Saturday, 11 June 2016

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு: ‘தட்கல்’ திட்டத்தில் 13, 14 தேதிகளில் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு: ‘தட்கல்’ திட்டத்தில் 13, 14 தேதிகளில் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு இந்த மாதமும், அடுத்த மாதமும் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை பள்ளி மாணவராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ எழுதியிருக்க வேண்டும். தேர்ச்சி பெறாத மற்றும் வருகைபுரியாத மாணவ-மாணவிகள் அனைத்து பாடங்களையும் உடனடி தேர்வில் எழுத விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேர்வு கட்டணத்தை பணமாக செலுத்தி 13, 14-ந் தேதிகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


No comments:

TRB