Tuesday, 12 April 2016

ESLC APRIL 2016 EXAMINATION - HALL TICKET DOWNLOAD | எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016 தனித்தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016 தனித்தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் செய்திக்குறிப்பு 18.04.2016 அன்று தொடங்கவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத அரசுத் துறையால்
அறிவிக்கப்பட்ட நாட்களில் அரசுத் தேர்வுகளின் சேவை மையங்களில் (Service Centre) ஆன் - லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 11.04.2016 முதல் (திங்கட்கிழமை) www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும் முறை றறற.வனேபந.in என்ற இணையதளத்தில் “ESLC APRIL 2016 EXAMINATION - HALL TICKET” என்ற வாசகத்தினை ஊடுஐஊமு செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of birth) பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேற்காண் தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,