Sunday, 1 May 2016

பிஎப் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக அதிகரிப்பு

பிஎப் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக அதிகரிப்பு
தொழிற்சங்கங்களின் நெருக்குதல் காரணமாக வருங்கால வைப்பு நிதியின் (பிஎப்) வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.முன்பு 8.7 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்ட வட்டி விகிதத்தை இப்போது 8.8 சதவீதமாக உயர்த்த நிதி அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.
வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வதில் நிதி அமைச்சகத்துக்கும் தொழிலாளர் துறை அமைச்ச கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.அதனால் பிஎப் அமைப்பு நிர்ணயம் செய்ததைவிட 0.10 சதவீதம் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டது.  இதற்கு பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக நிதி அமைச்சகம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தொழிலாளர் துறை அமைச்சகம் கேட்டிருந்தது. அதனை தொடர்ந்து வட்டியை உயர்த்த நிதி அமைச்சகம் ஒப்புக் கொண்டிருக்கிறது.  

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,