Wednesday, 13 April 2016

இந்த ஆண்டில் சராசரியை விட அதிக மழை எதிர்பார்க்கலாம் வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த ஆண்டில் சராசரியை விட அதிக மழை எதிர்பார்க்கலாம் வானிலை ஆய்வு மையம் தகவல்
நடப்பாண்டில் பருவமழை பொழிவு சராசரியை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த இரு ஆண்டுகளாக போதிய அளவுக்கு பருவமழை பொழியாத காரணத்தினால் பல்வேறு மாநிலங்கள் வறட்சியை சந்தித்தன. இதனால் வேளாண் தொழில் பாதிப்படைந்து பொருளாதார வளர்ச்சியும்
மந்தமடைந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் பருவமழை கைகொடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் லஷ்மண் சிங் ரத்தோர் நேற்று கூறியதாவது: இந்த ஆண்டு பருவமழையின் நீண்டகால சராசரி அளவு 106 சதவீதமாக இருக்கும். வழக்கமான மழைபொழிவு என்பது 94 சதவீதம். இதனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவில் பருவமழை பொழியும். மழை பொழிவு குறைந்தாலும் அது 1 சதவீத அளவுக்கே இருக்கும். வறட்சியால் பாதிக்கப்பட்ட மராத்வாடா மற்றும் பண்டல்கண்ட் பகுதிகளிலும் இந்த ஆண்டு நல்ல மழை பொழிவை எதிர்பார்க் கலாம். இதனால் குறிப்பிட்ட சில இடங் களில் பலத்த மழை பெய்வதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் வடகிழக்கு, தென் கிழக்கு பகுதிகளிலும் குறிப்பாக தமிழகத்திலும், அதையொட்டியுள்ள ராயலசீமா மாவட்டங்களி லும் சராசரி மழை அளவு சற்று குறைய லாம். இவ்வாறு அவர் கூறினார். வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி டி.எஸ்.பாய் கூறும்போது, ''கடந்த ஆண்டு பருவமழை பொழிவுக்கு தடையாக இருந்த 'எல் நினோ' விளைவு தற்போது பலவீனம் அடைந்து வருகிறது. பருவமழை காலங்களான ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் மழை பொழிவு அதிகரிக்கும். மேலும் 'லா நினா' விளைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இதனால் பருவமழை பொழிவு இந்த ஆண்டு அதிகமாக இருக்கும்'' என்றார். பருவமழை அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதை தொடர்ந்து இந்த ஆண்டு வேளாண் உற்பத்தியும் பெருகும் என எதிர்பார்க் கப்படுகிறது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதி கரித்து பங்கு சந்தை ஏற்றம் அடையும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். பருவமழை தொடர்பான அடுத்தகட்ட வானிலை முன்னறி விப்பு வரும் ஜூன் மாதம் வெளியி டப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,