Wednesday, 13 April 2016

பழைய ஓய்வூதியம்; தேர்தலுக்கான அறிவிப்பு அரசுஊழியர்கள் குமுறல்.

பழைய ஓய்வூதியம்; தேர்தலுக்கான அறிவிப்பு அரசுஊழியர்கள் குமுறல்.
சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது,'என அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் செல்வம் கூறியதாவது:1.1.2003 முதல்
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் மற்ற மாநிலங்களில் 2004 முதல் அமலானது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி பலன்கள் இதுவரை வழங்க நடவடிக்கை இல்லை.இதுவரை புதிய ஓய்வூதிய திட்டம் அமுலுக்கு வந்த பின் 1890 பேர் இறந்துள்ளனர்.3444 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக, ஒரு கமிட்டியை அரசு அமைத்துள்ளது. ஆனால் புதியஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தபின் 2006 முதல் 2011 வரை தி.மு.க., ஆட்சியில் இருந்தது.அப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியிருக்கலாமே. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், ரூ.7 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதன் மூலம், அது தடுக்கப்படும்.ஆனால் ஆட்சியில் மாறி மாறி இருந்த தி.மு.க.,---அ.தி.மு.க., அதை கண்டுகொள்ளவில்லை. தி.மு.க., தற்போது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது நாடகம். தி.மு.க., ஆட்சியிலிருந்த போது ஏன் கொண்டு வரவில்லை, என்றார். தமிழ்நாடு வருவாய்த்துறைஅலுவலர் சங்க மாநில செயலாளர்சிவஜோதி கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக, தி.முக., தேர்தல் அறிக்கையில் குறிப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் சொன்னால் மட்டும் போதாது. அதை நிறைவேற்ற வேண்டும், என்றார்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,