Tuesday, 14 June 2016

போதிய மாணவர்கள் சேராததால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. இந்த வருடம் பயிற்சி பள்ளியில் சேருவதற்காக விண்ணப்பிக்க 17-ந்தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

போதிய மாணவர்கள் இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலை இந்த வருடம் படிப்புக்கு விண்ணப்பிக்க 17-ந்தேதி கடைசி நாள்
போதிய மாணவர்கள் சேராததால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. இந்த வருடம் பயிற்சி பள்ளியில் சேருவதற்காக விண்ணப்பிக்க 17-ந்தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் உயர்கல்வியில் சேருவது வழக்கம். சில மாணவர்கள் ஆசிரியர் பணிக்காக இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேருவார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் வேலை வழங்கப்பட்டது. இதனால் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர கடும் போட்டி ஏற்பட்டது. சிலர் வெளிமாநிலங்களில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களாக அந்த நிலை மாறிவிட்டது. தகுதி தேர்வு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதித் தான் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆசிரியர்களாக வரவேண்டும் என்று மத்திய அரசும், மாநில அரசும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் பல மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாததால் அந்த நிறுவனத்தை நடத்த முடியாமல் மூடும் நிலை உள்ளது. புதிதாக 3 மாவட்டஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அரசு சார்பில் தமிழ்நாட்டில் 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஏற்கனவே உள்ளன. தற்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி மேலும் 3 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் வந்து உள்ளன. அந்த நிறுவனங்களில் இந்த வருடம் முதல் முதலாக மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. அரசு மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்தால் அவர்களுக்கு கல்விக் கட்டணம் மிகக்குறைவு. எனவே புதிய நிறுவனங்களை மாணவர்கள் வரவேற்கும் நிலை உள்ளது. அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 38 இருக்கின்றன. சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 320 உள்ளன. மொத்தம் 13 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. 17-ந் தேதிவரை நீட்டிப்பு இந்த வருடம் இதுவரை 3 ஆயிரத்து 510 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட உயர்வு. 17-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது.


No comments:

TRB