Monday, 2 May 2016

மருத்துவ படிப்பு தமிழகத்தில் 26 ஆயிரம் பேர் நுழைவுத்தேர்வு எழுதினர்

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கு முதல் கட்டமாக நடந்த நுழைவுத் தேர்வை 25 ஆயிரத்து 512 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.மருத்துவ நுழைவுத்தேர்வுதமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களில், 15 சதவீத இடங்களுக்கு அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய கல்வி வாரியம் நுழைவுத்தேர்வை வருடந்தோறும் நடத்தி வருகிறது. மீதம் உள்ள 85 சதவீத இடங்களுக்கு தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு எதுவும் நடத்தாமல் மாணவர்கள் பிளஸ்-2 அல்லது 12-வது வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பில் சேர்க்கப்பட்டு வந்தனர்.
இந்த வருடம் அப்படி அல்லாது அரசு கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்களுக்கும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு உண்டு என்றும் இந்த உத்தரவு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 26 ஆயிரம் பேர் எழுதினர்ஏற்கனவே 15 சதவீத இடஒதுக்கீட்டுக்காக மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மே 1-ந்தேதியும், இனிமேல் விண்ணப்பிக்க உள்ள மாணவர்களுக்கு ஜூலை 24-ந்தேதியும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது. அதன்படி நேற்று நாடு முழுவதும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதற்காக 1040 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 6 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தில் இருந்து 25 ஆயிரத்து 512 பேர் தேர்வு எழுதினார்கள்.தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் சென்னையில் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தன. அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி, பல்லவன் சாலையில் உள்ள கேந்திரவித்யாலயா, கோபாலபுரம் டி.ஏ.வி.பள்ளி உள்பட 36 மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.சோதனை தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை தேர்வு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை போட்டனர். காதுகளில் ஏதாவது வைத்திருக்கிறார்களா? என்று கூட டார்ச் லைட் அடித்து பார்த்தனர். செல்போன், கைக்கடிகாரம் ஆகிய எதுவும் கொண்டு செல்லக்கூடாது. எனவே, பெற்றோருடன் வந்திருந்த மாணவர்கள் தாங்கள் வைத்திருந்த செல்போன், கைக்கடிகாரம் ஆகியவற்றை பெற்றோரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றனர். அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் தேர்வு எழுத ஒரு மாணவி அவசர, அவசரமாக வந்தார். அவர் தனியாக வந்தார். எனவே அவரிடம் சோதனை போட்டபோது அவர் கையில் உள்ள கைக்கடிகாரத்தை போலீசாரிடம் கழற்றி கொடுத்து விட்டு நான் தேர்வு எழுதிவிட்டு போலீஸ் நிலையம் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றார். தேர்வு பகல் 1 மணிக்கு முடிந்தது. மாணவர்கள் கருத்துதேர்வு எழுதி விட்டு வெளியே வந்த அதியன் என்ற மாணவர் கூறியதாவது:-நான் திருப்பூரில் இருந்து பெற்றோருடன் வந்து தேர்வு எழுதினேன். மொத்தம் 180 கேள்விகள். பதில் அளிப்பது ‘ஆப்ஜெக்டிவ்’ முறையாகும். (ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கு ஒரு சரியான பதில் உள்பட 4 பதில் இருக்கும்) தவறாக பதில் அளித்தால் மதிப்பெண் குறைக்கப்படும். தாவரவியலில் இருந்து 45 கேள்விகளும், விலங்கியலில் இருந்து 45 கேள்விகளும், இயற்பியலில் இருந்து 45 கேள்விகளும், வேதியியலில் இருந்து 45 கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்தன. இதில் தாவரவியியல், விலங்கியல் ஆகியவற்றில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தன. வேதியியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன. இயற்பியலில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. நான் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வைத் தான் நம்பி இருந்தேன். நான் நுழைவுத்தேர்வுக்காக ஒரு பயிற்சி மையத்தில் படித்தேன். அதனால் நான் தேர்வை ஓரளவுக்கு நன்றாக எழுதி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.கேள்விகள் கடினம்தாம்பரம் சேலையூர் அருகே உள்ள சியான் மெட்ரிகுலேசன் மாணவி ரோஷினி கூறுகையில், நான் நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்றுள்ளேன். கேள்விகள் சற்று கடினமாகத்தான் இருந்தன என்றார். நந்தினி என்ற மாணவி கூறுகையில்; நான் சீர்காழி அருகே திருமயிலாடியை சேர்ந்த விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்தேன். கேள்விகள் கடினமாகத்தான் இருந்தன என்றார். சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளியில் மாநில வாரிய கல்விமுறையில் படித்தேன். நுழைவுத்தேர்வு கடினமாகத்தான் இருந்தது என்று ஹரிணி என்ற மாணவி கூறினார். கண்ணன் என்ற மாணவர் கூறுகையில்; நான் திருச்சியில் இருந்து வருகிறேன். நான் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்தேன். நுழைவுத் தேர்வுக்காக கடந்த 4 வருடங்களாக பயிற்சி பெற்றேன். 12-வது வகுப்பு சி.பி.எஸ்.இ. பாடத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதனால் எனக்கு தேர்வு எளிதாக இருந்தது. எப்படியும் தேர்ச்சி பெறுவேன். அதிக மதிப்பெண் கிடைக்கும். பெற்றோர்கள் பெற்றோர்கள் கூறியதாவது:- மருத்துவ நுழைவுத்தேர்வு மையங்களை சென்னையில் மட்டும் அமைத்தால் போதாது. திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் அமைக்கப்படவேண்டும். நிறைய மாணவர்கள் திருச்சி, திருப்பூர், கோவை, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். வழக்கமாக சி.பி.எஸ்.இ. பாடத்தின் அடிப்படையில்தான் நுழைவுத்தேர்வு அமைந்திருக்கும். மாநில வாரிய கல்வி முறையில் படித்தவர்களில் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்ற சிலர்தான் இந்த தேர்வில் தேர்ச்சி பெற முடியும். எனவே இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வரவேண்டும். கல்வித்தரம் மாநில கல்வி வாரியத்தில் படித்த மாணவர்கள் இந்த நுழைவு தேர்வில் வெற்றி பெறுவது சிரமம். எனவே தமிழக கல்வி வாரிய அடிப்படையில் நுழைவுத்தேர்வு நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாநில கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையாக மாநில கல்வி பாடத்திட்டமும் இருக்க வேண்டும். மேலும் 15 சதவீத இடங்களை நிரப்ப ஏராளமான மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களில் பலர் மாநில அரசின் மருத்துவ கலந்தாய்வை நம்பித்தான் உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.