Wednesday, 13 April 2016

‘ஆட்டிஸம்’ பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத் திறனாளிகளாக கருத வேண்டும் மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை பரிந்துரை

'ஆட்டிஸம்' பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத் திறனாளிகளாக கருத வேண்டும் மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை பரிந்துரை

ஆட்டிஸம் (Autism) என்பது பிறவி யிலேயே தோன்றி, பாதிக்கப்பட்ட வரின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மூளை சம்பந்தப்பட்ட குறைபாடு ஆகும். குழந்தை களுக்கு இரண்டரை வயதுக்குள் இதன் அறிகுறிகளை அறிய முடியும். இந்த பாதிப்பின் தீவிரம் எவ்வளவு இருந்தாலும், இளம் வயதிலேயே பயிற்சி அளிக்கத் தொடங்கினால் நல்ல முன்னேற் றத்தை காண முடியும். இந்நிலையில் ஆட்டிஸம் குறை பாடுகளை குறைந்தபட்சம் 40 சதவீதம் உள்ளவர்களை மாற்றுத் திறனாளிகளாக கருத வேண்டும் என மத்திய சமூகநீதி மற்றும் அதி
காரமளித்தல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவர்களின் குறை பாட்டின் அளவை மாநில அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கண்டறிந்து சான்றிதழ் அளிக்க வேண்டும் எனவும் இந்தச் சான் றிதழ் இருப்பவர்களை மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் சேர்க்க லாம் எனவும் முடிவுக்கு வந் துள்ளது. இது குறித்து 'தி இந்து'விடம் மத்திய சமூகநீதி மற்றும் அதிகார மளித்தல் அமைச்சக வட்டாரம் கூறும்போது, "1995-ல் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் திருத்தம் செய்யப்படாமல் உள்ளது. எட்டு வகையான பாதிப்பு கொண்டவர்கள் இதன் பட்டியலில் உள்ளனர். இதை 19 ஆக அதிகரிக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்ய உள்ளது. இதில் ஆட்டிஸம் குறைபாடு உள்ளவர்களையும் சேர்க்க வேண்டும் என பரிந் துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக மத்திய சுகாதார அமைச்சகத் திடமும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தனர். கடந்த 2007-ல் நடந்த ஐ.நா. மாநாட்டில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் உரிமைகளை பெறு வதற்கான ஓர் உடன்படிக்கை கொண்டு வரப்பட்டது. இதை 7-வது நாடாக இந்தியா கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கையின்படி மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம் அமல்படுத்தாத நாடுகள் புதிய சட்டம் இயற்ற வேண்டும். ஏற் கெனவே சட்டம் வைத்துள்ளவர் கள் புதிய உடன்படிக்கைக்கு ஏற்ப திருத்தம் செய்ய வேண்டும். இதன்படி இந்தியாவில் சட்டத் திருத்தம் செய்ய கடந்த 2013-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டார். என்றாலும் தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அது முடியாமல் போனது. அன்று முதல் கிடப்பில் உள்ள சட்டத் திருத்தப் பணிகளை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் பல்வேறு சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதையடுத்து வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவர மோடி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,