Tuesday, 3 May 2016

அரசின் காலி பணியிடங்களை 'ஆன்லைனில்' நியமனம் செய்ய மத்திய அரசு திட்டம்

அரசின் காலி பணியிடங்களை 'ஆன்லைனில்' நியமனம் செய்ய மத்திய அரசு திட்டம்
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களை, 'ஆன்லைன்' மூலம் நியமனம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அரசு பணிகளில் ஏற்படும் காலதாமதம், பண விரயம் மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும், ஊழலை ஒழிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் முடிவு செய்யப்பட்டது.
இது குறித்த ஆய்வுகள் மற்றும் வழிமுறைகளை கண்டறிய, மத்திய அரசின் அனைத்து துறை செயலர்கள் மற்றும் மாநில தலைமை செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.அதில், மத்திய அரசின் பயிற்சி துறை செயலர் சஞ்சய் கோத்தாரி மற்றும் வெளியுறவு துறை செயலர் ஜெயசங்கர் உள்ளிட்ட 12 பேர் உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர். சமீபத்தில் இந்த குழு தன் பரிந்துரையை மத்திய அரசிடம் அளித்தது. அதில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது முதல், பணி நியமனம் வரை அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைனிலேயே மேற்கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளது.இது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,