Monday, 18 April 2016

அசோக சக்ரா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அசோக சக்ரா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வீர, தீரச் செயல் புரிந்தமைக்காக வழங்கப்படும் அசோக சக்ரா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:நமது நாட்டின் வீர, தீரச் செயல் புரிந்தவர்களுக்கு இந்திய அரசால் 3 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், அசோகசக்ரா விருது தன்னிகரற்ற
தியாகம் புரிந்தவர்களுக்கும், கீர்த்திசக்ரா விருது பகட்டான வீரத்துடன் பேராடியவர்களுக்கும், ஷவுர்ய சக்ரா விருது வீரத்துடன் போராடியவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினம் மற்றும் சுதந்திரத் தினத்தின் போது வழங்கப்படுகிறது.ராணுவத்தினர், பொதுமக்கள், காவல் துறையினர், மத்திய ஆயுதப் படை வீரர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகியோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள். பல்வேறு நிகழ்வுகளான இயற்கைப் பேரழிவுகள், விபத்து, நீரில் முழ்கியவரை காப்பாற்றுதல், தீ விபத்துகள், தீவிரவாத தாக்குதல், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களைத் தடுத்தவர்கள் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படும்.அதன்படி 2015-16-ஆம் ஆண்டிற்கான அசோகசக்ரா வீர தீர விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.2015-16ம் ஆண்டிற்கான அசோகசக்ரா விருதிற்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். நிறைவு செய்த விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-, ஈ.வே.ரா பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை 600 084 என்ற முகவரிக்கு வருகிற 18.04.2016-க்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,