Friday, 8 January 2016

தொழில்நுட்ப எழுத்துத் தேர்வு: மையத்தை இணையதளம் மூலம் அறியலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார்.

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் தொழில்நுட்பப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான மையத்தை இணையதளம் மூலமாக அறியலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் தொழிற்நுட்பப் பணியிடங்களுக்கு, சென்னையில் சனிக்கிழமை (ஜன. 9) நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள் கிடைக்கப் பெறாதவர்கள், இத்துறையின் h‌t‌t‌p:​‌w‌w‌w.‌s‌t​a‌t‌i‌o‌n‌e‌r‌y‌p‌r‌i‌n‌t‌i‌n‌g. ‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதள முகவரியில், விண்ணப்பதாரருக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிய தேர்வு மையத்தை அறிந்து கொண்டு, தேர்வு மையத்துக்கு தங்களது ஆளறி அடையாள அட்டை மற்றும் விண்ணப்ப நகலுடன் சென்று தேர்வு எழுதலாம் மேலும் விவரங்களுக்கு: 044-28543334, 28543335, 2854337, 28520038, 28520039, 28520040 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

TRB