Thursday, 28 April 2016

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர ஜூன் 11-ந்தேதி நுழைவுத்தேர்வு

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர ஜூன் 11-ந்தேதி நுழைவுத்தேர்வு
அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு இந்த வருடம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.நுழைவுத்தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்
மல்லிகா கூறுகையில் எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் மே மாதம் 2-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் ஜூன் 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடக்கிறது என்றார்.