Monday, 9 May 2016

ஜூன் 2016 தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு அறிவிப்பு | 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு 09.05.2016 முதல் 14.05.2016 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

ஜூன் 2016 தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு அறிவிப்பு | 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு 09.05.2016 முதல் 14.05.2016 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் நிளிளிநிலிணி -ல் சென்று 218.248.44.57/ என்பதை ‘கிளிக்’ செய்து விண்ணப்பத்தையும் பக்கம் 1 முதல் 4 வரையுள்ள அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு, தேர்வரின் தகுதி மற்றும் அறிவுரைகளை பின்பற்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலினை கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சென்று சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கணினி புகைப்பட கருவிகள் (வெப் கேமரா) மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துகொண்ட பின்னர் அங்கேயே தேர்வு கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியற்ற தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்படும் எனில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தேர்வு அனுமதி ரத்து செய்யப்படும். தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

No comments: