Thursday, 28 April 2016

எம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு.

எம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு.
எம்.இ., - எம்.டெக்., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான, தமிழக பொது நுழைவுத்தேர்வான,டான்செட் தேர்வுக்கான, ஆன்லைன் பதிவு, மே, 2ம் தேதி துவங்க உள்ளது.

சென்னை அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரி களில், எம்.இ., - எம்.டெக்., -எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர, டான்செட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வின், கட் - ஆப் மதிப்பெண்ணின் படி தான், முதுநிலை படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
வரும் கல்வி ஆண்டுக்கான, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் படிப்புக்கான, டான்செட் நுழைவுத்தேர்வு, ஜூன், 1லும், எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., படிப்புக்கு, ஜூன், 11லும் நடக்கிறது.
இந்த தேர்வுக்கு, மே, 2 முதல் மே, 17 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.