Thursday, 31 March 2016

எஸ்.எஸ்.எல்.சி.விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 15-ந்தேதி தொடங்குகிறது.

10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 15-ந்தேதி தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 12ஆயிரத்து 53 பள்ளிகளில் இருந்து 3 ஆயிரத்து 371 மையங்களில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ-மாணவிகள் எழுதிவருகிறார்கள்.தமிழ் தேர்வு, ஆங்கில தேர்வு ஆகியவை நடந்து முடிந்துவிட்டன. கணித தேர்வு ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு ஏப்ரல் 13-ந்தேதி முடிவடைய உள்ளது. நாளை முடிவடைகிறது8 லட்சத்து 82 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு, இயற்பியல் தேர்வுடன் நாளை(வெள்ளிக்கிழமை) முடிவடைய உள்ளது.பிளஸ்-2 பாட நிபுணர்களை கொண்டு வினா- விடை தயாரிக்கப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கில விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 15-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் 32 மாவட்டங்களில் 78 மையங்களில் மதிப்பீடு செய்யப்பட இருக்கிறது.