Wednesday, 13 April 2016

மத்திய அரசு நிறுவனத்தில் பைலட் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு நிறுவனத்தில் பைலட் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு
மத்திய அரசு நிறுவனத்தில் பைலட் பயிற்சியில் சேர பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: உத்தரப் பிரதேச
மாநிலம் ரேபரேலியில் உள்ள இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரன் அகாடமியில் 18 மாத கால பைலட் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை முடிப்பவர்களுக்கு "சிபிஎல்" எனப்படும் கமர்சியல் பைலட் லைசன்ஸ் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி நிறுவனத்தில் நடப்பு ஆண்டில் மொத்தம் 150 இடங்கள் உள்ளன. பிளஸ் 2-வில் இயற்பியல், கணிதம் படித்த மாணவர்கள் இதில் சேரலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினருக்கு 50 சதவீத மதிப்பெண் போதும். நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்கு மே 6-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.igrua.go.in) விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, நுழைவுத்தேர்வு மையங்கள், பயிற்சி கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தகவல் தொடர்பியல் பயிற்சி நிறுவனத்தில் 2016-17-ம் கல்வி ஆண்டில் பத்திரிகை, விளம்பரம், மக்கள்தொடர்பு ஆகியவற்றில் முதுகலை டிப்ளமா படிப்புகளில் சேர மே 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், கூடுதல் விவரங்களை www.iimcgov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,