Monday, 18 January 2016

Social Welfare and Nutritious Meal Programme Department RECRUITMENT 2016 | ஒப்பந்த அடிப்படையில் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் ...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 18.1.2016... விரிவான விவரங்கள் ...

ஒப்பந்த அடிப்படையில் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையால் மொத்தம் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தொகுப்பூதியம் ரூ.33,250 ஆகும்.கல்வித் தகுதி: சமூகப்பணி, சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை வளர்ச்சி ஆகிய துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தத் துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், அடிப்படை கணினி இயக்கும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைத் தொழிலாளர் நலன், சமூக நலம், குழந்தைகள் நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 1.1.2016-ஆம் தேதியன்று 26 வயதுக்கு மேற்பட்டவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.18-ஆம் தேதிக்குள்..: குழந்தைத் தொழிலாளர் நலன், சமூக நலன், குழந்தை நலம் ஆகிய துறைகளில் கள ஆய்வில் புதிய திட்டங்களை வகுப்பதில் பங்குபெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் நிலையில் பணிபுரிந்த அனுபவமிக்க ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்பங்களை www.tn.gov.in/department/30 என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செயயலாம். புகைப்படங்களுடன் கூடிய விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர்-செயலாளர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூகப் பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை-10, தொலைபேசி: 044-26421358.



Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,