Sunday, 5 June 2016

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை வருகிற 24-ந் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

1 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு 24-ந் தேதி தொடங்குகிறது அண்ணா பல்கலைக்கழகம் முடிவு
என்ஜினீயரிங் படிப்புக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை 24-ந் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 538 என்ஜினீயரிங் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் 2 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த இடங்களுக் கான மாணவர் சேர்க்கை ஆண்டு தோறும் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஜூன் 30-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் வரை 2 லட்சத்து 53 ஆயிரத்து 113 மாணவ-மாணவிகள் ஆன்-லைனில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அவர்களில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 839 பேர் பணம் கட்டி உள்ளனர். அவ்வாறு ஆன்-லைனில் பதிவு செய்தவர்கள், அந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் செயலாளர், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப நேற்று கடைசி நாள் ஆகும். அதன்படி, நேற்று மாலை வரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரம் ஆகும். கடந்த ஆண்டு பெறப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 ஆகும். எனவே, இந்த ஆண்டு பெறப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை விட 21 ஆயிரத்து 238 எண்ணிக்கை குறைவாகும். கடந்த ஆண்டு 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும் 2 லட்சம் இடங்களுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. 80 ஆயிரம் இடங்கள் காலியாக கிடந்தன. ஆகையால், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 33 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளதால், மாணவர்களின் சேர்க்கை கணிசமான அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜினீயரிங் படிப்பு முடித்துவிட்டு வேலை வாய்ப்பு குறைவாக உள்ளதால், தற்போது மாணவ-மாணவிகள் கலை-அறிவியல் துறையை தேர்ந்து எடுப்பதுவே மாணவர்கள் சேர்க்கை குறைவுக்கான காரணம் ஆகும். இந்த ஆண்டை பொறுத்தவரையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மட்டுமே முழுமையாக நிரம்பும் என்றும், மற்ற கல்லூரிகளில் சாதாரண முறையில் எளிமையாக என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான இடங்களை பெறலாம் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதன் அடுத்த கட்ட நடவடிக்கையான, என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை வருகிற 24-ந் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி 24-ந் தேதி விளையாட்டுக்கான இடஒதுக்கீடும், 26-ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடும், 27-ந் தேதி முதல் வழக்கமான மாணவ-மாணவிகளுக்கான சேர்க்கையும் நடைபெறும் என்றும் தெரிய வந்துள்ளது.


No comments: