Saturday, 7 May 2016

New India Insurance பயனுள்ளதா ? ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு ?

New India Insurance பயனுள்ளதா ? ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு ?
இழப்பே அறியாமல் நாம் பொழப்பு நடத்தியதை நினைத்து வருந்துகிறேன்...
Star health insurance-ஐ ஒழித்து New health insurance திட்டத்தை கொண்டு வந்தார்.(M.D. India insurance) HF மாதம் 75 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை , மாதம் 150 ஆக உயர்த்தினார்..
ஆனால்,(எனது அனுபவத்தில்) மருத்துவ சிகிச்சைக்கான claim star health insurance-ஐ விட new health insurance திட்டத்தில் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது..
அதுமட்டுமின்றி star health insurance-ல் இருந்த சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளன..
2013-ல் இறகுப்பந்து விளையாடும் பொழுது எனது right leg knee ligament tear ஆனது.
DEEO அலுவலகத்திற்கு ஒரு வேலையாக நண்பரை சந்திக்கச் சென்றிருந்தேன் அப்பொழுது எனது காலில் ஏற்பட்ட விபத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கையில் மற்றொரு அலுவலக ஊழியர் தனக்கும் இடது காலில் அதே விபத்து ஏற்பட்டதாகவும், 2010-ல் கோவை கங்கா மருத்துவமனையில் star health insurance claim-ல் arthroscopic operation செய்தேன். Operation-க்கு 2000 ரூபாய் மட்டுமே செலவுசெய்தேன் என்று கூறினார்..
அதுமட்டுமன்றி எனது நண்பர்களின் அறிவுரையின் பெயரில், கடந்த ஏப்ரல் 18-ல் கோயமுத்தூர் கங்கா மருத்துவமனையில் new health insurance (MD India) claim-ல் arthroscopic operation செய்தேன்..
Bill- 75,000 கொடுத்தனர் (உணவு, மருந்து & பிசியோ தெரபி bill தவிர) Operation முடிந்த பிறகு உங்களது insurance claim அனுப்பியிருந்தோம் reject ஆகிவிட்டது இந்த சிகிச்சைக்கு claim கிடையாதாம் என்றனர்..
 நான் opperation செய்ய முடிவு செய்வதற்கு முன் new health insurance-ல் claim உண்டா என்பதையெல்லாம் விசாரித்து, உண்டு என்று மருத்துவமனையில் ஒப்புதல் அளித்த பிறகே சிகிச்சைக்கான appointment பெற்று ஏப்ரல் 18-ல் operation செய்தேன்..
பிறகு எப்படி claim இல்லை என்று கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு insurance company-ன் help line number-ஐ கொடுத்து நீங்களே பேசிப்பாருங்கள் என்றனர்..
நான் உடனே இணையதளத்தில் எந்தெந்த சிகிச்சைக்காக claim செய்யலாம் என்ற பட்டியலை அந்த இன்சூரன்ஸ் கம்பெனயின் இணையதள பக்கத்தில் சென்று பார்த்தேன்..
பார்த்ததில் ஓர் அதிர்ச்சி அந்த பட்டியலில் arthroscopic operation for ligament repair works என்று இருந்தது மீண்டும் மருத்துவரிடம் supporting document & letter பெற்று மீண்டும் claim செய்தோம்..
மனைவியின் நீண்ட போராட்டம் மற்றும் மன உளைச்சலுக்குப் பிறகு ஒருவழியாக ரூ.44,000 claim கிடைத்தது.
எனக்கு மருத்துவமனை செலவு மட்டும் 95,000-ஐ தாண்டியது..
பல bill insurance claim-ல் எடுத்துக்துக்கொள்ளப்படவில்லை..
மருத்துவமனை ஊழியர்கள் சொன்ன ஒரே பதில் star health insurance-ல் மட்டுமே அதற்கு claim உண்டு என்று..
அப்போ  நினைச்சேன் அம்மா சொல்லாத பலவற்றை செய்துள்ளார் ( அது இவ்ளோ நாள் நமக்கு மட்டுமல்ல நம் இயக்கவாதிகளுக்குக் கூட தெரியவில்லை என்று ) அதே சிகிச்சைக்கு அதே மருத்துவமனையில் அரசு ஊழியர் ஒருவர் star health insurance-ல்  2000 ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளார்..
ஆனால் நானோ மக்களின் முதல்வர் அம்மாவின் new health insurance திட்டத்தில் கூடுதலாக 45,000 ரூபாய் செலவு செய்துள்ளேன்.
எனது WhatsApp மற்றும் Facebook-ல் இந்த பதிவினை பதிவு செய்தவுடன் New health insurance தொடர்பாக அடுக்கடுக்காக புகார்கள் வரத்தெடங்கியுள்ளன.அதில் சிலவற்றை கீழே புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளேன்..
2015 december-ல் அதே சிகிச்சைக்கு (ACL- arthroscopic ligament tear) நண்பர் பிரகாஷ் அவர்களுக்கு ரூ.55,000 claim செய்துள்ளனர். இது எப்படி சாத்தியம்....????
ஒரே சிகிச்சைக்கு ஒருவருக்கு ரூ.44,000-ம் மற்றொருவருக்கு ரூ.55,000-ம் எப்படி வழங்கமுடியும்..??
மருத்துவக் காப்பீட்டுத் தொகையினை அனைவரும் இப்படி போராடிப் பெற்றுவிடமுடியுமா..??
ஆபத்தில் உள்ளவரின் மனநிலை அய்யகோ...??
நண்பர் Malai parama அவர்களின் அறுவை சிகிச்சைக்கு Star health insirance-ல் ரூ.1,65,000 வழங்கியுள்ளனர்,ஆனால், தற்பொழுது அதே அறுவை சிகிச்சைக்கு new health insurance-ல் 40,000 மட்டும் தான் வழங்கப்படுகிறதாம்..
இதுவரை முன்வாசல் வழியாக நமது உரிமைகளை பறித்த ஆட்சியாளர்கள், தற்பொழுது பின் வாசல் வழியாகவும் நமது உரிமைகளை பறிக்க ஆரம்பித்துவிட்டனர்..
கொடுப்பதோ 100, ஆனால்,பிடிப்பதோ 150...???
முன்னாடிலாம் எதை பறிக்கிறோம்னு சொல்லிட்டு பறிப்பாங்க- அதனால் இழப்பு தெரிஞ்சது..
ஆனா இப்போ,கூடுதலா கொடுக்குற மாதிரி
இருப்பதை பறிச்சிடுறாங்க அதனால  இழப்ப கண்டுபிடிக்க ஐந்து வருடம் ஆகிடுது..
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைக்க..
 விரைவில் இயக்க பாகுபாடுகள் இன்றி வட்டார, மாவட்ட அமைப்பின் மூலம் மாநில அமைப்பிற்கு அழுத்தம் கொடுப்போம் என்று கூறி என் அனுபவத்தை முடித்துக்கொள்கிறேன்.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,