Saturday, 16 April 2016

இந்த ஆண்டு கட்-ஆப் மார்க் குறையும்?

இந்த ஆண்டு கட்-ஆப் மார்க் குறையும்?
இந்தாண்டு முடிந்துள்ள +2 பொதுத்தேர்வு, மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எதிர்பாராத வகையில் பாடங்களின் உள்ளிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், மாணவர்களின் தயாரித்தல்கள் பயனளிக்கவில்லை. சில கேள்விகள் பிழையாகவும் கேட்கப்பட்டன.
மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகினர். இதுபோன்ற காரணங்களால் இந்தாண்டு எஞ்சினியரிங், மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் குறையலாம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதிக திறன் கொண்ட மாணவர்கள் ஓரளவுக்கு வினாத்தாள் சவாலை சமாளித்துவிட்டார்கள். வேதியியல் பாடத்தில் 6 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் சில பாடங்களில் குழப்பமான கேள்விகளுக்குக் கருணை மதிப்பெண்கள் கிடைக்கும் பட்சத்தில் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை என்ற கருத்தும் ஒருபுறம் நிலவிவருகிறது.சராசரி மாணவர்கள், "எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண்கள் வராது" என்று வருத்தமாகச் சொல்கிறார்கள். "கேள்வித்தாள் சவாலாக அமைந்துவிட்ட நிலையில் தேர்வில் எப்படியாவது தேர்ச்சி அடைந்தால் போதும். மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால் கலை அறிவியல் படிப்பில் மட்டுமே சேரமுடியும்" என்கிறார் ஒரு மாணவர். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு கட்-ஆப் மார்க் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது. பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனி முறையில் கட்-ஆப் மதிப்பிடப்படுகிறது. கணிதம் இயற்பியல் மற்றும் வேதியியலில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியலுக்கான கட்-அட் மார்க் கணக்கிடப்படுகிறது. பொறியியலுக்கான கட்-ஆப் மார்க் கணக்கிடும் முறை கணிதத்தில் எடுத்த மதிப்பெண்களை இரண்டால் வகுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்களைக் கூட்டி, அதை நான்கால் வகுத்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.இரண்டு விடைகளையும் கூட்டினால் கிடைக்கும் எண்ணிக்கை தான் உங்கள் கட்-ஆப். உதாரணத்துக்கு, ஒரு மாணவன் கணிதத்தில் 180, வேதியியலில் 160, இயற்பியலில் 180 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். கணிதத்தில் பெற்ற 180 மதிப்பெண்ணை இரண்டால் வகுத்தால் கிடைக்கும் விடை: 90 வேதியியலில் பெற்ற மதிப்பெண் 160, இயற்பியலில் பெற்ற மதிப்பெண் 180... இரண்டையும் கூட்டினால் கிடைக்கும் விடை: 340. இதை நான்கால் வகுத்தால் கிடைக்கும் விடை; 85.  90+85= 175. இதுதான் அந்த மாணவரின் கட்-ஆப். மருத்துவப் படிப்புக்கு, கட்-ஆப் கணக்கிடும்போது கணிதத்துக்குப் பதிலாக உயிரியல் பாடம் எடுத்துக் கொள்ளப்படும். ஒரு மாணவர் உயிரியலில் 190, இயற்பியலில் 180, வேதியியலில் 185 மதிப்பெண்கள் எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.உயிரியல் பாடத்தில் பெற்ற 190 மதிப்பெண்ணை இரண்டால் வகுத்தால் கிடைக்கும் விடை: 95இயற்பியலில் பெற்ற 180, வேதியியலில் பெற்ற 185 மதிப்பெண்களைக் கூட்டினால் கிடைக்கும் விடை: 365. இதை நான்கால் வகுத்தால் கிடைப்பது: 91.2595+91.25= 186.25. இதுதான் அந்த மாணவரின் மெடிக்கல் கட்-ஆப். "இயற்பியல் தேர்வில் நான்கு 1 மதிப்பெண் கேள்விகள் மட்டும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறுகிறார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் இயற்பியலில் சென்டம் எடுப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் இயற்பியல் பாடத்துக்கான கட்-ஆப் மார்க் குறைய வாய்ப்பில்லை.  உயிரியல் பாடத்தில்தான் மாணவர்களுக்கு நிறைய குழப்பங்கள் இருந்தது. கடந்தாண்டு உயிரியல் பாடத்தில் 350 மாணவர்கள் மட்டுமே சென்டம் வாங்கியிருந்தனர். இந்தாண்டு அந்த எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.  வேதியியல் பாடத்தில் சில தவறான மற்றும் குழப்பமான கேள்விகள் இடம்பெற்றிருந்தது. இதனால் 6 கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் நிறைய மாணவர்கள் 199 வரை பெற வாய்ப்புண்டு. சென்டம் மட்டும் குறையும். மருத்துவத்துக்கான கட் ஆப்பை பொறுத்தவரை 0.25 சதவீதம் மட்டுமே குறைய வாய்ப்புள்ளது. கணிதப் பாடத்தில் கடின கேள்விகள் இடம்பெற்றிருந்தது. அதனால் அந்தப் பாடத்திலும் சென்டம் குறையும். பொறியியல் கட்-ஆப்பில் 0.5 முதல் 0.75 வரை குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் பெரிய அளவில் கட்-ஆப் மார்க்கில் மாற்றம் இருக்காது. 2014-15 ஆண்டில் கட்-ஆப் குறைந்தபோது 2013-14ம் ஆண்டில் +2 முடித்த மாணவர்கள் சுமார் 300 ேபர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வாய்ப்பு பெற்றனர். அதேபோல் இந்தாண்டும் கட் ஆப் குறையும் பட்சத்தில் கடந்த கல்வியாண்டு மாணவர்கள் பயன்பெறும் வாய்ப்பு ஏற்படும். அரசு கல்லூரிகளில் அவர்கள் மருத்துவப் படிப்பில் நுழைய முடியும்,'' என்கிறார் கல்வியாளர் தமிழரசன்.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,