Wednesday, 22 June 2016

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொண்டு வர வல்லுனர் குழு ஆய்வு சட்டசபையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொண்டு வர வல்லுனர் குழு ஆய்வு சட்டசபையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ., ஐ.பெரியசாமி(ஆத்தூர் தொகுதி) பேசும்போது, ‘அரசு ஊழியர்களுக்கு பழைய முறையில் பென்சன்(ஓய்வூதியம்) திட்டம் கொண்டு வர வேண்டும்.’ என்றார். இதற்கு பதிலளித்து அவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியம் 1.4.2003-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 4 லட்சத்து 41 பேர் 229 பணியாளர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற, இறந்த மற்றும் பணி துறப்பு செய்தவர்களுக்கு அவர்களுடைய பங்களிப்பினை, மாநில அரசு பங்களிப்பு மற்றும் அதற்கான வட்டியுடன் திரும்பி அளித்திட்ட நிதி துறையால் 22.2.2016 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டபேரவையில் 110 விதியின் கீழ் 19.2.2016 அன்று, பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இக்கோரிக்கை குறித்து விரிவாக பரிசீலிக்கப்படும். வல்லுனர் குழு அமைத்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றார். மேற்படி, பழைய ஓய்வூதியம் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு ஒரு வல்லுனர் குழுவை 26.2.2016 அன்று அமைக்கப்பட்டு அந்த குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.


No comments:

TRB