Sunday, 1 May 2016

சீனாவால் இந்தியாவில் வேலைவாய்ப்பு உயரும் !

சீனாவால் இந்தியாவில் வேலைவாய்ப்பு உயரும் !
சீனாவில், ஊதிய விகிதம் உயர்ந்து வரு­வதன் எதி­ரொ­லி­யாக, இந்­திய ஆயத்த ஆடைகள் துறையில், லட்­சக்­க­ணக்கில் வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும்' என, உலக வங்­கியின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்:சீனாவில், ஊதிய விகிதம் அதி­க­ரித்து வரு­வதால், ஆயத்த
ஆடைகள் தயா­ரிப்பு செலவு உயர்ந்­துள்­ளது. இது, இளம் வயது தொழி­லா­ளர்கள் அதிகம் உள்ள இந்­தி­யா­விற்கு, குறிப்­பி­டத்­தக்க வேலை­வாய்ப்­பு­களை வழங்கும். இந்­தி­யாவின் ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி அதி­க­ரிக்கும். சீன ஆயத்த ஆடை­களின் விலை, 10 சத­வீதம் உயர்ந்தால் கூட, இந்­திய ஆயத்த ஆடைகள் துறையில், 12 லட்­சத்­திற்கும் அதி­க­மானோர் வேலை­வாய்ப்பு பெறுவர். குறிப்­பாக, இத்­து­றையில் பெண்கள் அதி­க­மாக உள்­ளதால், அவர்கள் அதிக அளவில் பய­ன­டைவர்.

சீனாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழி­லா­ளர்­களின் ஊதியம், 1 சத­வீதம் உயர்ந்தால் கூட, இந்­திய ஆயத்த ஆடைகள் துறையில், பெண் தொழி­லா­ளர்­களின் பங்கு, 18.9 சத­வீதம் உயரும். இந்த வாய்ப்பை, இந்­திய அரசு பயன்­ப­டுத்திக் கொண்டு, ஆயத்த ஆடை தயா­ரிப்­பிற்­கான செயற்கை நுாலிழை இறக்­கு­ம­திக்கு உள்ள கட்­டுப்­பா­டு­களை தளர்த்த வேண்டும். அத்­துடன், உள்­நாட்டு செயற்கை நுாலிழை தயா­ரிப்பு துறையை ஊக்­கு­விக்கும் வகையில், உற்­பத்தி வரி குறைப்பு அல்­லது பிற சலு­கை­களை வழங்க வேண்டும். இதன் மூலம், செயற்கை நுாலி­ழையில் தயா­ராகும் ஆயத்த ஆடை­களின் உற்­பத்தி செலவு குறையும்; ஏற்­று­மதி அதி­க­ரிக்கும். ஆயத்த ஆடைகள் விலை உயர்வால், சீனா இழக்கும் சர்­வ­தேச வாடிக்­கை­யா­ளர்­களை, இந்­தி­யாவால் ஈர்க்க முடியும்.
ஆயத்த ஆடைகள் ஏற்­று­ம­தியில், சீனா முத­லி­டத்தில் உள்­ளது. இருந்­த­போ­திலும், அதன் ஏற்­று­மதி குறைந்து வரு­கி­றது. கடந்த, 1990ல், சீனாவின் ஏற்­று­ம­தியில், 15.6 சத­வீ­த­மாக இருந்த ஆயத்த ஆடைகள் பிரிவு, 2012ல், 7.1 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­துள்­ளது. இது, தென் கிழக்கு ஆசிய நாடு­க­ளுக்கு, வள­மான ஏற்­று­மதி வாய்ப்பை வழங்­கி­யுள்­ளது.
இந்­தியா துரி­த­மாக செயல்­பட்டு, செயற்கை நுாலி­ழையை சுல­ப­மாக இறக்­கு­மதி செய்­வது, வரி­களை குறைப்­பது உள்­ளிட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள வேண்டும். இதன் மூலம், அதிக அளவில் ஆயத்த ஆடைகள் துறையில், அன்­னிய முத­லீடு குவியும் என்­ப­துடன், சீனா­வுடன் போட்­டி­யிடும் வகையில், காலணி, பொம்மை போன்ற இதர தயா­ரிப்பு துறை­களும் வளர்ச்சி காணும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
சீனாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழி­லா­ளர்­களின் ஊதியம், 1 சத­வீதம் உயர்ந்தால் கூட, இந்­திய ஆயத்த ஆடைகள் துறையில், பெண் தொழி­லா­ளர்­களின் பங்கு, 18.9 சத­வீதம் உயரும்.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,