Wednesday, 13 April 2016

பிளஸ் 2 மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு இருக்காது மருத்துவ கவுன்சில் தகவல்

பிளஸ் 2 மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு இருக்காது மருத்துவ கவுன்சில் தகவல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு இருக்காது. எனவே, பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் அச்சப்படத் தேவையில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கூறியுள்ளனர். இளங்கலை மருத்துவப் படிப் பான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்பு களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழை வுத் தேர்வு (என்இஇடி) நடந்த உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி
வழங்கியுள்ளது. நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான பணியில் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) இறங்கியுள்ளதாக தகவல் கள் வெளியாகி வருகின்றன. இத னால் மருத்துவப் படிப்பில் சேரு வோம் என்ற கனவில் இருக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கவலை அடைந்துள்ளனர். சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங் களில் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களை தேடி மாணவ, மாண விகள் அலைந்து வருகின்றனர். இதுதொடர்பாக இந்திய மருத் துவ கவுன்சிலின் தமிழக அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்துவது அவ்வளவு எளிது அல்ல. அதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். ஒரே மாதத்தில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான பணிகளை செய்துவிட முடியாது. இந்த ஆண்டு மருத்துவப் படிப்பு களுக்கு நுழைவுத் தேர்வு நடக்காது. எனவே, பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் அச்சம் அடைய வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர். நாடு முழுவதும் பலவிதமான பாடத் திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்படி நடத்தப்பட உள்ளது. இதனால் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேரக்கூடிய நிலை ஏற்படும். கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை அமல் படுத்திய பிறகு ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவது நன்றாக இருக் கும். முதுநிலை மருத்துவப் படிப் புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதில் பிரச்சினையில்லை. ஏனென்றால் நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ஒரே மாதிரியான பாடத் திட்டங்கள்தான் இருக்கிறது. அதை படித்துவிட்டு, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு கடினமாக இருக்காது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,