Saturday, 30 April 2016

TNPSC உதவி புள்ளியியல் ஆய்வாளர் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION | The Tamil Nadu Public Service Commission in its notification dated 07.05.2015 had invited applications from eligible candidates for appointment by direct recruitment against 270 vacancies in the post of Assistant Statistical Investigator in the Department of Economics and Statistics in the Tamil Nadu General Subordinate Service – 2014. The written examination for the recruitment to the said post was conducted on 11.07.2015 F.N & A.N. The II phase of certificate verification to verify and confirm the genuineness of the claims made by the candidates in their applications of the 54 candidates have been scheduled to be held in the office of Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, Chennai on 06.05.2016. The Notice of certificate verification has been sent to all the provisional candidates through speed post and the same has also been hosted in the Commission’s website. The candidates may also download the Notice of Certificate Verification from the Commission’s website (i.e.www.tnpsc.gov.in). Consideration of the candidates for certificate verification cannot be construed as clearance for further selection process. If the candidates fail to appear for certificate verification on the designated time on 06.05.2016, they will not be given any further chance to appear for the certificate verification. Secretary Tamil Nadu Public Service Commission தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு 2014 - ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொது சார்நிலைப்பணியில் அடங்கிய பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பணியிலடங்கிய உதவி புள்ளியியல் ஆய்வாளர் (Assistant Statistical Investigator) பதவிக்கான 270 காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 07.05.2015 - ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் வரவேற்றிருந்தது. மேற்காணும் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 11.07.2015 அன்று மு.ப. மற்றும் பி.ப. ஆகிய இரு வேளைகளில் நடைபெற்றது.
மேற்படி பதவிக்கான விண்ணப்பதாரர்களின் இணையதள வழியிலான விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்க்கும் பொருட்டும் அவ்விவரங்களின் உண்மைத்தன்மையினை அறியும் பொருட்டும் நடைபெறவுள்ள, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 54 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 06.05.2016 அன்று சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேற்படி இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 54 விண்ணப்பதாரர்களுக்கும் அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் (Speed Post) வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. தவிர, விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணைய தளத்திலும் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், மேற்படி அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம். மேற்கண்டவாறு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் நேர்காணல் தேர்வு மற்றும் அதனை தொடர்ந்த தெரிவுப் பணிகளுக்கு தகுதி பெற்றுவிட்டதாக கருத இயலாது. மேலும், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்து கொள்ள தவறும் விண்ணப்பதார்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பமாட்டாது. 

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,