Tuesday, 19 January 2016

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழக அரசால் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை
வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்கப் பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத் திருப்பவர்கள் உதவித்தொகை பெற சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித் தொகை விண்ணப்பத்தை, சென்னை நந்தனம் தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மனுதாரர்கள் கடந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப் படி, தொடர்ந்து 5 ஆண்டுகள் பதிவு செய்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்குட்பட்டவராக வும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாதவராகவும், தனியார், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாதவராகவும், ஆண்டு வரு மானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாத வராகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்ப் பதிவேட்டில் இருந்தால், கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில், விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள், சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு பதிவு எண், உதவித்தொகை எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

TRB