Saturday, 30 April 2016

TNPSC நூலகர் பணி சான்றிதழ் சரிபார்ப்பு 9–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

நூலகர் பணி சான்றிதழ் சரிபார்க்க 9–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
நூலகர் மற்றும் உதவி நூலகர் பணிக்கு 29 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 மற்றும் 2–ந்தேதிகளில் எழுத்து தேர்வை நடத்தியது.நேர்காணலுக்கு தற்காலிகமாக 65 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த சான்றிதழ் விவரங்களை சரிபார்க்க தற்போது அழைக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு மே 9 மற்றும் 10 ஆகிய 2 நாட்கள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறுகிறது. இவர்களுக்கான அழைப்பாணை தபால் மூலம் அனுப்பப்படுகிறது. மேலும் இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அதில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் இந்த இரு நாட்களில் பங்கேற்காதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசு தேர்வாணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its notification dated 25.06.2012 had invited applications from eligible candidates for selection against 29 vacancies by direct recruitment to the posts of Librarian / Assistant Librarian in Various Services. The Written Examination for the said post was held on 01.08.2015 FN & AN and 02.08.2015 FN. A total of 65 candidates have been provisionally admitted for oral test and they have been called for certificate verification to verify and to confirm the claims made by them in their on-line applications and to decide their eligibility for admission to Oral Test. The Certificate Verification is scheduled to be held in the office of Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-3 on 09.05.2016 and 10.05.2016. The Notice of Certificate Verification has been sent to the candidates by speed post and it has also been hosted in the Commission’s website (www.tnpsc.gov.in). The candidates can download the Notice of Certificate Verification from the Commission’s website. SMS and e-mail have also been sent to the selected candidates directing them to down load the Notice of Certificate Verification from the Commission’s website. The candidates summoned for certificate verification should attend on the date and time allotted to them. If the candidates fail to appear for the Certificate Verification on the designated date and time, they will not be given any further chance to appear for the Certificate Verification and they will not be considered for further process of selection. SECRETARY தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு நூலகர் மற்றும் உதவி நூலகர் பதவிக்கான 29 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 25.06.2012-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. மேற்காணும் பதவிக்களுக்கான எழுத்துத் தேர்வு 01.08.2015 மற்றும் 02.08.2015 அன்று நடைபெற்றது. மேற்படி தேர்வில் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்வு பெற்ற 65 விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்த விவரங்களைச் சரிபார்க்கும்பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 09.05.2016 மற்றும் 10.05.2016 ஆகிய நாட்களில் சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேற்படி விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பாணை விவரம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், மேற்படி அழைப்பாணையினை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு குறுஞ்செய்தியும், மின்னஞ்சலும் தேர்வுபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அழைக்கப்பட்டோர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்துகொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அவர்கள் அடுத்தகட்ட பரிசீலனைக்கும் கருதப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,