Saturday, 7 May 2016

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு 17-ம் தேதியும், 10-வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 25-ம் தேதியும் வெளியாகிறது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு 17-ம் தேதியும், 10-வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 25-ம் தேதியும் வெளியாகிறது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி நிறைவு பெற்றது. தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வை 8.39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-வகுப்பு பொதுத் தேர்வை 10.72 லட்சம் மாணவர்கள் எழுதினர். எழுதிய மாணவர்கள் மதிப்பெண்கள் விபரங்களை தெரிந்துக் கொள்ளவும், உயர்கல்விக்கு சேர்வதிலும் ஆர்வமாக உள்ளனர்.
தற்போது பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு 17-ம் தேதியும், 10-வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 25-ம் தேதியும் வெளியாகிறது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வரும் 17-ம் தேதி காலை 10:31 முதல் 11 மணிக்குள் வெளியிடப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வரும் 25-ம் தேதி வெளியாகிறது. காலை 9:31 முதல் 10 மணிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தேர்வு முடிவுகள் www.tnresluts.nic.in., www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியாகிறது www.dge2.tn.nic.in என்ற இணைய தளத்திலும் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையத்திலும் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,