Wednesday, 22 June 2016

பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடக்கம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடக்கம்
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடங்குகின்றன. ஏப்ரல், மே மாத கோடை விடுமுறை முடிந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கடந்த ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட்டன. பெரும்பாலான தனியார் சுயநிதி பள்ளிகள் ஜுன் 6-ம் தேதி முதல் இயங்கத் தொடங்கின. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 23-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
கல்வி இயக்குநர் அறிவிப்பு அதன்படி, தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை (வியாழக்கிழமை) வகுப்புகள் தொடங்குகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். இதனால் 5 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவ - மாணவிகள் பயன் பெறுவர் என்று பள்ளிக் கல்வி இயக் குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித் தார். தனியார் பள்ளிகளை பொறுத்த வரையில் பள்ளி நிர்வாகத்தினர் மொத்தமாக ஆர்டர் செய்து தங்க ளுக்குத் தேவையான புத்தகங் களை பெற தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பெற்றோர்கள் கோரிக்கை மேலும், சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பாடநூல் கழக விற்பனைப் பிரிவிலும் பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. நேற்று ஏராள மான பெற்றோர்கள் பாடநூல் கழக விற்பனைப் பிரிவில் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்கள் பிள்ளைகளுக்கு பாடப் புத்தகங் கள் வாங்கினர். அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனை கடைகளில் இன்னும் பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு வராததால் டிபிஐ வளாகத்தில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அங்கு கூடுதல் விற்பனைப் பிரிவு கள் அமைத்து பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் வெளியே கடைகளில் புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மொத்தமாக ஆர்டர் செய்து புத்தகங்களை பெற தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.


No comments: