Wednesday, 8 June 2016

நீங்கள் ஆசிரியரா...அப்படின்னா உங்களுக்கு அண்ணா பல்கலை.யில் வேலை...!!

நீங்கள் ஆசிரியரா...அப்படின்னா உங்களுக்கு அண்ணா பல்கலை.யில் வேலை...!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.ஆனால் இந்தப் பணியிடங்கள் தற்காலிகப் பணியிடங்கள் மட்டுமே.6 மாத காலத்துக்கு இங்கு பணியாற்றலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இயற்பியல் பிரிவுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இந்தப் பணிக்கு விணணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் இயற்பியலில் பிஎச்.டி. முடிதிருக்கவேண்டும். சம்பளம் மாதத்துக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும். எழுத்துத் தேர்வு மூலம் இந்தப் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை ஜூன் 10-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தைக் காணலாம்.


No comments: