Sunday, 31 January 2016

TNPSC VAO STUDY MATERIALS DOWNLOAD | 813 காலிப்பணியிடங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்..... தேர்வு நாள் : 28.02.2016 .... தங்கள் விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தினை சரிபார்த்துக்கொள்ளங்கள் ....TNPSC VAO STUDY MATERIALS பதிவிறக்கம் செய்யுங்கள் ...

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 28.02.2016 அன்று முற்பகல், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு, 813 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது.
இத்தேர்வுக்கென10 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய தேர்வுக்கட்டணம் செலுத்திய மற்றும் தேர்வுக்கட்டணச் சலுகை / விலக்கு கோரியவிண்ணப்பதாரர்களின் விவரங்கள் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net ல் வெளியிடப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது பயனாளர் குறியீட்டினை (Login ID)உள்ளீடு செய்து, தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தினை சரிபார்த்துக்கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தி அதன் விவரம் மேற்படி இணையதளத்தில் இல்லாவிடில், அந்த விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கானவிவரத்தினை அதே இணையப்பக்கத்தில் தோன்றும் படிவத்தில் உள்ளீடு செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான கடைசி தேதி 07.02.2016 ஆகும். அதன் பின்னர் பெறப்படும் இது தொடர்பான விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது. மேற்படி இணையதளத்தில் உள்ள விவரங்கள் விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒரு ஒப்புகை மட்டுமே. விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

TRB