Friday, 8 April 2016

CENTRAL GOVT D.A G.O RELEASED | மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீத அறிவித்து 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அக விலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந்துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக்கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. அதன் அடிப்படை யில் மத்திய
அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அடிப்படை ஊதியத்துடன் இணைந்த அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.. இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,