Wednesday, 22 June 2016

இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட்ஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்படுகிறது.

20 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட் இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை
இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட்ஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட் இன்று காலை 9.26 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 48 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 9.26 மணிக்கு தொடங்கியது.
20 செயற்கைக் கோள்களில் சத்தியபாமா பல்கலைக்கழகம், புனே பொறியியல் கல்லூரி, இஸ்ரோவின் கார்ட்டோசாட்-2 ஆகிய 3 செயற்கைக் கோள்கள் இந்தியாவை சேர்ந்தவை. மற்ற 17 செயற்கைக் கோள்களும் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவை. 20 செயற்கைக் கோள் களின் மொத்த எடை 1,288 கிலோ ஆகும். கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் பூமியை படமெடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும். இதன் எடை 727.5 கிலோ. பூமியில் இருந்து 505 கி.மீ. தொலைவில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும். ‘சத்தியபாமாசாட்’ செயற்கைக் கோள், சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்ததாகும். இது 1.5 கிலோ எடை கொண்டது. பசுமை இல்ல வாயுக்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இது அனுப்பப்படுகிறது. புனே பொறியியல் கல்லூரி தயாரித்துள்ள ‘ஸ்வயம்’ செயற்கைக் கோள் 1 கிலோ எடை கொண்டது. இதற்கு முன்னதாக, 2008-ம் ஆண்டு ஒரே ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 10 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்தது. தற்போது முதல்முறையாக ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


No comments:

TRB