Sunday, 17 April 2016

அரசு பள்ளிகளுக்கு 22-ம் தேதி முதல் விடுமுறை

அரசு பள்ளிகளுக்கு 22-ம் தேதி முதல் விடுமுறை
ஜூன் 1-ம் தேதி மீண்டும் திறப்பு
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி களுக்கு வரும் 22-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின்
கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 2015-16-ம் கல்வி ஆண்டில் 2015 ஜூன் 1-ம் தேதி முதல் 2016 ஏப்ரல் 21-ம் தேதி முடிய செயல்பட்டு பள்ளி வேலை நாட்கள் முடிவடைகிறது. இதையடுத்து, வரும் 22-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. அதேபோல் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு வரும் மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பாகிறது.2016-17-ம் கல்வியாண்டில் ஜூன் 1-ம் தேதி அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
>