Wednesday, 13 April 2016

பொது மருத்துவ நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு நடத்த வாய்ப்பு இல்லை மத்திய அரசு தகவல்

பொது மருத்துவ நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு நடத்த வாய்ப்பு இல்லை மத்திய அரசு தகவல்

இந்த ஆண்டு பொது மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., எம்.டி., பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க பொது நுழைவுத்தேர்வுநடத்த இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்து கடந்த 2013-ம் ஆண்டு    ஜூலை 18-ந்தேதி தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு,    நேற்றுமுன்தினம் அந்த தீர்ப்பை திரும்பப் பெற்றதுடன், பொது நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளித்தது. இதனால், இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  நடைமுறை சாத்தியமற்றது   ஆனால், தேர்வு நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு நேற்று    தெரிவித்தது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:-    மருத்துவ கல்லூரிகளில் தேர்வு பணிகள் கடந்த டிசம்பர் மாதமே  தொடங்கி விட்டன. தற்போது ஒன்றிரண்டு தேர்வுகள் முடிந்து விட்டன.சுகாதார அமைச்சகம் நடத்தும் பி.எம்.டி. தேர்வு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்க உள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டி இருப்பதால், மே மாத இறுதிக்குள் அனைத்து தேர்வுகளும் முடிவடையும். எனவே, பொது மருத்துவ நுழைவுத்தேர்வை இந்த ஆண்டு நடத்துவது நடைமுறை சாத்தியம் இல்லாதது.   அடுத்த ஆண்ட
அடுத்த ஆண்டு நடத்தப்படுமா என்று கேட்டால், அது சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் இறுதி தீர்ப்பை பொறுத்தது.சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரத்தை கவனிக்கும் அதே வேளையில்,மருத்துவ படிப்புகளுக்கு பொதுவான தேர்வு நடத்த வழிவகுக்கும்  வகையில், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அந்த பணி நடந்து வருகிறது. எனவே, அடுத்த 6 மாதங்களில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மூலமாகவோ, சட்ட திருத்தம் மூலமாகவோ எதுவும் நடக்காத பட்சத்தில், நாங்கள் தேர்வை அமலுக்கு கொண்டு வந்து விடுவோம்.  இவ்வாறு சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.