Thursday, 7 April 2016

TNPSC தொகுதி IIA-ல் அடங்கிய பணிக்கு 4-வது கட்ட கலந்தாய்வு !!!

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its Notification dated 06.02.2014 and Supplemental Notification dated 16.04.2014 had invited applications for selection of candidates for appointment by direct recruitment to the posts included in Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts) 2013 – 2014. The Written Examination was held on 29.06.2014 and results published on 12.12.2014. In order to fill up the 19 (14 Assistants and 5 Personal Clerks) unfilled vacancies, IV
phase of Certificate Verification and Counselling is to be held on 12.04.2016 and 13.04.2016 respectively, at the O/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003. 2. The tentative list of candidates who have been provisionally admitted for the IV Phase of Certificate Verification and Counselling has been hosted in the Commission’s Website. Candidates are also informed individually through E-mail / SMS and by speed post about the date and time of Certificate Verification and Counselling. 3. Candidates are admitted for Certificate Verification based on the marks obtained by them in the Written Examination, claims made by them in their On-line applications and as per rule of reservation of appointments, and their admission for counselling is subject to availability of vacancies in their respective reservation categories as per their rank and rule of reservation of appointments. 4. Candidates who have been admitted for Certificate Verification and Counselling are directed to present themselves as mentioned in the Certificate Verification and Counselling Schedule. Candidates who do not appear for Certificate Verification and Counselling on the date and time allotted to them will lose his/her opportunity, and they will not be given any further chance to appear for the same. Secretary Tamil Nadu Public Service Commission Date: 31.03.2016 தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி IIA-ல் அடங்கிய) 2013-2014- [Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-Interview posts)]- இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 06.02.2014 மற்றும் 16.04.2014ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 29.06.2014 அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 12.12.2014 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான 19 (14 - உதவியாளர்கள் மற்றும் 5 - நேர்முக எழுத்தர்) காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு, நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 12.04.2016 மற்றும் 13.04.2016 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு SMS மற்றும் E-mail மூலமும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அட்டவணை (அழைப்புக் கடிதம்) விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேதி: 31.03.2016

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,