Sunday, 1 May 2016

பிளஸ் 2 முடிவு மே 5-ல் வெளியாகிறது?

பிளஸ் முடிவு மே 5-ல் வெளியாகிறது?
 8.72 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி (வியாழக்கிழமை) வெளி யிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ல் ஆரம்பித்து ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது.
மாணவர்களின் மதிப்பெண்கள் பார்கோடு மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியலை தொகுக்கும் பணி சென்னை கிண்டி யில் உள்ள அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் மேற்கொள்ளப் பட்டன. கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறும் சூழலில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியி டப்படலாம் என்றும், தேர்தல் கார ணமாக சற்று தாமதமாகக்கூடும் என்றும் பல்வேறு ஊகங்கள் எழுந்தன. மே 6 அல்லது 9-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியானவண்ணம் இருந்தன. இதன் காரணமாக தேர் வெழுதிய மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மத்தியில் தேர்வு முடிவு தேதி குறித்த ஆர்வம் மேலும் அதிக ரித்தது. தேர்தல் நடத்தை விதிமுறை கள் தற்போது அமலில் இருந்து வருவதால் பிளஸ் 2 தேர்வு முடிவு களை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை மற்றும் தேர்வுத்துறை உயர் அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை தேர்தல் அதிகாரியுடன் கலந்தாலோசித்தனர். பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கமான நிகழ்வு என்பதால் தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியது. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 5-ம் தேதி (வியாழக் கிழமை) வெளியிட அரசு தேர்வுத் துறை முடிவு செய்துள்ளதாக தெரி கிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளி யிடப்படும். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவு 5-ம் தேதி வெளியிடப்படுவதால் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் பதிவு செய்ய மே 12 கடைசி நாளாக இருக்கும் என கூறப்படுகிறது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,