவரம், அவர்களிடம்பிடித்த ஓய்வூதியதொகை உள்ளிட்டகேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு இயக்குனரகபொதுதகவல் அலுவலரானதுணை இயக்குனர்(மின் ஆளுமை) பதில் அளித்துள்ளார். அதில் மனுதாரர்கோரப்பட்ட தகவல்கள்தங்கள் அலுவலகத்தில்பராமரிக்கப்படவில்லை. இதனால் பதில்அளிக்க முடியாதுஎன, தெரிவித்துள்ளார். பள்ளி கல்வி இயக்குனர்தான், ஆசிரியர்களுக்குதுறை அலுவலராகஉள்ளார். அந்ததுறை அலுவலகத்திலேயேபணிபுரிவோரின் விவரம் இல்லை என, கூறியிருப்பதுஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரடெரிக்ஏங்கல்ஸ் கூறியதாவது: கருவூல கணக்குத்துறை இயக்குனரகத்திற்குதகவல் தருவதற்காக, 2003 ஏப்.,1க்கு பின் பணியில் சேர்ந்துஓய்வு பெற்றமற்றும் இறந்தஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை தயார் நிலையில்வைத்திருக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, 2015 மார்ச் 12ல் பள்ளி கல்விஇயக்குனர் சுற்றறிக்கைஅனுப்பியுள்ளார். ஆனால் அதே அலுவலகத்தில் தகவல்இல்லை என, கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தகவல் கேட்டு, மேல்முறையீடு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

TRB