Tuesday, 12 January 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாது என டெல்லி வட்டாரங்கள்தெரிவித்தன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை | மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாது என டெல்லி வட்டாரங்கள்தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்குஇரு
முறைஅகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய நுகர்வோர்விலை குறியீட்டின்படி இந்தஉயர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொருஆண்டும் பிப்ரவரிமற்றும் செப்டம்பர்மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு முறையேஜனவரி மற்றும்ஜூலை 1 தேதிமுதல் முன்தேதியிட்டுவழங்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கானஅகவிலைப்படி 119 சதவீதமாக உள்ளது. இதற்கிடையில் மத்திய அரசுஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் அறிக்கைமத்திய அரசிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட5 மாநில தேர்தலுக்குபின்னரே இந்தசம்பள உயர்வுஅமல்படுத்தப்படும் என தெரிகிறது. 7வது சம்பள கமிஷன்பரிந்துரைப்படி 125 சதவீத அகவிலைப்படிஉயர்வு அடிப்படைசம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும். பணவீக்கம் அதிகமாகஇருப்பதால் ஜனவரி மாதத்தில் கணக்கிடப்படும் நுகர்வோர்விலைக்குறியீடும் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக ஜனவரியில்கொடுக்க வேண்டியஅகவிலைப்படியும் 6 சதவீதத்துக்கும் அதிகமாகஇருக்கும். இதனால் ஒட்டு மொத்த அகவிலைப்படி125 சதவீதத்தை தாண்டிவிடும் அபாயம் உள்ளது. இது 7 வது சம்பளகமிஷன் பரிந்துரைக்குமுரணாக இருக்கும்என்பதால் ஜனவரிஅகவிலைப்படி உயர்வை தள்ளிப்போட மத்திய அரசுமுடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள்தெரிவித்தன.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

TRB