Monday, 2 May 2016

மருத்துவ நுழைவுத் தேர்வு: 1.5.2016 அன்று தேர்வு எழுதியவர்கள் ஜூலை 24-ல் எழுத முடியாது.

மருத்துவ நுழைவுத் தேர்வு: 1.5.2016 அன்று தேர்வு எழுதியவர்கள் ஜூலை 24-ல் எழுத முடியாது. 1.5.2016 அன்று தேர்வு எழுதியவர்கள் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்க இயலாது. பெரும்பாலான மாணவர்கள் முதல் தேர்வை தவிர்த்துவிட்டு, ஜூலை மாதம் நடைபெறும் தேர்வை எழுதலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் ஒரு மாணவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேசிய தகுதி காண் தேர்வை (என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை தேசிய தகுதி காண் தேர்வின் முதல் கட்டம் என்று கருத்தில் கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக ஜூலை 24-ஆம் தேதி 2-ஆம் கட்ட தேசிய தகுதி காண் தேர்வு நடத்தப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.1.5.2016 அன்று தேர்வு எழுதியவர்கள் ஜூலை 24-ஆம் தேதி நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதியவர்கள் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் தேசிய தகுதி காண் தேர்வில் பங்கேற்க இயலாது.பெரும்பாலான மாணவர்கள் முதல் தேர்வை தவிர்த்துவிட்டு, ஜூலை மாதம் நடைபெறும் தேர்வை எழுதலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தேர்வுக்கு தயார் செய்வதற்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் ஒரு மாணவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு அமலில் இல்லாத தமிழகத்தில் தேர்வு நடத்துவதை கட்டயமாக்க வகை செய்யும் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழகத்தின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,