Friday, 29 April 2016

SSA சார்பில் மாவட்ட அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்குழந்தைகள் மொத்தம் 413 பேர் மீட்பு.

SSA சார்பில் மாவட்ட அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்குழந்தைகள் மொத்தம் 413 பேர் மீட்பு.
தேனி: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்குழந்தைகள் மொத்தம் 413 பேர் மீட்கப்பட்டு, அவர்களை உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தாலுகா அளவில் நடந்த கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
ஏப்.4ல் துவங்கிய இப்பணி 30 வரை நடக்கிறது.இதற்கிடையில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் கோயில் பகுதிகளில் சுற்றித்திரிந்த 5 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் மொத்தம் 321 பேரும், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் 82 பேரும் கண்டறியப்பட்டனர். இவர்கள் அனைவரையும் உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் முதல்கட்டமாக பள்ளி செல்லாத மற்றும் இடை நின்றல் மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.இதில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லாதது தெரியவந்துள்ளது. இக்குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப படிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக மே 17 முதல் இதுபோன்ற குழந்தைகளின் கணக்கெடுப்பு பணி மீண்டும் துவங்கும், என்றார்.