Wednesday, 13 April 2016

400 இளம் கலைஞர்களுக்கு மத்திய அரசு உதவித் தொகை ஏப்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

400 இளம் கலைஞர்களுக்கு மத்திய அரசு உதவித் தொகை ஏப்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்
இசை, நடனம், நாடகம், பாரம்பரிய கலை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 400 கலைஞர்களுக்கு மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது: மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கலாச்சார வளம் மற்றும் பயிற்சி மையம் சார்பில் இளம் கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இசை, நடனம், நாடகம், பாரம்பரிய கலை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த கலைஞர்கள் 400 பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். கலைஞர்கள் ஏதேனும் ஒரு நிறுவனம் அல்லது குருவிடம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். உதவித்தொகை பெற விரும்புவோர் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.ccrtindia.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,