Wednesday, 27 April 2016

மருத்துவ மாணவர்களுக்கு உயிரியல் நன்னெறியை கற்பிக்கும் புதிய கல்விமுறை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது

மருத்துவ மாணவர்களுக்கு உயிரியல் நன்னெறியை கற்பிக்கும் புதிய கல்விமுறை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது
இந்திய மருத்துவ பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த துணை வேந்தர்களின் 7-வது கலந் தாய்வுக் கூட்டம் எஸ்ஆர்எம் பல் கலைக்கழகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரபீர் பக்ஸி தொடங்கி வைத்தார், அந்த சமயத்தில். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்திய உயிரியல் நன்னெறி மையத்தில் (India Nodal Bioethics Centre) உருவாக்கப்பட்ட புதிய உயிரியல்
நன்னெறி பாடத் திட்டத்தை அவர் சமர்ப்பித்தார்.பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமையையும், இளங்கலை மருத்துவ மாணவர்களின் பாடத் திட்டத்தில் நேரம் இல்லாமை யையும் நிவர்த்தி செய்யும் வகையில் இப்புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,துணைவேந்தர்களின் கலந் தாய்வுக் கூட்டத்துக்கு முன்னோ டியாக. கடந்த ஒரு வாரமாக உயிரியல் நன்னெறி சிறப்பு கற்பித்தல் பயிற்சி யுனெஸ்கோ வால் நடத்தப்பட்டது. இதில் ஆஸ்தி ரேலியா, இலங்கை, நேபாளம், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து 36 மூத்த ஆசிரியர்கள் கலந்துகொண்டனர், இவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் நாடுகளுக்கு திரும்பச் சென்று, அங்கே மற்றவர்களுக்கு சிறப்புப் பயிற்சியை அளிப்பார்கள்.எஸ்ஆர்எம் பல்கலை.யின் இந்த முயற்சியை யுனெஸ்கோவின் ஆசிய பிராந்திய ஆலோசகர் சூ விஸ் பாராட்டினார். ஆசியா - பசிபிக் யுனெஸ்கோவின் நன்னெறிப் பிரிவின் தலைவர் டாக்டர் ரஸ்ஸல் டிசோசா இந்தப் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றிச் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் இந்திய உயிரியல் நன்னெறி மைய தலைவர் ப.தங்கராஜு நன்றியுரையாற்றினார்.இந்திய மருத்துவ பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்களின் 7-வது கலந்தாய்வுக் கூட்டத்தின்போது, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட புதிய உயிரியல் நன்னெறி பாடத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.